25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
20 1511166348 1
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாய் திகழும் பின் விளைவுகள் இல்லாத வலி நிவாரணி!சூப்பர் டிப்ஸ்

மஞ்சள் டீ தயாரிப்பு முறை | அரோக்கியம் தரும் மஞ்சள் டீ ரெசிபி Boldsky நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் அதிகப்படியான மருத்துவ உபகரணங்கள் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? காய்ச்சல்,தலைவலி என்று ஆரம்பிக்கும் சின்ன சின்னப் பிரச்சனைகளிலிருந்து உயிரைக் கொல்லும் கொடிய நோய்களிலிருந்து நம்மை அது காக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது தான் உண்மை. மஞ்சள், தினமும் சமையலில் நாம் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு ஏரளாமான நன்மைகள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

அதே மஞ்சளை டீ யாக தயாரித்துக் குடித்துப் பாருங்கள் சுவை மட்டுமல்ல பலனும் இரட்டிப்பாகத் தான் உங்களுக்கு கிடைக்கும்.

மஞ்சள் டீ தயாரிப்பு முறை : இது மிகவும் எளிமையான ஒன்று. இரண்டு கப் நீரை முதலில் கொதிக்க வைத்திடுங்கள். அதில் அரை இன்ச் அளவுள்ள மஞ்சள் கிழங்கை சுத்தம் செய்து துருவி சேர்த்திடுங்கள். மஞ்சள் கிழங்கு இல்லையென்றால் கவலை வேண்டாம் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை நீங்கள் பயன்படுத்தலாம். இதனை கொதிக்கிற தண்ணீரில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் அது கொஞ்சம் ஆறியதும் அதில் தேன் ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு பின்ச் அளவு மிளகுத்தூளை சேர்த்து குடிக்கலாம். இதனைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி : நோய் வந்த பிறகு அவற்றை சரி செய்ய பாடுபடுவதுடன் நோய் வராமல் தற்காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அப்படி புத்திசாலியாக நீங்கள் திகழ வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக மஞ்சள் டீ பருக வேண்டும். மஞ்சள் மற்றும் மிளகில் ஏராளமான ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்கள் இருக்கிறது. இவை உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையை அதிகரிக்கச் செய்திடும். இதனால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றிலிருந்து எளிதாக நீங்கள் தப்பித்து விடலாம்.

சர்க்கரை நோய் : இவை உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். ப்ரீ டயாப்பட்டீஸ் நிலையில் இருப்பவர்களும் இதனைக் குடிக்கலாம்.

இதய நோய் : இன்றைய நவீன மற்றும் இயந்திரத்தனமான வாழ்க்கை முறையினால் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பினால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மஞ்சள் டீ குடிப்பதானால் அந்த பாதிப்புகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். அதோடு உடலில் இருக்கும் செல்களை எல்லாம் மேம்படுத்தி செயலாற்ற உதவுவதால் இதனை நீங்கள் தாரளமாக பயன்படுத்தலாம்.

புற்றுநோய் : இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதன்மையானது இந்த புற்றுநோய். மஞ்சள் டீ இப்புற்றுநோய் பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காத்திடுகிறது மஞ்சள் டீயில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கிறது. இவை நம் செல்கள் பாதிப்படையாமல் இருக்க உதவிடும். அதே சமயம் அவற்றின் துரிதமான செயல்பாடுகளுக்கும் அவை துணை நிற்பதால் புற்றுநோய் நம்மை தாக்காது. அதுமட்டுமல்லாமல் இது புற்றுநோய் பல்வேறு உறுப்புகளுக்கு பரவுவதையும் தடுக்கிறது.

செரிமானம் : நாம் என்ன தான் சத்தான ஆகாரங்களை தேடித்தேடிச் சாப்பிட்டாலும் முறையாக செரிமாணம் நடைப்பெற்றால் மட்டுமே அவற்றின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். குடலில் செரிமானத்திற்கு உதவுக்கூடிய பாக்டீரியாவின் வளர்சிக்கு மஞ்சள் டீ முக்கிய பங்காற்றுகிறது. தொடர்ந்து நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக்கோளாறுகள் தெரிந்தால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

உடல் எடை : உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதோடு உடலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேறுவதால் உடல் எடையை கணிசமாக குறைத்திடும்.

கண்கள் : வயதானவர்களுக்கு கண் பார்வை தெரிவிதில் சிக்கல்கள் உண்டாகும். கருவிழியில் ஏற்படக்கூடிய அந்த பாதிப்புகளை மஞ்சள் டீ சரி செய்திடும். தினமும் ஒரு வேலை மஞ்சள் டீ குடித்து வர உங்கள் பார்வையை அவை சீராக்கும்.

பக்க விளைவுகள் : நாம் அடிக்கடி காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகள் சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் மஞ்சள் டீ குடிப்பதினால் காய்ச்சல் குணமாவதோடு உங்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

மன அழுத்தம் : மஞ்சள் டீ உடல் நலனுக்கு மட்டுமல்ல மனநலனுக்கும் முக்கியப் பங்காற்றுகிறது. மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு தொடர்ந்து மஞ்சள் டீ கொடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் தெரிந்திருக்கிறது.

சருமம் : மஞ்சள் டீ உங்கள் சருமத்திற்கும் மிகவும் நல்லது, சருமத்தில் தோன்றக்கூடிய பாக்டீரியா தொற்றினால் பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படுகிறது.அவற்றை தடுக்க இந்த மஞ்சள் டீ பெரிதும் உதவிடும். அதோடு இவை உங்கள் சருமத்தில் இருக்க்கூடிய டாக்ஸின்களை நீக்குவதால் சருமம் பொலிவுடன் காணப்படும்

வலி நிவாரணி : மிளகு நம் உடலில் transient receptor potential vanilloid type-1 என்பதை சுரக்க உதவிடுகிறது. இதனால் தான் நம் உடலில் வலி குறைகிறது. பெரும்பாலும் நாம் பயன்படுத்துகிற வலி நிவாரணிக் க்ரீம்கள் TRPV1யை தூண்டிவிடக்கூடிய வேலையைத் தான் செய்கிறது. இவை செயலாற்ற ஆரம்பித்தால் வலி மறைந்திடும். இந்த வேலையை மஞ்சள் டீ கச்சிதமாக செய்திடுகிறது.

அளவு : என்ன தான் அருமருந்தாக இருந்தாலுமே அவை அளவுக்கு மீறினால் நஞ்சாகிடும் என்பதை மறந்து விட வேண்டாம். லோ பிரசர் மற்றும் வேறு ஏதேனும் நோய் பாதிப்பு இருக்கிறதென்றால் மஞ்சள் டீ அதிகமாக பயன்படுத்த வேண்டாம். அல்லது பயன்படுத்துவதற்உ முன்னர் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள். சாதரணமாக ஒரு நாளைக்கு மஞ்சள் கிழங்கு என்றால் 1.5 கிராம் முதல் மூன்று கிராம் வரை சாப்பிடலாம். இதே பொடியென்றால் இரண்டு டீஸ்பூன் வரை எடுத்துக் கொள்லலாம். இதையே சப்ளிமெண்ட் என்றால் 400 முதல் 600 மில்லிகிராம் வரையிலும் எக்ஸ்டார்க்ட் என்றால் 30 முதல் 90 சொட்டு வரை எடுக்கலாம்.20 1511166348 1

 

Related posts

உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

கேரட்டின் மருத்துவக் குணங்கள்

nathan

கொரோனாவில் மீண்டவர்கள் பூஞ்சை தொற்று உருவாகும் அபாயம்.. கண்களில் கவனம்!

nathan

அலுவலகப் பணியும் குடும்பப் பொறுப்பும் இரண்டையும் எப்படி சமாளிப்பது?

nathan

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி தடுக்கலாம்?

nathan

ரத்தசோகையைப் போக்க…!

nathan

ஆரோக்கியமா இருக்கணுமா… குடும்பத்தோட நேரம் செலவழியுங்க…

nathan

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

nathan