26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 1511244308 4
மருத்துவ குறிப்பு

அயோடினுக்கும் தைராய்டு பாதிப்புக்கும் என்ன தொடர்பு? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!!

அயோடின் சத்து பற்றி இன்றைக்கு பலருக்கும் தெரிந்திருக்கிறது. அயோடின் குறைபாட்டினால் தைராய்டு பிரச்சனை ஏற்படும் என்றளவுக்கு மட்டும் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அயோடின் குறித்த முழுத் தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அயோடின் பூர்விகம் கடல் நீர்தான். கடலில் வாழும் மீன்கள், கடலில் விளையும் தாவரங்களான கடல் பாசிகள், கடல் நீரில் எடுக்கும் உப்பு, கடலோரப் பகுதிகளில் விளையும் தாவரங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு. கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி அமைந்திருக்கும் பிரதேசங்களின் நிலத்தில் அயோடின் குறைவு. ஆகவே, அந்தப் பகுதி தாவரங்களிலும் அயோடின் குறைவு.

அயோடின் என்றாலே அது உப்பில் இருந்து கிடைக்ககூடிய சத்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது.

ஐயோடின் என்பது ஒரு வகை மினரல். அந்த மினரல் சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கவில்லையெனில் அவை பல்வேறு உடல் நல பாதிப்புகளை உண்டாக்கிடும்.

அயோடின் என்றால் ? : அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு “I”. அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது. புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது. இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

தைராய்டு சுரப்பி : இச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

யார் யாருக்கு எவ்வளவு? : பிறந்தது முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 0.07 மில்லி கிராமில் இருந்து 0.38 மில்லி கிராம் வரை அயோடின் தேவை. ஒரு நாளில், 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 0.1 மில்லி கிராமில் இருந்து 0.14 மில்லி கிராம் வரை அயோடின் உணவில் சேர்த்து கொள்ளலாம். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண், பெண் என இருவரும் தினமும் 0.11 மில்லி கிராம் முதல் 0.12 மில்லி கிராம் உணவுடன் சாப்பிட்டு வருவது அவசியம்.தாய்மை அடைந்த பெண்களுக்கு அயோடின் குறைபாடு பிரசவம் முடியும்வரை இருக்கும். அயோடின் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு காது கேளாமை பாதிப்பு காணப்படும். அது மட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பி முறையாக வேலை செய்வதும் பாதிக்கப்படும். உங்கள் உடலில் அயோடின் சத்து குறைவாக உள்ளது அல்லது பற்றாகுறையாக இருக்கிறது என்பதை சில அறிகுறிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

கழுத்து வீக்கம் : முன் கழுத்தில் வீக்கம் தென்படும். எந்த காரணமும் இன்றி தானாக முன் கழுத்து வீங்க ஆரம்பித்தால் அயோடின் சத்து குறைபாட்டினால் உண்டான தைராய்டு பாதிப்பாக இருக்கும். தைராய்டு சுரப்பி முன் கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் இந்த சுரப்பி வீங்கிடும். இது சரியாக சுரப்பதற்கு அயோடின் சத்து மிகவும் அவசியமாகும்.

உடல் எடை : அபிரிதமாக உடல் எடை அதிகரிக்கும். நம் உடலில் போதுமான அளவு அயோடின் இல்லையென்றால் தைராய்டு சுரப்பி வேலை செய்யவதில் சிக்கல்கள் உண்டாகும். தைராய்டு சுரப்பி நம் உடலின் மெட்டபாலிசம் சீராக செயல்பட உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவிலிருந்து சத்துக்களை பிரித்தெடுக்க இவை உதவுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் நாம் சாப்பிடும் உணவு முறையாக செரிக்கப்படாமல் போகும் இதனால் அடிக்கடி பசியெடுத்து உடல் பருமன் அதிகரிக்கும்.

சோம்பல் : எப்போதும் சோம்பலாக உணர்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் அயோடின் சத்து குறைவாக இருக்கும். நம் உடலை எனர்ஜியாக வைத்திருக்க தைராய்டு ஹார்மோன் மிகவும் அவசியமாகும். அயோடின் குறைவினால் தைராய்டு சுரப்பி சுரப்பிதில் சில சிக்கல்கள் உண்டாவதால் எப்போதும் சோம்பலாக உணர்வீர்கள்.

முடி கொட்டுதல் : தலையில் இருக்கக்கூடிய செல்கள் மீள் உற்பத்தி ஆவதற்கும் தைராய்டு சுரப்பி முக்கியப் பங்காற்றுகிறது. அது சரியாக சுரக்கவில்லையெனில் மீள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்படும். இதனால் தலைமுடி அதிகமாக கொட்டும். முடியை முறையாக பராமரிப்பது மட்டுமின்றி முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் எடுத்துக் கொண்டால் மட்டுமே முடி நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்திடும்.

வறண்ட சருமம் : தைராய்டு சுரப்பி குறைவாக இருப்பவர்களில் எழுபது சதவீதத்தினருக்கு வறண்ட சருமம் காணப்படும். சருமத்தில் இருக்கக்கூடிய செல்களின் சீரான இயக்கத்திற்கும் தைராய்டு சுரப்பி மிகவும் அவசியமாகும்.

வியர்வை : தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு வியர்வை வராது. அயோடின் சத்து குறைபாடு இருந்தால் தைராய்டு சரியாக சுரக்காது என்பதால் வியர்வை சுரக்காது. வியர்வை வெளியேறினால் மட்டுமே அதன் மூலமாக சருமத்தில் இருக்ககூடிய டாக்ஸின்கள் வெளியேறும். அவை வெளியேறாததால் சருமத்தில் பிரச்சனைகள் உண்டாகிடும்.

குளிர் : தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் உங்களால் குறைவான குளிரைக்கூட தாங்க முடியாது. உங்கள் சருமம் அதிக சென்ஸிட்டிவாக இருக்கும். தைராய்டு சுரப்பி சரியாக சுரந்தால் மட்டுமே உடலில் இருக்கக்கூடிய செல்கள் சரியாக செயல்பட்டு அவை நம் உடலின் டெம்ப்பரேச்சரை கட்டுக்குள் வைத்திருக்கும்

இதயத்துடிப்பு : அயோடின் சத்து குறைவாக இருந்தால் பிறரை விட உங்கள் இதயம் குறைவாகவே துடித்திடும். இதனால் சோர்வு,மூச்சு வாங்குதல்,மயக்க நிலை ஆகியவை உண்டாகும்.

நினைவுத் திறன் : படிப்பதும், அதனை நினைவில் வைத்துக் கொள்வதிலும் பெரும் போராட்டமே வெடிக்கும். ஞாபக சக்தியை மேம்படுத்தவும் தைராய்டு சுரப்பி பெரும் பங்காற்றுகிறது. அவை சரியாக சுரக்காத போது இதில் சிக்கல்கள் உண்டாகிறது.

கர்ப்பம் : கர்ப்பமான பெண்களுக்கு அயோடின் குறைபாடு ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. தங்களுக்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் தேவையான ஐயோடின் மிகவும் அவசியம். இவை எடுக்காத போது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவது, பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு மன அழுத்தம் ஏற்படுவது, தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவது ஆகியவை ஏற்படும்.

மாதவிடாய் : அயோடின் சத்து குறைவாக இருக்கிறது என்றால் மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு முறையற்ற மாதவிடாய் ஏற்படுவதுடன் அதிகமான உதிரப்போக்கும் ஏற்படும். ஏனென்றால் குறைவாக சுரக்கும் தைராய்டு சுரப்பி மென்ச்சுரல் சைக்கிள் ஹார்மோனை குலைத்து விடுகிறது. அயோடின் சத்து நிறைந்துள்ள உணவு வகைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கடற்பாசி : அயோடின் சத்து நூறு மடங்கு அதிகமாக கிடைக்கும் உணவு வகைகளில் முதன்மையானது கடற்பாசி. கடற்பாசி வளரும் இடத்தை பொறுத்து அதிலிருக்கும் அயோடின் அளவு வேறுபடும். அதனை நேரடியாக அல்லாமல் வேறு ஏதேனும் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

தயிர் : ஒரு கப் தயிரில் ஒரு நாளைக்கு தேவையான அயோடின் அளவில் பாதி உங்களுக்கு கிடைத்திடும். அதோடு அதில் பதினேழு கிராம் ப்ரோட்டீன் கிடைத்திடும். லஸ்ஸி செய்து சாப்பிட்டால் நிறைய பலன் உண்டு.

முட்டை : முட்டையில் உங்களுக்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல்ஸ் அடங்கியிருக்கிறது. ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

அயோடின் உப்பு : நாம் தினமும் பயன்படுத்துகிற உப்பு விலையை மட்டும் மனதில் வைத்து விலைக்குறைவான உப்பு வாங்கிடாமல் சற்றே விலை அதிகமாக இருந்தாலும் அயோடின் உப்பு வாங்கி பயன்படுத்துங்கள். துரித உணவுகளை முடிந்த வரை தவிர்த்திடுங்கள்.

காளாண் : செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

பூண்டு : செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

பசலைக் கீரை : பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது. பசலையில் அர்ஜினின், லியூசின், ஐஸோலியூசின், லைசின், திரியோனின் மற்றும் டிரிப்டோபேன் ஆகிய அமினோ அமிலங்களும் பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கி உள்ளன. இவற்றோடு சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கரோட்டினாயிட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின் கே சத்துகளும் அதிகம் அடங்கியுள்ளன.

மாட்டிறைச்சி : மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.

தானியங்கள் : தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

ப்ராக்கோலி : இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன. ப்ரோக்கோலியில் இருக்கும் ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தக்காளி : தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

கடல் சிப்பி : தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.

கொள்ளு : அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும்.நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.

21 1511244308 4

Related posts

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்!

nathan

அதிகாலையில் முகம் வீங்குகிறதா? இதோ தீர்வு

nathan

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

nathan

நன்மைகள் ஏராளமாம்! 1 டம்ளர் துளசி பாலை தினமும் காலையில் குடிச்சு பாருங்க…..

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய்க்கான அபாயம் உள்ளதா என்பதை நொடியில் அறிய இங்க அழுத்துங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் உடலில் நிகழும் மாற்றம் குறித்த ரகசியங்கள்!

nathan

மன அழுத்தத்தைக் குறைக்க வழிகள்!

nathan

சிறுநீரக நோயில் இருந்து மீட்க உதவும் சிறப்பான 5 உணவுகள்!!!

nathan