32.3 C
Chennai
Tuesday, Jun 25, 2024
fedme1 None.ipadFull 0
மருத்துவ குறிப்பு

நைட் தூங்கும் முன் இத குடிச்சா, சீக்கிரம் உடல் எடையைக் குறைக்கலாம் தெரியுமா!

உடல் பருமன் பிரச்சனைக்கு எவ்வளவோ தீர்வுகள் உள்ளன. ஆனால் அனைத்தும் அனைவருக்குமே பொருந்தும் என்று கூற முடியாது. சிலருக்கு சில வழிகள் நல்ல மாற்றத்தைக் கொடுத்தாலும், இன்னும் சிலருக்கு எவ்வித மாற்றத்தையும் கொடுக்காமல் இருக்கும்.

அதுவும் இயற்கை வழிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால், அதன் பலன் தாமதமாகத் தான் கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களால் கடுமையான டயட் இருக்க முடியாதா? எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்படியெனில், நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அன்றாட ம் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பானத்தை ஒருவர் தினமும் இரவில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது அந்த பானம் என்னெவென்று காண்போம்.

தேன் நம் அனைவருக்கும் தேன் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று எனத் தெரியும். இதில் உள்ள மருத்துவத் தன்மையால் தான் ஆயுர்வேதத்தில் இது முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேன் உணவின் சுவையை அதிகரிப்பதோடு, அதில் உள்ள உட்பொருட்கள் உடல் எடையைக் குறைக்கவும் உதவிப் புரியும்.

பட்டை பட்டை எடையைக் குறைக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். * செரிமானத்தை ஊக்குவிக்கும். * இதயத்தைப் பாதுகாக்கும். * இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். * கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: உடல் எடையைக் குறைக்க உதவும் பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களாவன: * பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன் * தண்ணீர் – 200 மிலி * தேன் – 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை: * 200 மிலி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும். * பின் அடுப்பை அணைத்து அந்த நீரை இறக்கி, அதில் பட்டைத் தூளை சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு அதில் தேன் சேர்த்து கலந்து, நீர் குளிர்ந்த பின் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

குடிக்கும் முறை: தயாரித்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் குடியுங்கள். இந்த சக்தி வாய்ந்த பானம் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள், கழிவுகள் போன்றவற்றையும் வெளியேற்றும். அதோடு, உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும்.

குறிப்பு இந்த பானம் குடித்த பின் வேறு எந்த ஒரு உணவுப் பொருளையோ அல்லது பானத்தையோ உட்கொள்ளக் கூடாது. மேலும் இந்த பானத்தை பகல் நேரத்திலும் குடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பானத்தை இரவில் குடித்தால் தான், அது உடலினுள் நன்கு வேலை செய்து மாற்றத்தை விரைவில் காண்பிக்கும். எடையைக் குறைக்க நினைப்போர் மனதில் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

#2 ஜங்க் உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகள், எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மாறாக பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட வேண்டும்.

#3 போதிய தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் உடலில் செரடோனின் அளவு அதிகரித்து, மனநிலை எப்போதும் சந்தோஷமாக இருக்கும். இதன் காரணமாக டென்சன் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்த்து, அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம்.fedme1 None.ipadFull 0

Related posts

இந்த மூலிகையை எங்க பார்த்தாலும் விட்றாதீங்க… ஏன் தெரியுமா?…

nathan

பெண்களின் மார்பகத்தில் பூப்படைவு முதல் தாய்ப்பால் அளிக்கும் வரை நிகழும் மாற்றங்கள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க சில மகத்தான வழிகள்!!!

nathan

மூல நோய் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு

nathan

இரண்டாவது குழந்தையை விரும்பும் தம்பதியினரின் கவனத்திற்கு!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் சோப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

nathan

இடுப்புத் தசை வேகமாக குறைக்க இதை கடைபிடித்தால் போதும்! நிச்சயம் பலன் கொடுத்திடும்.

nathan