26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
05 1512468632 8 steaminhalati
மருத்துவ குறிப்பு

உங்க உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில அற்புத வழிகள்!சூப்பர் டிப்ஸ்

தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சளி, இருமலால் அவஸ்தைப்படுவார்கள். சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம். இந்த சளியைப் போக்க நாம் கடைகளில் விற்கப்படும் டானிக்கை வாங்கிக் குடிப்போம். அப்படி குடிக்கும் போது, சளியில் இருந்து நிவாரணம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால் அது தற்காலிக நிவாரணி தான்ஒவ்வொருவரும் நம் உடலில் சளியை தேக்கிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம். இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். இக்கட்டுரையில் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன

மஞ்சள் மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் தான், அதன் மருத்துவ குணத்திற்கு காரணம். இது பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் இதை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, உடலினுள் உள்ள தொற்றுக்களை சரிசெய்து மற்றும் தொண்டை புண்ணை போக்கும். கீழே சளியை வெளியேற்ற மஞ்சளை உட்கொள்ளும் முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: உடலில் இருந்து சளியை வெளியேற்ற உதவும் பானம் தயாரிக்கத் தேவையான பொருட்களாவன, 1 டீஸ்பூன் மஞ்சள், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர்

தயாரிக்கும் முறை: ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தினமும் 3-4 முறை குடிக்க, சளி உருகி, தொண்டையில் கபம் தேங்குவது குறையும்.

இஞ்சி இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தாக்குதலை தடுக்கும் ஆன்டி-ஹிஸ்டமைன் ஏஜெண்ட்டும், சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன. அதோடு இஞ்சி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றும். அதற்கு இஞ்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பானம் போன்று தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்: சளியை வெளியேற்றும் இஞ்சி பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களாவன, * இஞ்சி – 6-7 துண்டுகள் * மிளகு – 1 டீஸ்பூன் * தேன் – 1 டீஸ்பூன் * தண்ணீர் – 2 கப்
தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்தால் பானம் தயார். இதை சளி பிடித்திருக்கும் போது, தினமும் குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர், உடலில் உள்ள pH அளவை சீராக்குவதோடு, அதிகப்படியான சளி உற்பத்தியைத் தடுக்கும். அதற்கு 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும்.

ஆவி பிடிப்பது நல்ல சுடுநீரில் ஆவி பிடிப்பதால், சளி மற்றும் கபம் தளர்ந்து, சுவாசக் குழாய் சுத்தமாகி சுவாச பிரச்சனைகள் நீங்கி, நிம்மதியாக சுவாசிக்கலாம். முக்கியமாக ஆவி பிடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: ஆவிப் பிடிப்பதற்கு வெறும் சுடுநீர் மட்டுமின்றி, அத்துடன் சிறிது மூலிகைகளையும் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். * தைம் – 1/2 டீஸ்பூன் * உலர்ந்த ரோஸ்மேரி – 1/2 டீஸ்பூன் * சுடுநீர் – 4-5 கப்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதில் மூலிகைகளைப் போட்டு, பின் அந்நீரால் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி தினமும் 3-4 முறை செய்தால், சளி சீக்கிரம் வெளியேறிவிடும்.

தேன் மற்றும் எலுமிச்சை சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேன் சுவாச பாதையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். அதே சமயம் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தடையில் சுவாசிக்க உதவும்.

தேவையான பொருட்கள்: சளி மற்றும் கபத்தை வெளியேற்ற எலுமிச்சை மற்றும் தேனைக் கொண்டு அற்புத பானம் தயாரித்து பருக வேண்டும். அந்த பானம் தயாரிக்கத் தேவையான பொருட்களாவன, * தேன் – 1 டேபிள் ஸ்பூன் * எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்செய்முறை: ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, தினமும் மூன்று வேளைப் பருக சளி மற்றும் கபம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்05 1512468632 8 steaminhalati

Related posts

தெரிஞ்சிக்கங்க… ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய 7 அதிமுக்கிய திறமைகள்!!!

nathan

இதை முயன்று பாருங்கள்…உங்க விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறுவதற்கான சில எளிய டிப்ஸ்…

nathan

பொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்!!!

nathan

இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!! மூட்டு வலியை போக்கும் முத்தான 4 பயிற்சிகள்

nathan

படிக்கத் தவறாதீர்கள்…கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

nathan

பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?

nathan

தகவல் அறுவை சிகிச்சையின் வலி அதிகமாக? அறுவை சிகிச்சையின் வலி இந்தளவுக்குத் தாங்கமுடியாததா?

nathan