25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
save1 15 1510733412
ஆரோக்கிய உணவு

1 ஸ்பூன் வினிகர்+ 1 சிட்டிகை சமையல் சோடா நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் ஆச்சரியமான பலன்கள் தெரியுமா!!

பொதுவாகவே வினிகர் மற்றும் சமையல் சோடா இரண்டுமே ஆரோக்கியம், அழகு இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைக்க சமையல் சோடாவும் வினிகரும் உதவுகிறது.

பொதுவாக சமையல் சோடா நுண்கிருமிகளை அழிக்கும், வயிற்று உப்பிசத்த்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்தவும் இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடித்தால் நன்மைகள் தரும்.

ஆப்பிள் சைடர் ஆப்பிள் சிடர் வினிகர் உடலுக்கு மிகவும் நல்லது. உடலின் பி. ஹெச் அளவை சரியாக வைத்திடும். நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

உடலின் எடையையும் கணிசமாக குறைக்கும். இந்த இரண்டு அருமையான உணவுப் பொருட்களை சேர்த்துக் குடித்தால் பல நன்மைகளை அளிக்கின்றது. அற்புதமாக வேலை செய்து நமக்கு நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.

ஏன் இரண்டையும் சேர்த்து குடிக்க வேண்டும்? ஏனென்றால் வினிகர் மற்றும் சமையல் சோடா இரண்டிற்கும் எதிர்ப்பதமான அமில-காரத் தன்மை கொண்டவை. வினிகர் அமிலத் தன்மை கொண்டது. சமையல் சோடா காரத்தன்மை பெற்றவை. இரண்டையும் கலந்து குடிக்கும்போது நமது உடலில் அமில- காரத் தன்மை (pH) சம நிலை பெறுகிறது. இதனால் அசிடிடி, அல்சர் போன்றவை வராமல் தடுக்க முடியும்.

சமையல்சோடாவை தனியாக குடிக்கலாமா? நிறைய பேர் செய்யும் தவறு என்ன வென்றால், காஸ்ட்ரிக் அமிலத்தை குறைக்க, சமையல் சொடாவை மற்றும் நீரில் கலந்து குடிப்பார்கள். ஆனால் இது தவறு. அவ்வாறு குடிக்கும்போது அது உடலில் அமில-காரத்தன்மையை (pH) மாற்றிவிடும். ஆகவே அதனை தனியாக குடிப்பது நல்லதல்ல.

ஆப்பிள் சைடர் வினிகரின் சத்துக்கள் : சமையல் சோடா விட்டமின் ஏ, பி, கொழுப்பு அமிலங்கள், என்சைம், மற்றும் கனிமச் சத்துக்களை கொண்டுள்ளது.

ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை : தேவையானவை : லேசான சூடுள்ள ஒரு கிளாஸ் நீர் ஆப்பிள் சைடர் வினிகர் – 1 ஸ்பூன் சமையல் சோடா – 1 சிட்டிகை நீரில் ஆப்பிள் சைடர் வினிகர்மற்றும் ஒரு சிட்டிகை சமையல் சோடாவையும் கலந்து கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை : இந்த ஒரு கிளாஸ் கலவை நீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். அல்லது உணவை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு குடித்திருக்க வேண்டும். உங்களுக்கு உடல் உறுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டுமென்றால், தினமும் 2 முறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இப்படி குடிப்பதால் வரும் நன்மைகள் : கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை அகற்றுகிறது. கொழுப்பை கரைக்க உதவுகிறது. கல்லீரலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகமாக்குகிறது.

சிறு நீரக தொற்று நோயை தடுக்கும் : சிறு நீர் தொற்று நோயை தடுக்கிறது. சிறு நீரக கற்களை வர விடாமல் தடுக்கிறது. சிறு நீர் எரிச்சல் மற்றும் சிறு நீரகக் கோளாறுகளை வரவிடாமல் இந்த நீர் தடுக்கிறது.

புற்று நோயை தடுக்கும் : உண்மைதாம். புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் சமையல் சோடாவிற்கு உள்ளது. தினமும் ஒரு சிட்டிகை நீரில் கலந்து வினிகருடன் குடிகும்போது உடலில் உருவாகும் காரணம் தெரியாத கட்டிகள்கூட வேகமாக கரைந்து விடும்.

உடல் எடை குறைய : உடல் எடையை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது.வளர்சிதை மாற்றத்தை தூண்டி, கொழுப்பை கரைத்து உடல் எடை குறைய உதவும்.

ஜீரண சக்தி : என்சைம்களை தூண்டி பசியின்மையை போக்குகிறது. அசிடிட்டி, வாய்வுத் தொல்லைக்கு நல்ல மருந்து இது.

கண் வறட்சி : சிலருக்கு கண்கள் அடிக்கடி வறண்டு , கண் எரிச்சல் உண்டாகும். இந்த நீரை தினமும் குடிக்கும்போது கண் வற்ட்சியை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல் : மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக இந்த மருந்து செயல்படுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தி, உடலில் இருக்கும் நல்ல பேக்டீரியாக்களின் உற்பத்தியை தூண்டுகிறது

சைனஸ் விடுதலை : சைனஸ் மற்றும் அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு இந்த நீர் நல்ல பலன் தரும். சுவாசக் குழாய்களில் தங்கும் கிருமிகளை அழிக்கிறது. நுரையீரலைப் பலப்ப்படுத்துகிறது. நுரையீரலில் தங்கும் சளியை கரைக்கிறது. இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

தொண்டை வலி : சிலருக்கு வறட்டு இருமல், அல்லது தொண்டை வலி ஏற்பட்டு இருக்கும். கிருமிகளினால் அல்லது லர்ஜியினால் ஏற்படும் தொண்டை மற்றும் இருமலுக்கு இந்த னீர் நல்ல தீர்வை தரும்.

சரும பொலிவு : உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறினால், சருமம் பொலிவாக தெரிய ஆரம்பிக்கும். வினிகர் சமையல் சோடா கலவை தினமும் எடுத்துக் கொண்டால் நாளடைவில் உங்கள் சருமத்திற்கு அருமையான பொலிவைத் தரும். சுருக்கங்கள் மறைந்து தேஜஸ் கூடும்.

பித்தப்பை கற்கள் : சிறு நீரக, பித்தப்பை, கல்லீரல் போன்றவற்றில் உருவாகும் கற்களை இந்த நீர் அறவே தடுக்கிறது. வினிகரின் அமிலத்தன்மையால் செரிக்காத கடினமான மினரல்கள் கற்களாக மாறாமல் தடுக்கப்படுகிறது.

இரைப்பை அல்சர் : இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலங்களால் உண்டாகும் அல்சர், அசிடிட்டி, போன்றவற்றை வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான அமில சுரப்பை இந்த நீர் கட்டுப்படுத்துவதால் கல்லீரல், உணவுக் குடல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

எந்த அளவு பயன்படுத்த வேண்டும்? வினிகரோ , சமையல் சோடாவோ இரண்டுமே கொடுக்கப்பட்ட அளவுதான் பயன்படுத்த வேண்டும். விரைவில் பயன்பெற அளவுக்கு அதிகமாக வினிகரை பயன்படுத்தினான் உடலுக்கு தீமை உண்டாகும். அதேபோலத்தான் சமையல் சோடாவும் குறிப்பிட்ட அளவுதான் பயன்படுத்த வேண்டும்

அதிகமாக பயன்படுத்தினால் வரும் தீமை : சிலர் சுவைக்காக சமையல் செய்யும் கடலை வகைகள் வேக வைக்க சமையல் சோடா உபயோகிப்பார்கள். அதனால் உணவு சத்து அழிந்து விடும். அதிலும் எந்தப் பொருளை வேக வைக்க உபயோகிக்கின்றோமோ அதிலுள்ள புரதச் சத்து, வைட்டமின் போன்றவை அறவே அழிந்து விடும். ஆகவே அதனை மற்ற காய்கறிகளுடன் பயன்படுத்த வேண்டாம்.

பல நன்மைதரும் ஆப்பிள் சைடர் வினிகர் தயாரிக்கும் முறை : வீட்டிலேயே ஆப்பிள் சைடர் வினிகர் தயாரிக்கலாம். கடைகளில் வாங்கும் ஆப்பிள் சைடரில் போலித்தன்மைகள் இருக்கலாம். வீட்டிலேயே ஆப்பிள் சைடர் எப்படி தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: ஆர்கானிக் ஆப்பிள் தேன் அல்லது சர்க்கரை (பிரவுன் / வெள்ளை)

செய்முறை: ஸ்டெப் – 1 3 ஆப்பிள்களுக்கு ஒரு கப் சர்க்கரை. பிரவுன் சுகர் அல்லது தேன் கூட உபயோகிக்கலாம். ஆப்பிள்களை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போடுங்கள்.

ஸ்டெப்- 2 சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக்கொள்ளவும். சர்க்கரை கரைசலை கண்ணாடி பாத்திரத்தில் ஆப்பிள்கள் மூழ்கும் வரை ஊற்றவும்.

ஸ்டெப்- 3 பிளாஸ்டிக் பேப்பர் வைத்து கட்டி மூடவும். பின் பிளாஸ்டிக் பேப்பரில் சில ஓட்டைகள் போடவும். இதனை ஒரு இருட்டான காற்று புகாத பகுதியில் இரண்டு வாரம் வைக்கவும்.

ஸ்டெப் – 4 : இதன் பின் ஆப்பிள்கள் நொதித்து தன் நிறம் இழந்து சக்கையாக காட்சியளிக்கும். அப்படியே வடிகட்டி அந்த வடிகட்டிய நொதித்த தண்ணீரை மீண்டும் அதே கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றவேண்டும். ஆப்பிள் சக்கைகளை எறிந்துவிடலாம்.

ஸ்டெப் – 5 : இந்த கலவை கொண்ட கண்ணாடி பாத்திரத்தை ஒரு மெல்லிய துணியில் மூடி வைக்க வேண்டும். உபயோகப்படுத்தாத துணியால் இதில் காற்றுப்புகாமல் ஒரு ரப்பர் பேண்ட் போட்டுவிடலாம் ! இதனை ஆறு வாரங்கள் அதே போல காற்று புகாத இருட்டான அறையில் வைத்தால் ஆப்பிள் சைடர் வினிகர் தயார்

save1 15 1510733412

Related posts

ஆண்களுக்கு அதிக சக்திதரும் நீர்முள்ளி பால்

nathan

குடிக்கும் பாதாம் பாலில் இவ்வளவு ஆபத்து இருக்கா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சற்றுமுன் பிரபல நடிகர் திடீர் மரணம்… இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்

nathan

இந்த பொருட்களில் பாலை விட கால்சியம் அதிகமாக உள்ளதாம்…

nathan

தினமும் இதை ஒரு டீஸ்பூன் அளவு உணவில் சேர்பதால் உண்டாகும் ஆச்சரியங்கள் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் சாப்பிட கூடாதவைகளும் சாப்பிட வேண்டியவைகளும்…!!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்! ~ பெட்டகம்

nathan

வெறும் பாதாமை இந்த மாதிரி சமைத்து தினசரி உணவாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா!!

nathan

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பாதாம்…

nathan