29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 1508145328 8
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் செஞ்சா ஈஸியா கொழுப்பு கரையும் தெரியுமா? முயன்று பாருங்கள்!

கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம்.

இன்றைக்கு ‘கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.
நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது.

கொலஸ்ட்ரால் அளவு : கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

கொழுப்பு வகைகள் : நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

கொழுப்பை கரைக்கணும் : தேவையற்ற கொழுப்பு. அதாவது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்து விட்டதென்றால் உங்களின் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் இதனால் உடல் எடை கூடும். அதனை தவிர்க்க கொழுப்பை கரைப்பது மிகவும் அவசியமாகும். தீவிரமான பயிற்சிகள் ஏதும் இல்லையென்றாலும் உங்களுடைய பழக்கவழக்கங்கள் மற்றும் உங்களுடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே கொழுப்பை எளிதாக கரைக்க முடியும் அவை என்னென்ன என்று தெரியுமா?

சிறிய தட்டுக்கள் : சாப்பிடும் போது சிறிய தட்டுகளை பயன்படுத்துங்கள். அளவில் பெரிதாக இருப்பதால் அளவுக்கு அதிகமான உணவுகளை போட்டு சாப்பிடக் கூடிய சூழல் உருவாகலாம் இதனால் உணவு செரிமானம் அடைய தாமதமாகும். இதே சிறிய தட்டில் சாப்பிட்டால் குறைந்த அளவு மட்டுமே சாப்பிட முடியும் அதோடு முழுதாக சாப்பிட்ட நிறைவு கிடைக்கும்.

காலையில் ப்ரோட்டீன் : காலை உணவாக ப்ரோட்டீன் நிறைந்த உணவு எடுத்துக் கொள்ளுங்கள். காலையில் ப்ரோட்டீன் நிறைந்த உணவு எடுத்துக் கொள்வதால் அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான எனர்ஜி உங்களுக்கு கிடைத்திடும். இதனால் மற்ற நேரங்களில் தேவையற்ற தீனி வகைகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

எண்ணங்கள் : சாப்பிடும் போது உங்கள் எண்ணம் கவலையாகவோ அல்லது தீவிரமாக எதாவது யோசித்துக் கொண்டிருந்தாலும் அது உங்கள் எடையை பாதிக்கும். ஏனென்றால் உங்கள் கவனம் சாப்பாட்டில் இல்லை இதனால் அளவு மீறி நிறைய உணவுகளை எடுத்துக்கொள்வீர்கள். சில நேரங்களில் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் கூட ஏதும் சாப்பிடாதது போன்று தோன்றிடும். அதனால் சாப்பிடும் போது கவனமாக இருங்கள். டிவி பார்ப்பது, மொபைல் போன் நோண்டுவது என உங்கள் கவனத்தை திசை திருப்பி சாப்பிடும் வழக்கத்தை கைவிடுங்கள்.

உப்பு : ஒரு நாளைக்கு எவ்வளவு ஸ்பூன் உப்பு சாப்பிடுகிறீர்கள் என்று கவனியுங்கள். சோடியும் உங்கள் உடலில் அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது தான் நல்லது. நாம் எடுத்துக் கொள்ளும் உப்பு ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராம் குறைவாக இருக்க வேண்டும். உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டால் தொப்பை அதிகரிக்கும். அதனால் முடிந்தளவு உப்பு நிறைய எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

பசித்தவுடன் உணவு : எந்த வேளை உணவாக இருந்தாலும் லேசாக பசிக்க ஆரம்பித்ததும் சாப்பிட்டு பாருங்கள். இது உங்கள் உடலில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். காலை உணவே சரியாக ஜீரணமாகத போது டீ, வடை என்று எடுத்துக் கொள்வது அது ஜீரணமாகிக் கொண்டிருக்கும் போதே மதிய உணவை எடுத்துக் கொள்வது என தொடர்வதால் எந்த உணவும் முழுதாக ஜீரணமாகாமல் கொழுப்பாக உடலில் சேரும் நிலைமை உருவாகிறது. முழுதாக செரிமானம் ஆன பின்பு தான் உங்களுக்கு பசியுணர்வு தூண்டும். அப்போது நீங்கள் சாப்பிடச் செல்லலாம்.

பருப்பு வகைகள் : முடிந்தளவு உங்கள் உணவுகளில் அதிகம் பருப்பு வகைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உடலியல் இயக்கங்கள் சீராக இயங்குவதற்கு புரதச்சத்து மிகவும் அவசியமாகும்.பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகமிருக்கிறது. அதோடு இதில் புரதம் மட்டுமின்றி எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதோடு இவற்றில் குறைவான கலோரி இருப்பதால் இதனை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற கவலை வேண்டாம்.

சர்க்கரை : சர்க்கரை கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்தது. நாம் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் உடலில் செரிமானம் ஆகி சக்தியை தருகிறது.கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருக்கும் போது,அது உடலில் கொழுப்பாக சேமித்துவைக்கப்பட்டு எப்போழுதெல்லாம் எனர்ஜி தேவையோ,அப்போதெல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது. Loading ad அதே போல் சர்க்கரையும் குளுகோஸாக மாற்றப்பட்டு, இவ்வகையில் சேமித்து பின் உபயோகப்படுத்தபடுகிறது. இதுதான் நம் உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றம். ஆனால் செயற்கை முறையில் கலக்கப்படும் சர்க்கரைகள்,குடலிலுள்ள நல்ல பேக்டீரியக்களின் செயல்களை மாற்றுகிறது. (அவைகள்தான் செரிமானத்திற்கு உதவிபுரிபவை). இதனால் சர்க்கரை உடலிலேயே தங்கி இரத்தத்தில் அளவை கூட்டுகிறது. இது தொடர்ந்தால்,சர்க்கரை வியாதி, உடல் பருமனில் போய் நிற்கும். சர்க்கரை அளவு அதிகரித்தால், வயிறு, இடுப்பு, தொடை ஆகியவற்றில் தங்கி உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது.

ஒமேகா 3 : உடலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடலால் உருவாக்க முடியாது. எனவே, இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்வது அவசியம். எண்ணெய் சத்துமிக்க மீன், வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.

ரெட்,க்ரீன்,ஆரஞ்சு : நீங்கள் சாப்பிடும் உணவுகளில் எப்போதும் சிகப்பு,பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் அல்லது பழங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிறங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். அதோடு இதன் மூலமாக உங்கள் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

இரவு உணவு : பொதுவாக மாலை நேரங்களில் நமக்கு அதிகமாக உடல் உழைப்பு இருக்காது. சிலர் மட்டும் வாக்கிங் செல்வார்கள். அதுவும் இரவு உணவுக்கு முன்பு வாக்கிங் செல்வது தான் வழக்கம். வாக்கிங் சென்றுவிட்டு வந்த பிறகு உணவு சாப்பிட்டு அப்படியே தூங்கிட வேண்டும் என்று தான் சொல்வார்கள். இரவுகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவு 7.30 மணிக்கு எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. அதன் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து தூங்கச் செல்லலாம்.

எலுமிச்சை : காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். இது உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பினை அகற்ற உதவி புரியும். அதோடு உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்குவதால் உணவு எளிதாக செரிமானம் அடையும்.

தண்ணீர் : நாம் சாப்பிட்ட உணவு துரிதமாக சீரணமாவதற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று அதோடு எப்போதும் புத்துணர்சியுடன் இருக்கவும் தண்ணீர் குடிப்பது அவசியமானது. தண்ணீர் அல்லது நீராகாரங்கள் எது வேண்டுமானாலும் குடிக்கலாம். செயற்கை குளிர்பானங்கள் குடிக்க கூடாது. உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் சத்து இருந்தால் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவது குறையும் அதோடு சர்க்கரை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.16 1508145328 8

 

Related posts

அலுவலகம் செல்வோர் எளிதில் உடல் எடைக் குறைப்பதற்கு உதவும் உணவுப் பழக்கவழக்கம்!!!

nathan

இதோ வந்தாச்சு ஒயிட் டீ உடல் எடையை குறைக்க!! எப்படி தயாரிப்பது?

nathan

ஊளைச்சதைக் கோளாறு

nathan

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

nathan

48 மணிநேரத்தில் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இந்த வழிய ஃபாலோ பண்ணுங்க…

nathan

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கும் வழிகள்

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கலாம்!

nathan

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க.

nathan