25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
17 1508226067 3
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இந்த 10 வகை உணவுகள் உங்க தைராய்டு நோயை குணப்படுத்தும்!!முயன்று பாருங்கள்

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி.
நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி.

உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்வரை இருக்கும்.

தைராய்டு சுரப்பி : தைராய்டு சுரப்பி, ‘தைராக்சின்’ (T4), ‘டிரைஅயடோதைரோனின்’ (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது. தைராய்டு செல்களில் ‘தைரோகுளோபுலின்’ எனும் புரதம் உள்ளது. இதில் ‘டைரோசின்’ எனும் அமினோ அமிலம் உள்ளது. தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினை இணைத்து வினைபுரிந்து T4 மற்றும் T3 ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன.

ஏன் தேவை? : தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை எனப் பலவற்றுக்கு காரணமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கும் தைராய்டு சுரப்பி தேவை. மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஹைப்போ தைராய்டு : தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது. முகம் வீங்கும்,முடி கொட்டும்,தோல் வரண்டு போகும்,பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.

தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு’ ( Hyperthyroidism ) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும்.அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் வெளியேறும்.

காரணங்கள் : உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. பரம்பரை பரம்பரையாக வருவது, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பக்காலத்தில் தாய் சந்திக்கும் மன ரீதியிலான பிரச்சனைகள், தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, அடிக்கடி எமோஷனல் ஆகி ஸ்ட்ரஸ்க்கு உள்ளாவது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்றவை தான் தைராய்டு பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது.

பால் : நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம். அதோடு பாலில் அதிகளவு கால்சியம் சத்தும் இருப்பதால் இதனை எடுத்துக் கொண்டால் தைராய்டு பிரச்சனையை தவிர்க்கலாம்.

காளாண் : செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று, இதனையும் நிறையப் பயன்படுத்தலாம்.

பசலைக் கீரை : பசலையில் அர்ஜினின், லியூசின், ஐஸோலியூசின், லைசின், திரியோனின் மற்றும் டிரிப்டோபேன் ஆகிய அமினோ அமிலங்களும் பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கி உள்ளன. இவற்றோடு சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கரோட்டினாயிட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின் கே சத்துகளும் அதிகம் அடங்கியுள்ளன. இது தைராய்டு நோய் வராமல் தடுத்திடும்.

முட்டை : ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.இதில் கால்சியம் மட்டுமின்றி அதிகப்படியான அயோடின் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் தைராய்டு பாதிப்பிலிருந்து தப்பிக்க தினம் ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.

தானியங்கள் : தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது.

உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாதுஉப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. அதே போல அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. இதில் உள்ள அயோடின் சுரப்பி சீராக இயங்க வைத்திடும்.

பெர்ரீ : ஸ்ட்ராபெர்ரீ,ப்ளூபெர்ரீ மற்றும் ரோஸ்ப்பெர்ரீ என ஏதேனும் ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளலாம், இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனை நீங்கள் தினமும் கூட சாப்பிடலாம்.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி சாப்பிடுவதால் அவை உடலில் உள்ள நச்சினை வெளியேற்றச் செய்யும் ஜீனை தூண்டச் செய்திடும். ப்ரோக்கோலியில் விட்டமின் ஏ,சி,கே அதிகமிருக்கின்றன. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்று நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். ப்ரோக்கோலி இல்லையெனில் காலிஃப்ளவர்,முட்டை கோஸ் ஏதேனும் எடுக்கலாம்.

கடல் உணவுகள் : கடலிருந்து கிடைக்க கூடிய மீன்,நண்டு முதலிய உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவற்றில் அயோடின் சத்து அதிகமிருக்கும். சால்மன் மீனில் விட்டமின் டி,ஒமேகா 3ஃபேட்டி ஆசிட் அதிமிருக்கிறது. ஃபேட்டி ஆசிட் உடல் தானாக சுரக்காது என்பதால அவற்றை நாம் உணவிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்17 1508226067 3

Related posts

கோடைக்கு ஏற்ற கீரைகள்!

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்… இத்துனூண்டு “ஏலக்காய்”க்குள்ள இவ்ளோ நன்மை இருக்கா ?

nathan

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த 4 இயற்கை உணவு பொருட்கள்!

nathan

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்

nathan

ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

nathan

வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு

nathan