28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
cover 17 1510909262
மருத்துவ குறிப்பு

நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!அப்ப இத படிங்க!

இன்றைக்கு பலருக்கும் உடனடி நிவாரணம் மீது ஈர்ப்பு அதிகம். எதுவாக இருந்தாலும் உடனடியாக கிடைத்திட வேண்டும். உடல் உபாதைகள் எதுவாக இருந்தாலும் ஒரே நாளில் சட்டென குறைந்திட்டால் போதும்.

அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவுக்கும், பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என்று எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் இன்றைக்கு குறைகிறது, இன்றைக்கு வலி மறைகிறதே என்ற சமாதான பதில் தான் நமக்கு கிடைக்கும்.

உயிருக்கே ஆபத்து என்று எச்சரிக்க வேண்டிய பொருட்கள் தான் பெரும்பாலும் தடை செய்யப்படும். யாரும் அதனை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அப்படி வெளிநாடுகளில் எல்லாம் தடை செய்யப்பட்டு இந்தியாவில் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய மருந்துகளின் பட்டியலை மட்டும் இப்போது பார்க்கலாம்.

பொதுவாக மருந்துகள் என்றாலே அது நோய் தீர்க்கும் நிவாரணியாகத் தான் நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் அதுவே பல நோய்களின் மூலக்காரணம் என்பதை இப்போது அறிந்து கொள்வீர்கள்.

Oxyphenbutazone :
இவ்வகை மருந்து பெயின் கில்லர்களாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.

இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் போன் மேரோ டிப்ரசன் எனப்படுகிற எலும்புச் சிதைவு ஒரு வகையான நோயை உண்டாக்கிடும்.

அதோடு நம் உடலில் உள்ள ரத்த செல்களை குறைத்திடும். இந்த வகை மருந்துடன் வேறு எந்த மருந்துகளை சேர்த்து சாப்பிட்டாலும் அது ஆபத்து தான்.

Nimesulide :
இந்த மருந்தை தொடர்ந்து எடுப்பதினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திடும் என்பதால் அமெரிக்காவில் இதனை பயன்படுத்தக்கூடாது என்று தடை செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் பன்னிரெண்டு வயதிற்கு குறைவான குழந்தைகள் மட்டுமே தடை மற்றபடி எல்லாரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Propoxyphene :
இதனையும் பெயின் கில்லராகத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நம் இதயத்துடிப்பின் சாரம்சத்தை குலைக்கூடியது. இதனால் மாரடைப்பு கூட ஏற்படக்கூடும். இந்த மருந்தும் இந்தியாவில் தடை செய்யப்படுவில்லை.

Furazolidone : ப்ரோடோசுவா என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை சரி செய்ய இந்த மருந்து அளிக்கப்படுகிறது. இதனை தனியாக எடுத்துக் கொண்டாலோ அல்லது வேறு சில மருந்துகளுடன் எடுத்துக் கொண்டாலோ ஆபத்து தான். இந்தியாவில் இந்த மருந்துடன் loperamide என்ற மருந்து சேர்த்து கிடைக்ககூடிய காம்பினேஷன் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கிறது.

Nandrolone decanoate : இந்த வகை மருந்து கிட்னி நோயினாலோ அல்லது எலும்பு தொடர்பான நோய்களினால் உடலில் ரத்தம் குறைந்தால் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இது விளையாட்டு வீரர்கள் தங்கள் தசைகளை வலுப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இதனை இந்தியாவில் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

Pergolide : பராக்கின்சன் என்ற நோய்க்கு இது மருந்தாக வழங்கப்படுகிறது.இது நம் நரம்பு மண்டலத்தை குலைக்ககூடியது. இது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களை பாதிக்கும் என்பதால் இதயத்திற்கு போதிய ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

Cerivastatin : உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பவர்கள் மத்தியில் இந்த மருந்து பிரபலம். கொலஸ்ட்ரால் அளவு குறைப்பதற்காக இதனை பயன்படுத்துகிறார்கள் இதனை அடிக்கடி எடுப்பதினால் கிட்னி பாதிப்படையும்.

விக்ஸ் : நம் வீடுகளில் சர்வ சாதரணமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் விக்ஸ் தடை செய்யப்பட்டது தான். வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த விக்ஸ் இந்தியாவில் குறிப்பாக சாதரண மக்களிடையே பயங்கரமாக பயன்படுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்துவதால் ஆஸ்துமா, டிபி ஆகியவை வரும் என்றும் இதில் அதிகப்படியான டாக்சிக் இருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். விக்ஸ் தவிர்த்து டி-கோல்ட் மற்றும் விக்ஸ் ஆக்சன் 500 ஆகியவையும் சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

Nitrofurazone : இது நோய்த்தொற்று, சருமத்தில் ஏற்படக்கூடிய காயங்கள் ஆகியவற்றிற்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமப் புற்றுநோய் வருவதற்கு காரணமாகிடும். இது மருத்துவரின் பரிந்துரையின்றி கொடுக்கப்பட மாட்டாது. இந்த மருந்தினை வெளிநாடுகளில் தடை செய்துவிட்டார்கள்.

Pemoline : இது ஏடிஎச்டி எனப்படக்கூடிய ஹைப்பர் ஆக்விட்டி டிஸ்ஸாடர் இருப்பவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. இது கல்லீரலில் அதிகப்படியான டாக்ஸின்களை சேர்ப்பதால் லிவர் டேமேஜ் ஆகிடும். ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதோ அல்லது இறப்பு நிகழ்வதோ தான் முக்கியக் காரணியாக இருக்கும்

Phenylpropanolamine பொதுவாக சளி, இருமலுக்கு இந்த மாத்திரை இந்தியாவில் விற்கப்படுகிறது. ஆனால், இந்த மாத்திரை மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட காரணமாக இருப்பதாக அமெரிக்கா இதை தடை செய்தது.

Tegaserod மலச்சிக்கல் மற்றும் குடல் அழற்சி நோய்க்கு மருந்தாக Tegaserod எனும் மருந்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், இந்த மருந்து ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு ஏற்பட காரணியாக இருக்கிறது என்பதால் சந்தையில் இருந்து உடனே பின்வாங்கப்பட்டது.cover 17 1510909262

Related posts

பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும்

nathan

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

nathan

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் செய்யும் இந்த காரியங்கள் உங்கள் குழந்தைகளை வெறுப்படைய செய்யும் என தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…டியோடரண்ட் பயன்படுத்துவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

nathan

உடல் உஷ்ணத்தை தணிக்கும் புளி

nathan

மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த விஷயங்கள மறந்துகூட செய்யாதீங்க…!

nathan

இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan