26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
26 1508989951 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா மூட்டுவலிக்கு சீனர்கள் நாடுவது எதைத் தெரியுமா? இதோ சில டிப்ஸ் !!

உடல் உழைப்பு என்பது இன்றைக்கும் பெரும்பாலும் குறைந்த விட்டபடியால் வரிசையாக நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. அதுவும் புதுப்புது பெயர்களில் வரும் நோய்களை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது.
மனித உடல் என்பது எண்ணற்ற தசை , எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்பிலேயே இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் கூட அதீத வலி ஏற்படும்.

உடல் உபாதைகளை விட வலிகளை பொறுத்துக் கொள்வது தான் பெரிய விஷயமாக இருக்கும். நம்முடைய அன்றாட வேலைகளையும் அந்த வலியுடனே தொடர வேண்டும். இது உங்களின் அன்றாட வேலைகளை பெரும் சிரமத்திற்க்குள்ளாக்கிடும்.

காரணம் : மூட்டு வலி வருவதற்கு மிக முக்கிய காரணம், மூட்டுகளுக்கு இடையே எண்ணெய் திரவம் இருக்கும். அவை மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும். அந்த எண்ணெய் திரம் இல்லாத போது மூட்டு ஒன்றோடொன்று உரசும். அப்போது உங்களுக்கு வலி உண்டாகும். பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மூட்டு வலி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரணம் உடல் உழைப்பு அவ்வளவாக இல்லாமல் இருப்பது, அல்லது நீண்ட நேரம் நின்று கொண்டேயிருக்கும் வேலையாக கூட இருக்கலாம். சத்தான உணவுகளை சாப்பிடாமல் துரித உணவுகள் எடுத்துக் கொள்வதும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன . இதைத்தவிர ஆர்த்ரைடீஸ்,கௌட்,டெண்டிரைடிஸ்,பேக்க்ரஸ் சிஸ்ட்,கார்டிலேஜ் என ஏராளமான நோய்களும் காரணங்களாக இருக்கின்றன. தற்போது இதனை எளிய வீட்டு மருத்துவம் மூலமாக மூட்டு வழியை எப்படி சரி செய்திடலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி : பழங்காலத்தில் இருந்தே சமையலுக்கு பயன்படும் பொருளாக இல்லாமல் மருத்துவப் பொருளாகவும் பயன்பெற்றிருக்கிறது இஞ்சி. அதில் ஏராளமான விட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. இஞ்சி எந்த வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக இஞ்சியை பயன்படுத்துவதற்கு முன்னதாக அதன் தோலை முழுமையாக நீக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு கிராமுக்கு மேல் இஞ்சி சாப்பிடக்கூடாது. கர்பிணிப்பெண்கள்,ரத்தக் கோளாறு இருப்பவர்கள்,ஏதேனும் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள், குடல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள் அடிக்கடி இஞ்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சை : கால் மூட்டு வலிக்கு எலுமிச்சையை விட எலுமிச்சை பழத்தின் தோல் பலன் தரவல்லது. அதீத துவர்ப்பு சுவையுடன் இருப்பதாலும் தோல் மிகவும் கடினமானதாக இருப்பதாலும் யாருமே அதனை பயன்படுத்தாமல் வீணாக்குகிறோம். எலுமிச்சை தோலைக் கொண்டு உங்களுடைய மூட்டு வலியை விரட்ட முடியும். எலுமிச்சை தோலில் அதிகப்படியான ஆண்ட்டிசெப்டிக் ப்ராப்ர்டீஸ் இருக்கிறது. ஒரு ஜாடியில் எலுமிச்சைப் பழத்தோலை போட்டு அது மூழ்கும் அளவுக்கு ஆலிவ் ஆயில் ஊற்றிடுங்கள். பின்னர் அதில் இயூக்கலிப்டஸ் இலைகள் சேர்த்திடுங்கள்.அதனை டைட்டாக மூடி இரண்டு வாரங்கள் வரை அப்படியே வைத்திருங்கள் . இரண்டு வாரங்கள் கழித்து அந்த எண்ணெயை வலி உள்ள மூட்டுகளில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

டீ : எலுமிச்சை பழத்தோலைக் கொண்டு டீயும் போடலாம். தண்ணீரை சூடாக்கி அதில் எலுமிச்சைத் தோலை போட்டு பதினைந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அது சூடாறியதும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகலாம். இது கை கால் மூட்டு வலிகளை குறைக்கச் செய்யும்.

கடுகு எண்ணெய் : இதனை நாம் அவ்வளவாக பயன்படுத்தியிருக்கமாட்டோம். ஆனால் மூட்டு வலிக்கு மிகச்சிறந்த நிவாரணத்தை வழங்கிடும். இரண்டு ஸ்பூன் அளவுள்ள கடுகு எண்ணெயை எடுத்து சூடாக்கிக் கொள்ளுங்கள். லேசாக சூடாகும் போது அதில் சிறிதளவு சூடம் போடுங்கள் பின்னர் அடுப்பை அணைத்து விடலாம். சூடு குறைந்ததும் அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்திடலாம். ரத்தக்கட்டு,சுளுக்கு போன்ற பிரச்சனையினால் உடலில் எங்கேனும் வலி இருந்தால் கடுகு எண்ணெயில் இரண்டு பூண்டுகளை சேர்த்து சூடாக்கி பயன்படுத்தலாம்.

வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரில் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி நிறைய இருக்கிறது. அவற்றால் உங்களுடைய மூட்டு வலிகளை குணப்படுத்த முடியும். Rheumatoid Arthritis இருப்பவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைந்திடும்.வினிகரில் அதிகப்படியான பொட்டாசியம் இருக்கிறது.அதோடு எலும்புகள் வலுவானதாக இருப்பதற்கு மக்னீசியம் தேவை.எலும்புகள் மட்டுமின்றி தசைக்கும் இது வலுவளிக்கும்.

கல் உப்பு : கல் உப்பில் அதிகப்படியான சல்ஃபேட் மற்றும் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. அதோடு உடலுக்கு தேவையான மினரல்ஸ்களும் இதில் இருக்கின்றன. கல் உப்பினை மூட்டியில் போட்டு தடவுங்கள் பின்னர் ஹாட் பேகினால் ஒத்தடம் கொடுங்கள்.

மஞ்சள் : Osteoarthritis என்னும் ஒரு வகை மூட்டு வலி கை கால்களில் உள்ள மூட்டுகளில் ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்ப்ப்ட்டால் அதீத வலி உண்டாகும் அதனை தீர்க்க மஞ்சளை பயன்படுத்தலாம். மூட்டுகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதால் ஆர்த்தரைட்டீஸ் வருகிறது அந்த வலியையும் போக்குவதில் மஞ்சள் முக்கியப் பங்காற்றுகிறது. மூட்டு வலி இருப்பவர்கள் பெரும்பாலோனருக்கு மூட்டு வீங்கியிருக்கும் அதனையும் மஞ்சள் குறைத்திடும்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் : rheumatoid arthritis இருப்பவர்கள் தங்கள் உணவுகளில் ஒமேகா 3 சேர்த்துக் கொண்டால் சிறந்த பலனைக் காணலாம். கடல் உணவுகளில் அதிகப்படியான ஒமேகா 3 இருக்கிறது.

கால்சியம் : எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உங்கள் உடலில் கால்சியம் சத்து குறைந்தாலும் இப்படியான வலிகள் ஏற்படும். அதனால் அன்றாட உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமான புகை மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் அதனை உடனே கைவிடுங்கள்.ஏனென்றால் உங்கள் உடலில் உள்ள கால்சியம் அடர்த்தியை குறைக்கிறது. மீன், தயிர்,பால், முட்டை,வாழைப்பழம்,ப்ரோக்கோலி,பீன்ஸ்,ஆப்பிள்,பாதாம், போன்றவற்றில் அதிகப்படியான கால்சியம் இருக்கிறது.

அன்னாசிப்பழம் : அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமெலைன் சிறந்த வலி நிவாரணியாக இருக்கிறது. அதே போல அன்னாசிப்பழச்சாற்றில் இருந்து கிடைக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் விட்டமின் சி ஆகியவை திசுக்களை வலுப்படுத்தவும் வீக்கத்தை சரிபடுத்தவும் உதவுகிறது.

பப்பாளி விதைகள் : பப்பாளியில் இருந்து கிடைக்கும் பப்பைன் என்ற என்சைம் நமக்கு மிகவும் பலனளிக்க கூடியது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதோடு பாதிக்கப்பட்ட இடத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. பப்பாளிப்பழம் மட்டுமல்லாமல் பப்பாளி விதைகளும் இதிக் முக்கியப் பங்காற்றுகின்றன. பப்பாளிப்பழம் சாப்பிடுவதைப் போன்று பப்பாளி விதைகளைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம்.

கேரட் : சீனர்கள் தங்களின் கை கால் மூட்டு வலிக்கு அதிகப்படியாக கேரட்டை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். கேரட்டை துருவி சாறெடுத்து பருகலாம். அப்படியில்லை எனில் கேரட்டை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். கேரட்டில் ஒளிந்திருக்கும் சத்துக்கள் ஏராளம். இவை வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது.

வெந்தயம் : இவை மிகவும் எளிதானது. வெந்தயத்தை ஊற வைத்து அதனை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். ஊற வைத்த நீரை வீணாக்காமல் குடித்து விடலாம். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக்கி அதனை வலி உள்ள இடங்களில் தடவலாம். அது காய்வதற்கு முன்னால் லேசாக மசாஜ் செய்திடுங்கள்.

வெங்காயம் : வெங்காயத்தில் இயற்கையாகவே ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்கள் நிறைய இருக்கின்றன. அன்றாட உணவுகளில் வெங்காயத்தை அதிகம் சேர்ப்பதை தொடருங்கள். வெங்காயத்தில் சல்ஃபர் இருக்கிறது அவை உடலின் வலியை குறைப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன.

தொடருங்கள் : இதைத் தவிர, ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்த்துவிட்டு சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். யோகா செய்யலாம். இது அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாதிப்பின் தீவிரத்தை குறைத்திடும்.26 1508989951 1

 

Related posts

இதை முயன்று பாருங்கள்…உங்க விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

nathan

வறண்ட சருமத்தை போக்கும் மருத்துவம்

nathan

உங்களுக்கு தெரியுமா கல்யாணமுருங்கையை இப்படி சாப்பிட்டால் ஆஸ்துமா பூரண குணமாகும்…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் வெளியே சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று..!

nathan

காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள்

nathan

ஆபத்தான தலைவலிகள் ஏவை?

nathan

வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்? என்று தெரியுமா ?

nathan

வாய்ப்புண் ஏற்பட காரணங்கள், தடுக்கும் முறைகள்

nathan

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சில அற்புதமான உணவுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan