25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
19 1508407712 13
ஆரோக்கிய உணவு

நீங்கள் இரண்டு கிளாஸுக்கு அதிகமா டீ குடிக்கிறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!!

தேநீர் பலரது உற்சாக பானமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ உணவில்லாமல் கூட இருந்துவிடுவேன் ஆனால் டீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று சொல்லி ஒரு நாளை ஐந்து டீ பத்து டீ என்று குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வொர்க் டென்சன், தூக்கம் வருது அதனால அப்பப்போ டீ குடிக்கிறேன் என்று தங்கள் வசதிக்கு ஏதேனும் காரணங்களை சொல்லிக் கொண்டு டீயை அளவில்லாமல் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் டீ ஆரோக்கியமானது தான். அதில் எந்த கெமிக்கல்களும் சேர்க்காத பட்சத்தில் அதுவும் அளவுடன் எடுத்துக் கொண்டால் மட்டுமே நன்மை தரக்கூடியாதாகும். அதை விடுத்து ஒரு நாளைக்கு இரண்டு டீக்கு மேல் குடித்தால் அது உங்களது உடல் நலனை வெகுவாக பாதிக்கும்.

புத்துணர்ச்சி : 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ, காபி அருந்தக் கூடாது. புத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறார்கள். ஆனால், இதில், உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின் (Caffeine)என்ற ஒரு ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம். இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். காஃபின், தேநீரில் குறைவாகவும் காபியில் அதிகமாகவும் இருக்கிறது. இது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மைகொண்டது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கேஃபைன் : ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். டீயில் இருக்கும் கேஃபைன் நம் உடலுக்கு நன்மை பயக்கிறது. ஆனால் இது அதிகளவில் சேரும் போது பல்வேறு உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்திடும். சோர்வு,இதயத்துடிப்பு அதிகரிப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கவனச்சிதறல் : ஒரு நாளில் அதிகப்படியான டீ குடித்து வந்தால் உங்களுக்கு தொடர்ந்து ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் உண்டாகலாம். மனரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பீர்கள்.

எலும்பு : இது மிகவும் ஆபத்தான நோய். டீ தொடர்ந்து அதிகமாக குடித்து வந்தால் இந்த நோய் ஏற்படக்கூடும். டீயில் அதிகப்படியான ஃப்லூரைட் இருக்கிறது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் ஃப்ளூரைட் டாக்ஸிட்டி ஏற்படக்கூடும். இதனால் எலும்புகளில் வலி,எலும்புகள் தேய்மானம் ஆகியவை ஏற்படக்கூடும்.

ப்ரோஸ்டேட் கேன்சர் : சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுப் படி ஒரு நாளில் ஐந்து கப் டீக்கு மேல் அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புகள் இருக்கிறதாம். உணவுமுறை,வயது,குடும்பப் பின்னணி என எந்த காரணங்களின்றியும் அதிகப்படியான டீ குடிப்பதாலேயே ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கிட்னி : இது கொஞ்சம் அரிய வகையானது தான். ஐஸ் டீ அதிகமாக குடித்து வந்தால் இப்பிரச்சனை ஏற்படக்கூடும். கிட்னியில் கற்கள் வருவது, கிட்னி செயலிழந்து போவது ஆகியவை உண்டாகும். ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக பத்து டீ பதினைந்து டீ என்று குடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை உண்டாகிறது.

மலச்சிக்கல் : காலை எழுந்ததும் சூடாக டீ குடிப்பது என்பது எல்லாருடைய வழக்கமாக இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் தொடர்ந்து டீ குடிப்பதினால் அது சரியாக உணவை செரிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்திடும். டீயில் இருக்கும் தியோஃபைலின் என்ற கெமிக்கல் அதிகமாக உடலில் சேரும் போது அது நம் உடலில் உள்ள தண்ணீர் சத்தை எல்லாம் உறிந்துவிடும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது.

மலச்சிக்கல் : காலை எழுந்ததும் சூடாக டீ குடிப்பது என்பது எல்லாருடைய வழக்கமாக இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் தொடர்ந்து டீ குடிப்பதினால் அது சரியாக உணவை செரிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்திடும். டீயில் இருக்கும் தியோஃபைலின் என்ற கெமிக்கல் அதிகமாக உடலில் சேரும் போது அது நம் உடலில் உள்ள தண்ணீர் சத்தை எல்லாம் உறிந்துவிடும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது.

கர்பிணிப்பெண்கள் : அளவில்லாமல் அடிக்கடி தொடர்ந்து டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் கர்ப்பிணிப்பெண்கள் அதனை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது. இந்த கேஃபைன் கருவை சிதைக்கும் தன்மை கொண்டது.

தூக்கமின்மை : டீயில் இருக்கும் கேஃபைன் அதிகப்படியாக உடலில் சேர்ந்தால் அது டியூரிட்டிக் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்திடும். இதனால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இரவில் தூக்கத்தின் போது அடிக்கடி சிறுநீர்கழிக்கச் செல்வதால் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. தூங்கும் நேரம்,எழும் நேரம் என எல்லாமே பாதிக்கப்படும். தூக்கமின்மையினால் வரக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளும் மெல்ல வந்து சேரும்

இரும்புச் சத்து : அதிகப்படியாக டீ தொடர்ந்து குடித்து வந்தால் இரும்புச் சத்து நம் உடலில் சேரவிடாது. இதனால் ரத்த சோகை ஏற்படக்கூடும். இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுக்கிறது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.

டீ ஹைட்ரேசன் : ஒரு மணி நேரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கும் நேரத்தில் ஒரு தேநீர் குடித்தால் தண்ணீர் தாகம் எடுக்காது.இதனால் இரண்டு கிளாஸ் அரை கிளாஸாக குறைந்துவிடும்.

அடிமை :
காஃபின் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல், டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்னை வரலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தலைசுற்றல் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.

டீ டஸ்ட் :
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீ எல்லாமே டஸ்ட் டீதான். முதல் தரம், இரண்டாம் தரம் என நான்கு வகைகளில் தேயிலை கிடைக்கும். மூன்றாம் தரமான டஸ்ட் தேயிலை மட்டுமே, நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
நான்காம் தரத் தேயிலைத் தூள்கள் தெருக்களில் உள்ள தேநீர்க் கடைகளுக்கு செல்கிறது. டஸ்ட் தேயிலையில் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள், கலப்படங்கள் சேர்க்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.19 1508407712 13

Related posts

உங்களுக்கு தெரியுமா திராட்சையை அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…நல்லெண்ணெய் உபயோகித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?

nathan

இவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் !

nathan

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கும் நிலக்கடலை

nathan

இதெல்லாம் குழந்தைகளின் எலும்புகளின் வளா்ச்சியை பாதிக்கும் தெரியுமா?

nathan

பூவன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

nathan

1 பழம்… 14 பலன்கள்… பிரமிக்கவைக்கும் மாதுளை!

nathan