மன அழுத்தமும் சோர்வும் நமது உடலை மிகவும் அதிகமாக பாதிக்கும் தன்மை கொண்டவை.. வேலை செய்யும் போது சோர்வு உண்டானால் அது உங்களது வேலையை மிக அதிகமாக பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வானது விட்டமின் குறைபாடுகள் காரணமாகவும் கூட ஏற்படலாம்.
இந்த மன அழுத்தம் மற்றும் சோர்வை எளிதாக போக்கலாம். இவற்றை ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும் கூட சரி செய்ய முடியும். இந்த பகுதியில் சில வகையான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சாப்பிடுவதன் மூலமாக நீங்கள் மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருந்து விடுதலை பெறலாம்.
1. வைட்டமின் டி
வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மனநிலையும் சீராக இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும். உணவில் காளான்கள், முட்டை, சோயா பால் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களை பெற முடியும்.
2. கார்போஹைட்ரேட்
கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவு வகைகளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நரம்புத் தளர்ச்சி, கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. முழு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவை கார்போஹைட்ரேட் நிரம்பப்பெற்றவை. அவைகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3. மூளைக்கு… பீன்ஸ், சோயா, பருப்புகள், இறைச்சிகள், பருப்பு வகைகள், பன்னீர் போன்ற புரத சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்வு அளிக்கும்.
4. பழங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. திராட்சை, செர்ரி பழங்கள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
5. ஒமேகா 3 ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பதார்த்தங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், மனச்சோர்வை குறைக்கவும் உதவுகின்றன.
6. வெண்ணெய் மதிய உணவில் வெண்ணெய் சேர்த்து கொள்வது நல்லது. அதிலிருக்கும் நல்ல கொழுப்பு, மூளை வேகமாக செயல்பட துணைபுரியும்.
7. காளான்கள் காளான்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. நல்ல மனநிலையை ஊக்குவிக்கும் உணவு பட்டியலில் வெங்காயமும் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் உணவில் சேர்ப்பது புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்கவும் உதவுகிறது.
8. தக்காளி தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. தக்காளி பழத்தை சாலட்டுகளாக மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
9. பீன்ஸ் பீன்ஸை உணவில் சேர்த்து கொள்வது இதயத்திற்கு நல்லது. மனநலனுக்கும் நன்மை சேர்க்கும்.
10. வாழைப்பழம் வாழைப்பழம் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகும்… இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது இந்த பொட்டாசியம் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர துணை புரிகிறது.
11. டீ குடிக்கலாம் டீ பிரியர்கள் நிச்சயமாக ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும் போது சூடாக ஒரு டீ குடியுங்கள் உங்களது மனது லேசாகும்
12. மீன் ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைந்த உணவான சால்மன் போன்ற மீன்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த மீன்களை நீங்கள் மன அழுத்தத்துடன் இருக்கும் போது சாப்பிடலாம்.
13. கேரட் கேரட் பச்சையாக சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. மேலும் கேரட்டில் மிக அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது.. இது உங்களது பசியை போக்கி உங்களது மன சோர்வையும் நீக்குகிறது.
14. பால் ஒரு டம்ளர் பாலில் அதிகமாக விட்டமின் பி, புரோட்டின், விட்டமின் டி மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் மற்றும் உங்களது தசைகளின் வலிகளை போக்கும் தன்மையும் உள்ளது. தூங்குவதற்கு முன்னர் ஒரு டம்ளர் பால் குடித்தால், உங்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.
15. நட்ஸ் சோர்வு உங்களது வேலைகள் மற்றும் திறனை குறைக்கும் திறனை கொண்டவை.. இது காய்ச்சல் வந்தது போன்ற உணர்வை தரும். இது போன்ற சோர்வில் இருந்து விடுபட நீங்கள் பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் உடலுக்கு தேவையான விட்டமின்களும், ஜிங்க்கும் உள்ளது.