வழக்கமாக சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம்.அதில் இருக்கும் நண்மைகளை பற்றி நமக்கு தெரிவதில்லை.
நாம் வேண்டாம் என்று தூக்கி போடும் சோளக்கருது நாரில், புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
சோளநாரில் உள்ள நன்மைகள்:-
* சோளக்கருது நாரில் “விட்டமின் கே” சத்து அளவுக்கு அதிகமாக உள்ளது.
* அதனால், அது காயங்களினால் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது,
* ரத்தத்தை உறையச் செய்து, காயம் மற்றும் வீக்கத்தை குறைக்க சோளக்கருது நார் பயன்படுகிறது.
* அதனோடு, சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க சோள நார் உதவுகிறது.
* மேலும் இது சிறுநீரக கற்களை உருவாக்காமலும், ப்ரோஸ்டேட் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
* சோள நார் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்தி, அதிக கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக்க உதவுகிறது.
இன்சுலின் ஹார்மோனை தூண்டி, சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்க செய்யாமல் தடுப்பதால், இது சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
இரண்டு டம்ளர் நீரில், 2 ஸ்பூன் சோள நாரை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.