23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
08 1510132931 2
மருத்துவ குறிப்பு

கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன? அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? விடைகள் இதோ படிங்க!!

கனவுகள் காண்பது, நனவாகும் எனும் நம்பிக்கையில் உள்ளவர்களைப் பற்றிய கட்டுரை அல்ல, இது! மாறாக, கனவு என்ற ஒன்று, மனிதர் வாழ்வில் அளிக்கும் உடல்நல பாதிப்புகளையும், அதனால் மனிதர்க்கு ஏற்படும் மனநல பாதிப்புகளையும், விளக்கும்.

எதிலும் மாற்றுக்கருத்துக்கள் காணும் சமூகம், கனவிலும் நன்மைகள் இருக்கின்றன என்று, கனவுகளுக்கு விளக்கம் அளித்து, கண்ட கனவின் பலன்களை சொல்கின்றன, கிளி ஜோசியம்போல!

கனவில் இறந்து போனவர்கள் வருவது, மேலதிகாரி வந்து, இன்னும் வேலையை முடிக்கவில்லையா என்று மிரட்டுவது போய், கடவுள்கள் வந்து, நான் இங்கே இருக்கிறேன், நீ வா என்பது, எனக்கு அது வேண்டும் வாங்கிவை என்பது போன்ற பல வினோதங்கள் அடிக்கடி நிகழ்வதை நாம் அறிகிறோம் , இதற்கு பின்னாலிருக்கும் காரணங்களை நாம் அறியலாம். தொடர்ந்து படியுங்கள்.

தூக்கத்தில் கனவுகள். சிலருக்கு உறக்கத்தில் கனவுகள் வராது, எனக்கு கனவுகளே வரவில்லை, நீங்கள் என்ன இத்தனை கனவுகளைக் கூறுகிறீர்களே, என்பர். அப்போது கனவுகள் என்பது எல்லோருக்கும் வருவது இல்லை. சிலருக்கு மட்டும் வருகிறது, ஏன்?

பயங்கர கனவுகள் : இரவில் உறக்கத்தில் வரும் கனவு, அதன் வீரியத்துக்கு ஏற்ப நம் உறக்கத்தை பாதிக்கும் தன்மை மிக்கவை, சாதாரணக் கனவுகள் பெரும்பாலும் காலை எழுந்தவுடன் நமக்கு மறந்துவிடும், ஏதோ கனவு என்று தெரியும், என்ன என்பது மறந்திருக்கும் சிலருக்கு கனவுகள் பயங்கரமாக வந்திருக்கும். உடனே, விழிப்பில் இருப்பதாக தொண்டை நீர் வற்ற கத்துவதாக நினைத்துக் கத்துவர், யாருக்கும் கேட்காது, சமயத்தில் உறக்கம் கலைந்துவிடும், கண்ட கனவின் பயங்கரம், நீண்ட நாட்கள் மனதில் இருந்து, அன்றாட வாழ்வில் அதன் பாதிப்புகளை அளித்துக்கொண்டிருக்கும்.

கனவைப் பற்றி ஆய்வுகள் : சிலருக்கு நல்ல சுகமான கனவுகள் வரும், வந்தபின் உறக்கம் கலைந்து, விழித்துக் கொள்வோர் பலர், கண்ட கனவின் நற்பலன் எப்போது நமக்கு கிடைக்கும் என்று வழிமேல் விழி வைத்து, இவர் மூலம் வருமா, அவர் மூலம் வருமா, என்று பார்ப்போரை எல்லாம் கனவுடன் தொடர்புபடுத்தி, தவம் இருப்பர், இது ஒரு வகை. இந்த கனவு சார்ந்த சிந்தனைகளை ஊக்குவித்தவர்கள், மேலை அறிஞர்கள். மனநிலையை ஆராய்ந்த ஃபிராய்ட் போன்றவர்கள், கனவுகளைப் பற்றி நிறைய விசயங்கள் பகிர்ந்ததால், கனவுகளை மனம் நம்பத் தொடங்கிவிட்டன.

ஏன் வருகிறது இந்த கனவுகள்? கனவுகள் என்பது, பொதுவாக மனநிலையின் மேல்மட்டத்தில் தோன்றுவது, இன்னும் குறிப்பிட்டு சொன்னால், நிறைவேறாத ஆசைகளின் எச்சம் தான் இந்த கனவுகள்!, எப்படி? கனவுகள் விழிப்புநிலை மனதில் தோன்றுபவை, கரையில் தோன்றும் அலைகள் எப்படி ஆழ்கடலில் இருக்காதோ, அதுபோல, ஆன்மா எனும் மனித சக்தியின் வாசலான, மனதின் கரைகளில் தோன்றுவதுதான் இந்த கனவுகள்!

மனதின் குப்பைகள் : கனவுகளை நம் முன்னோர் பெரிதாக எண்ணி, அதற்கு அர்த்தங்கள் தந்ததில்லை, மேலும், மனதின் எண்ணங்களையே, அவர்கள் குப்பைகள் என்பர் என்பதே உண்மை! கற்றதன் மூலம் செயல்களில் அடையும் ஆற்றலையே, முன்னோர் பெரிதும் மதித்தனர். இதுபோன்ற கனவுநிலை, அதன் அர்த்தம் இவற்றில் கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால், மனம் என்பது நாம் சமூகத்தில் கண்ட நிகழ்வுகளின் சேமிப்பு, அவ்வளவே. நாம் காண்பதே, அதுவே அதில் இருக்கும், காண்பது மனிதற்க்கு மனிதர் வேறுபடும். மேலும், அவை எந்தவிதத்திலும், ஆழ்மனம் எனும், செயலுக்கு உத்வேகம் தரும் நிலைக்கு, நம்மைக்கொண்டு செல்வதில்லை, அதனாலேயே அவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததில்லை.

விளைவு என்னாகிறது? அட! இது கனவில் வந்தால், அதிர்ஷ்டமா, சரிதான், அப்போ ஏன் இனி கஷ்டப்பட்டு ஓடியாடி ஆபிசில் சிரமப்படவேண்டும், இந்த கனவைக் கண்டு, அதிர்ஷ்டத்தினைப் பெறுவோம் என்ற மனநிலைக்கு சிலர் வந்துவிட்டார்கள். இதுதான், கனவின் பலன்கள். கனவுகள் என்பது, ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியிலேயே வருவதை, நாம் உணர முடிகிறது, ஏனென்றால், சிலருக்கு அதன்பின் தூக்கம் கலைந்துவிடும்,

மூளையின் கட்டளை : மூளையின் கட்டளைகள் மூலம் நமக்கு, தூக்கம் வருகிறது. சமயங்களில் அந்த இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படும்போது, தூக்கத்தில் கனவுகள் ஏற்படுகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில்தான், நம் அன்றாட நிகழ்வுகள் அதன் வீரியம் அறிந்து மேல்நிலையிலோ அல்லது ஆழ்மனதிலோ சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வை, தினமும் மூளை நடத்திக்கொண்டிருக்கும்,

எதனால் இப்படி கனவுகள் வருகின்றன? அவர்கள் நல்லவண்ணமே நடந்து வந்தாலும், மனதின் ஆழத்தில் உள்ள மனநிலையை, நாமில்லை, அவர்களே அறியமாட்டார்கள் என்பதே, உண்மை, இதை, மயக்கநிலைக்கு கொண்டுசெல்லும் மெஸ்மரிசம், அனஸ்தீசியா போன்ற செயல்களின் மூலம், நாம் சிறிது அறிய முடியும்.

ஒரு பாதிப்பு, தூக்கத்தில் உளறுவது : இதுவும், உறக்கத்தின் நிலையை கண்காணிக்கும் மூளையின் செயல்பாட்டில், ஏற்படும் வேறுபாட்டில் விளைவதாகும். ஆயினும் இந்த உளறல் என்பது பொதுவாக, நாம் அன்றாட வாழ்வில் அனுபவித்த நிகழ்வுகளின் வெளிப்பாடு அல்லது மனதில் நம்மை அறியாமல் பாதித்த சம்பவங்கள் மற்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும்.

இவற்றை எப்படி தடுப்பது? உறங்கச் செல்லும்முன், முகம் கைகால்களை நன்கு கழுவிவிட்டு, அதன்பின் உறங்கவேண்டும். உறங்கும் நேரத்தில், மொபைலை வைத்துக் கொண்டு, தேவையற்ற இணைய உலாவலோ, அரட்டையோ இல்லாமல், மொபைலை தூர வைத்துவிட்டு, மனதை வெறுமையாக்கிக்கொண்டு, இன்றைய நாளை நலமுடன் கழிய வைத்த இறைவனையோ அல்லது இயற்கையையோ நினைத்துக்கொண்டு, இடதுபுறம் ஒருக்கணித்துப் படுத்து உறங்க வேண்டும். தினமும் இப்படி உறங்கிவர, கனவுகள் பாதிப்பிலிருந்து விடுபடலாம். கனவுகள் வரவில்லை என்பதை, நீங்களே உறுதிசெய்துகொள்ளமுடியும், ஆயினும் உளறல்கள் வந்ததா என்பதை, மறுநாள் காலையில், நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

08 1510132931 2

Related posts

திரிபலா என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?

nathan

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு வரும் எலும்பு பலவீனம் நோய் – தடுக்கும் வழிகள்

nathan

இந்தியப் பெண்களுக்கு 5 ஆலோசனைகள்

nathan

ஆரோக்கியமா இருக்கணுமா… குடும்பத்தோட நேரம் செலவழியுங்க…

nathan

ஒயரிங்’ பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

nathan

35 வயதை கடந்துவிட்டால் உடல்நலனில் அக்கறை தேவை

nathan

கைகள் இல்லை… கால்கள் இல்லை… கவலையும் இல்லை! இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்…

nathan

பெண்கள் மெட்டி அணிவதால் என்ன பயன்:

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan