25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
13 1510577518 6
தலைமுடி சிகிச்சை

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த பாட்டி வைத்தியத்தை முயன்று பாருங்கள்!

தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பது பலரது முக்கிய ஆசையாக இருக்கும். தலைமுடி நீளமாக இருந்தால் நீங்கள் விதவிதமான ஹேர் ஸ்டைலை ஃபாலோ செய்ய முடியும். ஆனால் தலைமுடியில் உண்டாகும் சில விதமான பிரச்சனைகளால் முடி உதிர்வு உண்டாகிறது… முடி உதிர்வுக்கு உள்ள முக்கிய காரணங்களில் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகுத் தொல்லை முக்கிய காரணமாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டினை நீங்கள் உணவின் மூலமாக தான் சரி செய்ய முடியும். இந்த பகுதியில் முடி வளர்வதற்கான சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை படித்து பயன் பெறுங்கள்.

1. அதிமதுரம்
அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.

2. நல்லெண்ணெய் முசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி சிறிதளவு எடுத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். முடி கருமையாகும்.

3. முட்டை முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்

4. அதிமதுரம் அதிமதுரத்தை நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும். வழுக்கையில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. நெல்லிக்காய் சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்

6. ரோஸ்மேரி ரோஸ்மேரி இலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி பிறகு சிறிது நேரம் வைத்திருந்து வடிகட்டி இந்த நீரை கொண்டு தலையை அலசி வந்தால் முடி உதிர்வது குறையும்.

7. தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு 9 நாட்கள் ஊற வைத்து பிறகு எடுத்து அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.

8. ஆலிவ் ஆயில் ஆலிவ் எண்ணெயில் 1 தேக்கரண்டி சீரகத்தை இடித்து போட்டு நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

9. பீட்ரூட் சாறு பீட்ரூட் சாறில் சிறிது வினிகர் கலந்து தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

10. பீட்ரூட் சாறு பீட்ரூட் சாறில் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

11. ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய்களை எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, ஒரு முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து ஒன்றாக கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

12. இலவங்க எண்ணெய் ஆலிவ் எண்ணெயில் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதிகமாக முடி உதிர்ந்து வழுக்கை போன்று இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைந்து முடி வளரும்.

13. இஞ்சி சாறு ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

15. கோரைக்கிழங்கு கோரைக்கிழங்கை எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் குளித்து வந்தால் பொடுகு குறையும்.

16. எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறு 4 ஸ்பூன் அதே அளவு தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி உதிர்வது குறையும். (வாரம் ஒரு முறை இவ்வாறு குளிக்க‌ வேண்டும்)

17. வேப்பமுத்து வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

18. முட்டை 1 முட்டை எடுத்து 2 தேக்கரண்டி தயிர், நல்லெண்ணெய் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

தேவையான பொருள்கள்: கரிசலாங்கண்ணிச்சாறு = 250 மி.லி பொன்னாங்கண்ணிச்சாறு = 250 மி.லி கீழாநெல்லிச்சாறு = 250 மி.லி கீரை விதை = 10 கிராம் கோரைக்கிழங்கு = 10 கிராம் சந்தனக்கட்டை = 10 கிராம் கார்போக அரிசி = 10 கிராம் வெட்டிவேர் = 10 கிராம் அகில் = 10 கிராம் தேங்காய் எண்ணெய் = 1 லிட்டர் இளநீர் = 200 மி.லி

செய்முறை: படி 1: கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் முழுச்செடியை எடுத்து நன்கு இடித்து சாறு எடுத்து கொள்ளவும். கீரை விதைகளை எடுத்து அதில் 200 மி.லி இளநீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். கோரைக்கிழங்கு, சந்தனக்கட்டை, கார்போக அரிசி, வெட்டிவேர் மற்றும் அகில் போன்றவற்றை நன்றாக இடித்து மாவு போல இடித்து எடுத்து கொள்ளவும்.

படி 2: ஒரு மண்பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் இதில் இலைச்சாறுகளை ஊற்றி மூடி வைத்து சிறு தீயாக எரித்து பிறகு மற்ற இடித்து வைத்த மூலிகைகளையும் போட வேண்டும். எல்லாம் நன்றாக கலந்து சாறு நன்றாக சுண்டியதும் ஒரு துணியை எடுத்து திரி போல திரித்து தைலத்தில் சிறிது நனைத்து எரித்து பார்க்க வேண்டும். திரியில் சொட சொடவென சத்தம் இருந்தால் மீண்டும் தைலத்தை சூடேற்ற வேண்டும். பிறகு மீண்டும் இது போல் சோதித்து தைலம் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற விட்டு வடிகட்டி பயன்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை: தினமும் இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வரலாம். 7 நாட்களுக்கு ஒரு முறை இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கூந்தல் மிகவும் கருமையாக நீண்டு வளரும்.

குறிப்பு: சளி பிடித்திருக்கும் போதும், உடல் நலம் சரியில்லாத போதும் இந்த தைலத்தை பயன்படுத்த கூடாது. மேலும் மழைக்காலங்களிலும் பயன்படுத்த கூடாது.13 1510577518 6

Related posts

இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தினால் உங்கள் முடி நீளமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பொடுகு தொல்லையா?

nathan

பொடுகை விரட்ட வேப்பம்பூ

nathan

முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய 9 மூலிகைகள் !…..

nathan

இப்படி முடி வெடிக்குதா? ஒரே நாள்ல சரியாக தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க…

nathan

ஒரே வாரத்தில் பொடுகைப் போக்கும் அற்புதப் பொருள் பற்றி தெரியுமா?

nathan

முடி உதிர்வை தடுக்க எழிய வழிமுறைகள்..!தலைக்கு எண்ணெய்யை ஒரு போதும் இப்படி தேய்காதீர்கள்..

nathan

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? அப்ப இத கொண்டு மசாஜ் செய்யுங்க…

nathan