34.5 C
Chennai
Sunday, Jul 13, 2025
18 1503057262 6orangejuice 1
மருத்துவ குறிப்பு

உங்க உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது.
உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும்.

வைட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும்.

எனவே, வைட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று வைட்டமின் சி. உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

தேவையானப் பொருட்கள்:
ஆரஞ்சு ஜூஸ் – 1/2 டம்ளர்
கிவி ஜூஸ் – 1/2 டம்ளர்
மிளகுப் பொடி – 1/2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
கொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமாக வைத்துககொள்ள உதவும். மிளகுத தூள் உடலில் வைட்டமின் சி யை ஈர்த்துக்கொள்ள உதவக்கூடியது.18 1503057262 6orangejuice 1

Related posts

பெண்களே எலும்புகள் வலிமையோடு இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க…

nathan

பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?

nathan

துப்பட்டாவே ஆயுதம் ஆகும்!

nathan

அடிப்பது தீர்வல்ல… அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

nathan

இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை!

nathan

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan

ப்ரோஸ்டேட் புற்று நோய், மார்பக புற்று நோய் வராம தடுக்கனும்னா இதை படிங்க…

nathan

நீண்டநேரம் உட்கார்ந்து வேலைசெய்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள்

nathan

செரிமான கோளாறுகளை சரிசெய்யும் அன்னாசிப் பூ

nathan