36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு எண்ணெய் எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் ..

அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு எண்ணெய் மிக முக்கியம். எந்தெந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்லது, அவற்றை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

* அழகான கூந்தலுக்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்தி உச்சந்தலையில் கால் மணி நேரம் ஊறவிட்டு குளித்தால், உச்சந்தலைக் குளிர்ந்தால், உடல் சூடு தணிந்துவிடும். உடல் சூடு தணிந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

* சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை லேசாகச் சுடவைத்து, அதில் ஒரு பூண்டு பல், இரண்டு மிளகு போட்டு பொரிய விடுங்கள். இது ஆறியதும், கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, ஷாம்புவோ அல்லது சீயக்காயோ பயன்படுத்தி தலைக்குக் குளித்து வரலாம்.

* தலைக்கு ஆலிவ் ஆயில் தடவுவதால் கறுப்பாக்கும் தன்மைகொண்டது. இதில் உள்ள இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், லேசாகச் சூடாக்கி தலையில் ஊறவைத்துக் குளியுங்கள். சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை நன்கு ஆற வைத்து தலைமுடி, புருவம் போன்ற இடங்களில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளியுங்கள்.

* தேங்காய் எண்ணெயை ஒருநாள் விட்டு ஒருநாள் வேர்க்கால்களில் தடவி, சீப்பால் வாரிவிடுங்கள். கூந்தல் உடையாமல், சிக்கு விழாமல் இருப்பதற்கு வெளிப்புற பூச்சாகத் தேங்காய் எண்ணெய் தடவுவது ரொம்பவே அவசியம். இதில் ஏற்படும் சிக்கு வாடையை போக்க மருக்கொழுந்து, மருதவனம், செண்பகப்பூ போன்றவற்றை உலர வைத்து எண்ணெய்யில் போட்டு உபயோகப்படுத்தலாம்.

Related posts

வழுக்கைத் தலையாவதை தடுக்கும் பாட்டி வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறையில் பொடுகை எளிதாக போக்குவது எப்படி..?அப்ப இத படிங்க!

nathan

சில இயற்கை வழிகள்…! முடியின் அடர்த்தியை அதிகரிக்க..

nathan

நீளமான கூந்தலுக்கான அழகு குறிப்புகள்

nathan

சுருட்டை முடியை பராமரிக்க சில சூப்பர் டிப்ஸ்….!

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!!

nathan

ஏன் இளமையிலேயே தலையில் வழுக்கை விழுகிறது என்று தெரியுமா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க சின்ன வெங்காயம் !….

sangika

நீளமான முடியை பெற சர்க்கரை ஸ்க்ரப் எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan