25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
19 1508396635 4tight
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆண்களை அதிகம் தாக்கும் ப்ரோஸ்டேட் புற்று நோயின் அறிகுறிகளும் , வராமல் தடுக்கும் உணவுகளும்!!

புற்று நோய் என்பது உயிரை குடிக்கும் நோய் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் பரவியுள்ளது. இந்த எண்ணத்தை மனதில் இருந்து அழிக்க வேண்டும். எல்லா வகைப் புற்று நோய்களும் இறப்பை ஏற்படுத்துவது இல்லை. மற்றும் கட்டிகள் எல்லாம் புற்று நோயின் அறிகுறி இல்லை. அதிக வீரியம் உள்ள கட்டிகள் , வேகமாக பரவ கூடிய கட்டிகள் தான் புற்று நோய் கட்டிகள். மற்ற கட்டிகள் சாதாரணமானதுதான்.

பொதுவாக பெண்களை அதிகமாக தாக்குவது மார்பக புற்று நோய். அதே போல் ஆண்களை அதிகமாக தாக்கும் புற்று நோய் , ஆண்மை சுரப்பி புற்று நோய். இதனை ப்ரோஸ்டேட் கேன்சர் என்று கூறுவர். கடந்த 20 வருடங்களில், இந்தியாவிலும் , மற்ற ஆசிய நாடுகளிலும் இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது ப்ரோஸ்டேட் என்னும் சுரப்பியில் உண்டாகும் புற்று நோய். இந்த சுரப்பி, சிறுநீர்ப்பைக்கு கீழும், மலக்குடலுக்கு முன்னும் உள்ளது. பொதுவாக இந்த புற்று நோய் பற்றிய தகவல் பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றிய பலரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த பதிவு கொடுக்கும் என்று நம்புகிறோம்.

இந்த வகை புற்று நோய் 50 வயத்திற்கு மேல் உள்ள ஆண்களை தாக்குகிறது. இதனை வரவிடாமல் தடுக்க நாம் இள வயதில் இருந்தே விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம்.

ப்ரோஸ்டேட் கேன்சரின் அறிகுறிகள்:

சிறுநீரில் இரத்தம்:

சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுவது இந்த நோயின் ஆரம்ப அறிகுறியாகும். சிறுநீர் கழிக்கும்போது இரத்தம் வந்தால் அதனை அலட்சியம் செய்ய வேண்டாம். ஆரம்ப நிலையிலேயே இதனை கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், இதன் வளர்ச்சியை தடுத்து பூரண குணம் அடைய முடியும்.

எரிச்சல்: சிறுநீர் கழிக்கும் போது ஒரு வித எரிச்சல் தோன்றும். பொதுவாக இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. பல உடல் உபாதைகளுக்கு இது ஒரு அறிகுறிதான். இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது நல்லது.

வலி: சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படலாம். அல்லது ஒரு வித அழுத்தம் ஏற்படலாம். இத்தகைய வலி மற்றும் அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.

இறுக்கம்: கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி செய்வதால் உடலின் கீழ் பகுதிகளில் ஒரு வித இறுக்கத்தை உணர்வீர்கள். அந்த இறுக்கம் தொடர்ச்சியாக உடலின் கீழ் பகுதிகளில் அதாவது இடுப்பு, தொடை போன்ற இடங்களில் , மற்றும் எலும்புகளில் இருந்தால் அது ப்ரோஸ்டேட் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம்.

கட்டுப்படுத்த முடியாத சிறுநீர்: குறைந்த இடைவெளியில் சிறு நீர் கழிப்பது, கட்டுப்படுத்த முடியாத படி சிறுநீர் வருவது போன்றவை நீரிழிவு மற்றும் ப்ரோஸ்டேட் கேன்சரின் அறிகுறிகள். இவை இரண்டுமே தவிர்க்க முடியாத பிரச்சனை தான். அதனால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

எலும்புகளில் வலி: நீண்ட நாட்களாக எலும்புகளில் வலி இருந்தால் அதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இதுவும் ப்ரோஸ்டேட் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம்.

ப்ரோஸ்டேட் கேன்சரை தடுக்கும் உணவுகள்: நமது உணவு முறையிலேயே , ப்ரோஸ்டேட் கேன்சரை தடுப்பதற்கான வழி முறைகள் உள்ளன. அவற்றை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

தக்காளி: தக்காளியில் உள்ள லைகோபீன் ப்ரோஸ்டேட் சுரப்பியை ஆரோக்கியமாக வைக்க உதவிடுகிறது. வேகவைத்த தக்காளி நிறைந்த பலனை அளிக்கிறது. தக்காளியை அப்படியே உண்பதை விட தினசரி உணவில் வேக வைத்து உண்ணுவதால் ப்ரோஸ்டேட் கேன்சர் தடுக்கப்படுகிறது.

சோயா உணவுகள்: ஆரோக்கியமான உடலை பெற்று ப்ரோஸ்டேட் கேன்சரை தடுக்க சோயா உணவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சோயா நகெட்ஸ் , டோஃபு, சோயா பால் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. சோயா உணவுகள் ஐசோபிளவன்களை தருகின்றன. இவை ப்ரோஸ்டேட் சுரப்பியை ஆரோக்கியமான முறையில் வைக்க உதவுகின்றன.

வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகள்: வேர்க்கடலை மற்றும் பருப்புகள் ப்ரோஸ்டேட் கேன்சரை தடுக்க சிறந்த உணவுகளாகும். மாலை வேளையில் பசியாக இருக்கும்போது இவற்றை சிற்றுண்டிகளாக எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும். இவற்றிலும் ஐசோபிளவன் உள்ளது.

பச்சை காய்கறிகள்: எல்லா வித நோய்களுக்கும் பச்சை காய்கறிகள் சிறந்த மருந்தாகின்றன. முடிந்த அளவிற்கு நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கால்சியம் அளவை கட்டுப்படுத்துங்கள்: உடலில் கால்சியம் அளவு அதிகரிக்கும்போது ப்ரோஸ்டேட் சுரப்பிகள் சேதமடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே உடலில் கால்சியத்தின் அளவை கட்டுப்படுத்துவது நல்லது. கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

ஜின்க்: தினமும் 1500 கிராம் அளவுக்கு ஜின்க் சேர்த்துக் கொண்டால் ப்ரோஸ்டேட் கேன்சர் அபாயம் 51% தடுக்க படுகிறது. பூண்டு, காளான், எள்ளு, பீன்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. இவற்றில் ஜின்க் அதிகம் உள்ளது. ப்ரோஸ்டேட் கேன்சரின் அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்கும் விதத்தை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த அறிகுறிகள் தென்படும்போது இவை சாதாரணமானவை என்று அலட்சியமாக இல்லாமல், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே கூறிய உணவுகளை எடுத்துக் கொள்வது மூலம் இந்த கேன்சர் வராமல் தடுக்கலாம். முடிந்த வரை ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கொண்டு நோய்களை தடுத்து ஆரோக்கியமாக வாழ்வோம்.19 1508396635 4tight

Related posts

தயக்கத்தை விரட்டுங்கள்!

nathan

உணவுப் பழக்கமும் மலச் சிக்கலும் எப்படி மூல நோயை உருவாக்கும்?

nathan

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

மாத்திரை வேண்டாம்… பக்கவிளைவுகள் இல்லை! தூக்கம் வரவழைக்கும் `4-7-8′ டெக்னிக்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்சூடு, வயிற்றுவலிக்கு நிவாரணம் தரும் வெந்தயம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் தொப்புள் கொடியைப் பாதுகாக்க சில டிப்ஸ்…

nathan

மரிக்கொழுந்து பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் ..!

nathan

என்ன காரணம்? எதாவது விஷேசம் உண்டா என்று கேட்ட சூழல் மாறி, எந்த குழந்தையின்மைமருத்துவமனைக்கு போகப்போறிங்கஎன்று?

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகள் உங்க மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும்!

nathan