31 1509426952 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தினமும் இதை இரண்டு முறை செய்யாவிட்டால் சிக்கல் தான்!

மலச்சிக்கல் என்பது இன்று பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். தினமும் காலை மற்றும் இரவு என இருவேளைகள் மலம் கழிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லை என்றால் உடலில் நச்சுக்கள் சேர்ந்து விடும். மலச்சிக்கல் உடலில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. ஆனால் இதனை நீங்கள் வீட்டிலேயே இயற்கை முறையில் சரி செய்யலாம். இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

ஜூஸ் வகைகள்
நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும். ஜூஸ் போன்றவற்றை அருந்தலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவும்.

கீரை தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலை விரட்டலாம். ஆனால் கீரை வகைகளை காலை அல்லது மதிய நேர உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இரவு கீரைகளை சாப்பிட கூடாது. இது ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

கொய்யாப் பழம் கொய்யாப் பழம் ஆப்பிள்க்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறு 5 மி.லி எடுத்துக் கொண்டு அதன் உடன் ஒரு சிட்டிகை உப்பு, 300 மி.லி வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும். உடல் உற்சாகம் பெரும்.

எள் எள் விதையைப் பொடி செய்து பனை வெல்லத்துடன் கலந்து 4 முதல் 6 தேக்கரண்டி அளவிற்கு தினமும் உண்டுவர மலச்சிக்கல் தீரும்.

மோர் மோருடன் இஞ்சி, கல் உப்பு, பெருங்காயம் கலந்து உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.

செம்பருத்தி இலை செம்பருத்தி இலைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. இதனை தினமும் இருவேளை செம்பருத்தி இலைகளை தூள் செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

மாம்பழம் இரவு வேளைகளில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும். உணவு சாப்பிட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு மாம்பழத்தை சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்த்து பழங்களை சாப்பிட்டால் வாயு உற்பத்தியாகிவிடும்.

தக்காளி தக்காளி தினசரி வீட்டில் உபயோகக்கூடிய ஒன்று தான், குடல், இரத்தம் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமையை தரும் தக்காளி மலச்சிக்கலையும் போக்கும்.

உலர் திராட்சை உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.

மலச்சிக்கல் மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

வெங்காயம் வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கிசாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

பச்சைக் காய்கறிகள் நிறைய பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல மருந்து.

31 1509426952 1

Related posts

தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான அல்ல அமெரிக்க இதய சங்கம் எச்சரிக்கை

nathan

படுவேகமா உங்க எடையை குறைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான 10 ரிஸ்க்குகள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…30 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா? ஆண்கள் படிக்க வேண்டாம்!!

nathan

கண்ணெரிச்சலில் இருந்து தீர்வுக் காண ஸ்பெஷல் எண்ணெய் குளியல்!!!

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்…

nathan

செய்வினை மற்றும் திருஷ்டி கழிக்க ஏன் எலுமிச்சை பயன்படுத்துகிறார்கள்?

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… திருமணமான பெண்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்!

nathan

உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!

nathan