25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
03 1509710693 6
மருத்துவ குறிப்பு

கண்களை பாதுகாக்க தினமும் இரவில் இதை மட்டுமாவது செய்வீர்களா?முயன்று பாருங்கள்

நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் கண்களை சுற்றி கருவளையங்கள் உண்டாகின்றன. தொடர்ந்து டிவி, செல்போன், கணினி போன்றவற்றை பார்த்துக் கொண்டே இருப்பது, உங்களது கண்களை வறட்சியடைய செய்து, கண்களில் எரிச்சல் உண்டாக காரணமாக உள்ளன. இந்த பகுதியில் பார்வையை மேம்படுத்தவும், பார்வை குறைபாடு வராமல் பாதுகாக்கவும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி காணலாம்.

1. மலைவாழை
ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

2. பாவைக்காய் பாவைக்காயின் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.

3. கண்பார்வை அதிகரிக்க கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். கண் மங்கலாக தெரிவது சரியாகும்.

4. கண்பார்வை அதிகரிக்க கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

5. கண் நோய்கள் குறைய அன்னாசிப்பழம் ஒரு சுவையான பழமாகும். இது கண்நோய்களை போக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

6. கண் பார்வை தெளிவாக சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

7. கண் வறட்சி அதிக நேரம் கம்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பதால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

8. கண் அலர்ஜி தரமற்ற மேக்கப் பொருட்களை கண்களுக்கு உபயோகப்படுத்துவதன் மூலமாகவும், கண்களில் அலர்ஜி ஏற்படும். எனவே, சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம்.

9. மேக்கப் கண்களுக்கு மேக்கப் போட சிறந்த தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். அதோடு மட்டுமல்லாமல், இரவு உறங்க செல்வதற்கு முன்னர் கண்களில் உள்ள மேக்கப்பை கண்டிப்பாக நீக்க வேண்டியது அவசியம். இவற்றை சுத்தமான பஞ்சினால் நீக்குங்கள். இல்லை என்றால் கண்களில் எரிச்சல் உண்டாகும்.

10. புத்துணர்ச்சி பெற.. வெள்ளரிகாய், உருளைக்கிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
03 1509710693 6

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்!

nathan

இதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை

nathan

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் =தெரிந்துகொள்வோமா?

nathan

எச்சரிக்கை! பானைப் போன்ற தொப்பை இந்த 10 நோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?

nathan

சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தடுப்பூசி ஏன் போட வேண்டும் தெரியுமா?

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் நடக்கும் அற்புதம் என்ன தெரியுமா?

nathan

தலைவலியின் வகைகள்

nathan

டாக்டர்… எனக்கு ஒரு டவுட்டு!

nathan