28.6 C
Chennai
Tuesday, May 21, 2024
24 1508849893 4
சரும பராமரிப்பு

நீங்கள் குப்பையில் எறியும் தேயிலை, ஆரஞ்ச் தோலில் இத்தனை நன்மைகளா? அப்ப இத படிங்க!

நாம் முகத்திற்கு கொடுக்கும் கவனத்தை உடலின் பிற பகுதிகளுக்கு கொடுப்பதில்லை. உடலின் பிற பகுதிகளுக்கும் அதே அளவு கவனத்தை கொடுத்தால் தான் பார்ப்பதற்கு அழகாக தெரியும். எனவே உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட கவனத்தை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் பார்லர்களுக்கு சென்றால் உடலின் அனைத்து பகுதிகளையும் பராமரிக்க நிச்சயமாக பல ஆயிரங்கள் செலவாகும். ஆனால் நீங்கள் வீட்டிலேயே உள்ள பொருட்களை கொண்டு உங்களது அழகை பராமரித்தால் செலவும் மிச்சம், நீங்கள் எந்த விதமான பின் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருக்காது.

1. தேயிலை தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

2. ஆரஞ்ச் தோல் ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

3. தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

4. ஆரஞ்சு பழம் ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

5. எலுமிச்சை சாறு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

6. தேன் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

7. எண்ணெய் நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

8. முட்டை கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

9. வேப்பிலை வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வியர்க்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

10. கண்கள் இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

11. கால்கள் கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

12. இரவு செய்ய வேண்டியது இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

13. எண்ணெய் பசை ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

14. முட்டையின் வெள்ளை கரு முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

15. மோர் மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

16. வாழைப்பழம் பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

17. குளிக்கும் போது பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

18. தேங்காய் பால் தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

19. தக்காளி பழம் தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

20. ஆலிவ் ஆயில் தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.24 1508849893 4

 

Related posts

கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்

nathan

பெண்களே அதிகமா வியர்குதா? தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

உடல் துர்நாற்றத்தை நீக்கும் முறைகள்!

sangika

உங்கள் சருமத் துவாரங்களை ஆழமாக சுத்தம் செய்யும் பீல் ஆப் மாஸ்க்குகள்

nathan

கருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்?

nathan

அக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்

nathan

எச்சரிக்கை! இந்தமாதிரி தோலில் வெண்புள்ளிகள் வந்தா அலட்சியம் வேண்டாம்…

nathan

சில டிப்ஸ்!!! கழுத்து, முகத்தில் மருவா… எளிதாக அகற்ற….

nathan

மென்மையான சருமம் வேண்டுமா?

nathan