28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
03 1512315710 1 1
ஆரோக்கிய உணவு

உணவுக்குடல் புற்று நோயை தடுக்கும் அருமருந்து நெல்லிக்காய நீர்!!

நாம் பார்க்கும் 10ல் ஒருவருக்கு வயிற்றுப் பிரச்சனை இருக்கிறது. குடல் நோய்கள், அல்சர், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என நிறைய பேர் வயிற்று உபாதைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலோனோருக்கு மன அழுத்தம், வேலைப் பளு போன்றவற்றால் குடலில் உருவாகும் பாதிப்புகளால் இத்தகைய பிரச்சனைகள் உருவாகின்றன.

 அத்தோடு, அவசர கதியில் காலை நேரங்களில் சாப்பிடுவதாலும், துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இக்காலங்களில் உணவுக் குடல் புற்று நோய் பரவி வருகிறது. இதனை தடுக்கன் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்

இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் நெல்லிக்காய் பப்பாளி மற்றும் துளசியை பயன்படுத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்து புற்று நோய் வராமல் தடுக்க்கிறது. அதோடு, அல்சர், இதய நோய்கள், சிறு நீரக கற்கள் போன்ற முக்கிய நோய்கள் வராமலும் தடுக்கின்றது.

சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். புற்றுநோய்க்கு நெல்லிக்காய் மற்றும் துளசி அற்புத மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது நுண்கிருமிகளை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

நெல்லிக்காய் : நெல்லிக்காயை பயன்படுத்தி புற்றுநோயை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செய்முறை : ஒரு பெரிய நெல்லிக்காயின் சதை பகுதியை நீர்விடாமல் அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாரம் ஒருமுறை குடித்துவர உள் உறுப்புகள் பலப்படும்.

துளசி நீர் : துளசியை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒருபிடி அளவு வில்வ இலை, ஒருபிடி துளசி, சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி வாரம் ஒருமுறை இந்த தே நீரை குடித்துவந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.குழந்தைகள் 20 மில்லி அளவிலும், பெரியவர்கள் 50 முதல் 100 மில்லி அளவுக்கும் இந்த தேனீர் குடிக்கலாம்

பப்பாளி மருந்து : பல்வேறு நன்மைகளை கொண்ட பப்பாளி ஒரு அற்புதமான உணவாகிறது. சர்க்கரை நோய், கேன்சருக்கு மருந்தாகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் தன்மை கொண்டது. பப்பாளியை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். பப்பாளி விழுது ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்க்கவும். இதில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி வாரம் இருமுறை குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

நெல்லிக்காய் நீர் தரும் அற்புத நன்மைகள் : புற்றுநோய் வராமல் தடுக்கும் நெல்லிக்காய் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதுமையை தடுக்க கூடிய மருத்துவ குணங்களை கொண்டது. மஞ்சள் நோய் எதிர்ப்புசக்தி மிக்கது. நெல்லி, மஞ்சள் ஆகியவை செல்களுக்கு சத்துக்களை அளிக்கிறது.

இதய அடைப்பு : நெல்லிக்காய் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது, மேலும் இதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

ஆஸ்துமாவிற்கு : நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றுகிறது

மாதவிடாய் சமயத்தில் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம்.

சர்க்கரை நோயாளிக்கு : சர்க்கரை நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது அல்லது 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது. இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.

கொழுப்பு கரைய : தினமும் தேவையில்லை வாரம் ஒருமுறை இந்த நெல்லிக்காய் நீர் குடித்து வருபவர்களுக்கு டஹிசயத்தக்க வகையில் உடல் எடை குறைவதை காண்பீர்கள். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.

துளசி தரும் நன்மைகள் : நுரையீரல் புற்று நோயை தடுக்கும் : துளசி நீரை அல்லது துளசி தே நீரை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகின்றது. நாள் முழுவதும் சுவாசிக்கின்ற மாசுக்களால் உருவாகும் நச்சுக்கள் உங்கள் நுரையீரலைத்தன தஞ்சமடைகின்றன. அவற்றை போக்குவதில் துளை பெரும்பங்கு வகிக்கின்றது.

துர் நாற்றம் போக்கும் : ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தால், அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.

ரத்தம் சுத்தமாகும் : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறுநீரக கற்கள் : துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

நுரையீரல் சுத்தப்படுத்தும் : துளசி நீரை அல்லது துளசி தே நீரை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகின்றது. நாள் முழுவதும் சுவாசிக்கின்ற மாசுக்களால் உருவாகும் நச்சுக்கள் உங்கள் நுரையீரலைத்தன தஞ்சமடைகின்றன. அவற்றை போக்குவதில் துளசி பெரும்பங்கு வகிக்கின்றது.

தீமைகள் : அடிப்பட்டவர்கள் : அடிப்பட்டவர்கள் அல்லது ரத்தப் போக்கு பாதிப்பு இருப்பவர்கள் மாத்திரையிய எடுத்துக் கொள்ளும்போது துளசியை சாப்பிட வேண்டம. இது எதிர்வினியயை தந்துவிடும். ஏனென்றால் இது ரத்த உற்பத்தியிய அதிகரிக்கச் செய்வதல ரத்தப் போக்கு இன்னும் அதிகரிக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டாம் கர்ப்பிணி பெண்களுக்கு துளசி உகந்தது இல்லை. கர்ப்பிணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் குழந்தை பிறப்பில் சிக்கலும்,உண்டாகும். மகப்பேறு காலத்திற்கு பின்னாலும் பாதிப்புகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகமாம்.

பப்பாளியின் நன்மைகள் : கல்லீரல் வீக்கம் : கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக சரிசெய்யும். முறையான மாதவிலக்கு பப்பாளி உண்பது சரியான வழி. தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

செரிமானக் கோளாறுகளுக்கு : சில பேருக்கு அதிக ப்ரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பலத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்கவைக்கும்.மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, இந்தப் பழம் ஒரு அருமையான மருந்து.

தீமைகள் : அலர்ஜியை உண்டாக்கும் : பப்பாளியில் உள்ள பெப்பெய்ன் என்சைம் அதிகளவு நம் உடலுக்கு சென்றால், அது தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகள் : கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் பப்பாளிப் பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்பை உண்டாக்கிவிடும்.

03 1512315710 1 1

Related posts

சூப்பர் டிப்ஸ்! இரும்புச்சத்தை அதிகரிக்கும் அப்பத்தாக்களின் பலகாரம் கேழ்வரகு குலுக்கல்ரொட்டி..

nathan

உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

nathan

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பிரபல இந்திய உணவுப் பொருட்கள் – அதிர்ச்சி தகவல்!!!

nathan

ஐஸ்க்ரீம் சாப்பிட்டா பெண்களின் கருவளம் அதிகரிக்குமா? ஐஸ்க்ரீமின் நன்மைகள்!!

nathan

சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்..

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan

இந்த ஒரே ஒரு இலை நீரிழிவு நோயை நெருங்க கூட விடாது?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…வைரஸை எதிர்க்கும் அன்றாட உணவுப் பொருட்கள்

nathan

உடல் சோர்வு அதிகம் உள்ளதா? உணவை தவறாமல் சாப்பிடுங்க!

nathan