25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11 1512985655 7
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வாழைப்பழ தோலை கொதிக்க வைத்த நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா?அப்ப இத படிங்க!

வாழைப்பழம் பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களை உள்ளடக்கியது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஆனால் வாழைப்பழத்தை விட வாழைப்பழத்தின் தோலில் அதிக நன்மைகள் உள்ளன..

ஆனால் நாம் வாழைப்பழ தோலை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதே கிடையாது. இந்த வாழைப்பழ தோல் நமது சரும பிரச்சனைகள், காயங்கள், பூச்சிக்கடிகள் மற்றும் மன நோய் போன்ற இன்னும் பல பிரச்சனைகளை போக்க உதவுகிறது. இந்த பகுதியில் வாழைப்பழ தோலின் நன்மைகள் பற்றி காணலாம்.

பற்களை வெண்மையாக்க மற்றவர்கள் அசந்து போகும் அளவிற்கு வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் வாழைப்பழ தோலை பயன்படுத்துவது தான் சிறந்த வழியாகும். உங்களது பற்களில் வாழைப்பழ தோலை வைத்து தேய்ப்பதால் உங்களது பற்கள் வெண்மையாகும். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களது பற்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

வறண்ட சருமம் உங்களது சருமத்தில் வறண்ட பகுதிகள் இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தினமும் அல்லது வார இறுதி நாட்களில் செய்வதினால் வறண்ட சருமம் மறையும்.

மன அழுத்தம் உங்களுக்கு இது விசித்திரமானதாக இருக்கலாம். ஆனால் இது நிரூபிக்கப்பட்ட ஒரு முறையாகும். நீங்கள் வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் உங்களது மன அழுத்த பிரச்சனை தீரும். அல்லது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை பருகினாலும் மன அழுத்தம் தீரும்.

மருக்கள் மருக்கள் நமக்கு எத்தனை பாதிப்புகளை உண்டாக்க கூடியது என்பது நமக்கு தெரியும். நமது தோற்றத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டதாகும். மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இந்த வாழைப்பழமானது உங்களது மருவின் மீது ஒரு மாயம் செய்யும். இது மருக்கள் ஒரு இடத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவாமல் தடுக்கும்.

பூச்சி கடிகள் வாழைப்பழத்தில் உள்ள மருத்துவ தன்மையானது பூச்சிக்கடிகளுக்கு மருந்தாகிறது. உங்களை மூட்டை பூச்சிகள் போன்ற பூச்சிகள் கடித்துவிட்டால் அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும். இதற்கு வாழைப்பழத்தின் தோலை வைத்து அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் அந்த அரிப்பு, எரிச்சல் போன்றவை குணமாகும்.

தீக்காயங்கள் தீக்காயங்களுக்கு மருத்தாக நாம் எதை எதையோ தேடுவோம். ஆனால் இந்த வாழைப்பழ தோல் காயம் பட்ட இடங்களுக்கு குளிர்ச்சியை உண்டாகிறது. தீக்காயங்கள் பட்ட இடத்தில் வாழைப்பழ தோலை 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அல்லது இரவு முழுவதும் வைத்திருக்கலாம்.

கண்கள் குளிர்ச்சியாக கண்கள் குளிர்ச்சியடைய நாம் வெள்ளரி அல்லது தக்காளி போன்ற பழங்களை தான் பேசியல் செய்யும் போது வைத்திருப்போம். ஆனால் வாழைப்பழத்தோலும் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். இந்த வாழைப்பழத்தோலை கண்களின் மீது வைத்திருப்பதால் குளிர்ச்சி கிடைக்கிறது.

முகப்பருக்கள் முகப்பருக்களின் மீது மிருதுவாக வாழைப்பழத்தின் தோலை வைத்து தேய்பதால் உங்களது முகத்தில் உள்ள பருக்கள் அழியும். அதிகப்படியான எண்ணெய் பசையை இந்த வாழைப்பழ தோல் நீக்குகிறது.

வலி நிவாரணி வாழைப்பழ தோலை நேரடியாக வலி உள்ள இடங்களில் வைக்க வேண்டும். இதனை முப்பது நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். வலி குறைந்து விடும்.

சொரியாசிஸ் சொரியாசிஸால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழைப்பழ தோலை வைக்க வேண்டும். இதில் உள்ள ஈரபதமளிக்கும் தன்மையானது அரிப்புகளை சரி செய்யும். மேலும் சொரியாசிஸ் விரைவில் குணமாக இது உதவியாக இருக்கும்.

ஷூ மற்றும் சில்வர் ஷூக்கள், லேதர் மற்றும் வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேண்டும் என்றால் நீங்கள் வாழைப்பழ தோலை வைத்து அவற்றின் மீது நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் அவை உடனடியாக பளிச்சிட ஆரம்பித்துவிடும்.

சூரிய கதிரின் பாதிப்புகள் சூரிய கதிர்களால் உண்டான பாதிப்புகள் நீங்க நீங்க வாழைப்பழ தோலை கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்யலாம். இதனால் சூரிய கதிர்களினால் உண்டான பாதிப்புகள் நீங்கி முகத்தில் உள்ள கருமை மறையும்.

11 1512985655 7

Related posts

சுவையான கேரட் பச்சை பட்டாணி சாலட்

nathan

தினமும் மோர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan

உங்களுக்கு சப்போட்டாப் பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா பன்னீர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தி தரும் சிறு தானியங்கள்….

nathan

சுவையான கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்

nathan

மனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்

nathan

செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள்…

nathan