இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உங்களது அன்றாட வாழ்க்கையில் பச்சை காய்கறிகள், கேரட், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஆனால் நாம் இப்போது எல்லாம் ஜங்க் உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். இதனால் தான் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகின்றன. நீங்கள் கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்களது கண் பார்வையை தெளிவாக்கலாம். இந்த பகுதியில் கண் பார்வையை அதிகரிக்க கூடிய சில வகையான உணவுகளையும், நாட்டு மருத்துவ முறைகளையும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
1. நெல்லிக்காய்
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
2. அன்னாசிபழம்
அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.
3. சீரகம்
சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
4. இருவாட்சி சமூலம்
இருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.
5. கீழாநெல்லி
சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
6. குளிப்பதற்கு…
கண் பார்வை மறைத்தல் குறைய ஆதண்டை இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளிக்க கண் பார்வை மறைத்தல் குறையும்.
7. ஆதண்டை இலை
ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்.
8. பொன்னாங்கண்ணி
பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.
9. அருநெல்லி
அருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.
10. செண்பகப்பூ
செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
கண் பார்வை மங்கல் குறைய மூக்கிரட்டை வேர் பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.
11. மூக்கிரட்டை
மூக்கிரட்டை வேரை எடுத்து பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.
12. செவ்வாழை
வாழைப்பழங்களிலேயே மிகவும் சிறந்தது செவ்வாழை தான். இதில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை தெளிவாக செவ்வாழை பழம் தொடர்ந்து சாப்பிட கண் பார்வை குறைப்பாடு குறையும்.
13. பூக்கள்
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறி கண் பார்வை தெளிவடையும்.
14. தேன்
முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி இரண்டையும் நன்றாகக் கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தினால் கண் பார்வை அதிகரிக்கும்.
15. கொத்தமல்லி இலை கொத்துமல்லிக் இலையுடன் துவரம் பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும். கொத்தமல்லி இலையானது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன்களை தரக்கூடியதாகும்.
16. கேரட் கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
17. தொலைதொடர்பு சாதனங்கள் மொபைல், கம்ப்யூட்டர், டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.
18. தூக்கம் அவசியம் 7 – 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.
19. தண்ணீர் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
20. கூலிங் கிளாஸ் வெளியில் செல்லும்போது கூலிங் கிளாஸ் அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
21. கட்டாய உணவுகள் கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.