25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
19 1508410262 4kidney
மருத்துவ குறிப்பு

சிறுநீரக கற்கள் கரைய செய்யும் ஓர் அற்புத மூலிகை முயன்று பாருங்கள்!

உடல் கற்கள் ஒரு சிறு மணல் அளவில் இருக்கும். இல்லை ஒரு சிறிய பறவையின் முட்டை அளவும் இருக்கும். அரிதாக இதை விட பெரிய கற்களும் உருவாகலாம்
உடல் கற்கள் பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிலேயே உண்டாகிறது.
சிறுநீரகக் கற்கள் உண்டாகுவது தற்போது அதிகரித்துக் கொண்டே போகிறது. 14 ஆண்டுகளில் ஒருவருக்கும் 30 பெண்களில் ஒருவருக்கும் கற்கள் உண்டாகின்றன.

இயற்கை அளிக்கும் அற்புத ஆற்றல் கொண்ட எண்ணற்ற பலன்கள் தரும் மூலிகைகள் எல்லாம் நம் கண்களில் படும் தூரத்திலேயே இருந்தாலும், நாம் அதை அறியாமல், அவை சாலையோரங்களில், வீடுகளின் கொல்லைப்புறங்களில் வளர்வதால், அவற்றை ஒன்றுக்கும் ஆகாத களைச்செடிகள் என்று புறக்கணித்து வருகிறோம். அதாவது, நமது அறியாமையை, நாம் நமது அறிவாக கருதுகிறோம் என்பதுதான் உண்மை. இதுவே, வாழ்வில் எல்லா விசயங்களுக்கும் பொருந்துமன்றோ?!

அதுபோன்ற மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட, பரவலாக எங்கும் வளரும் ஒரு மூலிகைச்செடிதான், கோபுரந்தாங்கி! எல்லா இடங்களிலும் மண்டியிருப்பதால் சுத்தம் செய்யும்போது, இதைக் களைச்செடி என எண்ணி, களைந்துவிடுவர்.

நல்ல பட்டையான வெளிர் பச்சைநிற தண்டுகளைக் கொண்ட கோபுரங்தாங்கியின் இலைகள் நீண்டு தண்டிலிருந்து தனித்தனியே காணப்படும். இந்த இலைகளின் காம்புகளை ஒட்டி, சிறிய அடுக்கில் பூக்கள் கோபுரத்தின் கலசங்கள் போலக் காணப்படுவதால், இந்த மூலிகைக்கு கோபுரந்தாங்கிஎனப்பெயர் வந்ததாகக்கூறுவர். ஆயினும், சித்தர்கள் இதன் பெயரை வேறுவிதமாக அழைத்து, போற்றுகின்றனர்.

கோபுரந்தாங்கி செடியில் அடங்கியுள்ள தாதுக்கள்! வைட்டமின்கள், கால்சியம் போன்ற சத்துக்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எக்கியாயிடின் மற்றும் பிளேவன் போன்ற அறிய தாதுக்கள், இந்த மூலிகையில் அடங்கி உள்ளன. மேலை மருத்துவத்தில் வியாதிகள் போக்கும் தன்மைக்காக, இந்த வேதிச் சத்து அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன. கோபுரந்தாங்கி செடியின் இலைகளும், வேர்களும் அதிக அளவில் சித்த வைத்தியத்தில் பயனாகின்றன.

ரத்தம் சுத்தகரிக்க : மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து, உடல் தசை நரம்புகளை வலுவாக்கி, உடலின் ஆற்றல் சக்தியை அதிகரித்து, பலவகையான வியாதிகள் நம் உடலை அண்டாமல் காத்து, உடல் இயக்கத்தை ஊக்கப் படுத்துவதால், மனித உடலையே கோபுரமாக சித்தர்கள் மறை பொருளில் உணர்த்தி, மனித உடலைக் காக்கும் இந்த அரிய மூலிகையை, கோபுரந்தாங்கி என அழைத்தனர். மேலும், சித்தர்கள் அருளிய காய கற்ப மூலிகைகளில் சிறப்பிடம், கோபுரந்தாங்கிசெடிக்கு இருக்கிறது.

சரும வியாதி : கோபுரந்தாங்கி மூலிகை பொதுவாக, சிறுநீரை உடலில் இருந்து அதிக அளவில் வெளியேற்றும், சிறுநீரகம் சார்ந்த அனைத்து வித பிரச்னைகளையும் சீர்செய்யும் ஆற்றல் மிக்கது, மேலும், சருமத்தில், தலையில் ஏற்படும் சிரங்கு, விஷப்பூச்சிகளின் கடியால், எச்சத்தால் ஏற்பட்ட புழு வெட்டு எனும் முடி உதிர்தலை தடுக்கும் இயல்புடையதாகும்.

சிறுநீரக பாதிப்புகள் நீங்க, கோபுரந்தாங்கி குடிநீர்! கோபுரந்தாங்கி, சிருகண்பீளை, யானை நெருஞ்சில் இவற்றை சமூலமாக சேகரித்து [முழுச்செடி] அவற்றை சுத்தம் செய்து வெயில் நிழலில் வெள்ளரிக்காய் விதைகளுடன் காயவைத்து, அவற்றை உரலில் அல்லது அம்மியில் நன்றாக இடித்து வைத்துக்கொண்டு, இந்த பொடியை அறுநூறு மில்லி நீரில் சுட வைத்து, மூன்றில் ஒரு பங்கு, இருநூறு மிலி அளவில் நன்கு சுண்டியதும், அதை காலையும் இரவும் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தினமும் பருகி வர, சிறுநீரக எரிச்சல், சூடு குணமாகி, சிறுநீர் நன்றாக வெளியேறும்

சிறு நீர் கற்களுக்கு : கோபுரந்தாங்கி குடிநீரை இரண்டு வாரங்கள் தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரக கற்கள் யாவும் கரைந்து வெளியேறி விடும். கோபுரந்தாங்கிமூலிகை, செம்பு போன்ற உலோகங்களையும், உப்புகளையும் கரைக்கும் ஆற்றல் மிக்கதால், சிறுநீரக கற்களை, விரைவில் சிறு நீரகத்திலிருந்து வெளியேற்றி, சிறு நீரகத்தை காத்து, உடல் நலத்தை சீராக்கும்.

தசை வலுவாக : கோபுரந்தாங்கி வேரை நன்கு அலசி, நிழலில் காய வைத்து இடித்து தூளாக்கி, பனங்கற்கண்டு சேர்த்து நெய்யில் கலந்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, உடல் தசைகள், எலும்பு நரம்புகள் நன்கு வலுவேறி, உடல் ஆற்றல் மேம்படும்

உடல் வியாதிகள் அணுகாமல் இருக்க : கோபுரந்தாங்கி இலைகள், கொட்டைக் கிரந்தை இலைகள் இவற்றை சேகரித்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, நூறு மிலி அளவு வந்ததும் தொடர்ந்து தினமும் ஒரு மண்டலம் எனும் அளவில், காலையில் பருகி வர, உடல் தசைகள் யாவும் இறுகி, உடல் நலமாகும். ஆயினும், காய கற்பம் எனும் இந்த மருந்தை உட்கொள்ள, சில பத்திய முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என பெரியோர் குறிப்பிடுகின்றனர்.

தலைமுடிக்கு தைலம் : கோபுரந்தாங்கி இலைகளை ஐம்பது என்ற எண்ணிக்கையில் சேகரித்துக் கொண்டு, அந்த இலைகளைப் பிழிந்து சாறெடுத்து தனியே வைத்துக் கொண்டு, வாணலியில் கால் லிட்டர் நல்லெண்ணை விட்டு, சற்று சூடு வந்ததும், கோபுரந்தாங்கிஇலைச்சாற்றை எண்ணையில் கலந்து, இலையின் பச்சை வண்ணம் எண்ணையில் நன்கு ஏறும்வரை கொதிக்க வைத்து, பின்னர் இந்த எண்ணை ஆறியதும், ஒரு குடுவையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

தடவும் முறை : குளிக்க செல்லும்போது, கோபுரந்தாங்கி தைலத்தை தலையில் தடவி, அரை மணி நேரம் நன்கு எண்ணை தலையில் ஊறிய பின், தலையை நன்கு அலசி குளித்து வர, தலைச் சூடு குறைந்துவிடும். உடல் குளிர்ச்சி அடைந்து, கண் பார்வை மேம்படும், தலைமுடி உதிர்தல் குணமாகி, தலைமுடி கருமையாக நன்கு வளரும்

புழு வெட்டு : சிலருக்கு, தலைமுடி சில இடங்களில், கொத்துகொத்தாக நீங்கி இருக்கும், விஷ ப்பூச்சிகளின் கடியினாலோ அல்லது அவற்றின் எச்சத்தாலோ உண்டாகும் இந்த பாதிப்புகள், சமயங்களில் மன உளைச்சலையும் ஏற்படுத்தக் கூடியது. இந்த பாதிப்புகள் நீங்க, கோபுரந்தாங்கி தைலம் ஒரு வரப்பிரசாதமாகும். மேற்சொன்ன முறையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வர, தலைப் புண், புழு வெட்டு, படை போன்றவை குணமாகி, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் திரும்பவும், முடி கருகருவென வளர ஆரம்பிக்கும்.

முடி உதிர்தலை தடுக்க : முடி உதிர்தல் பாதிப்பு இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிக அளவில் காணப்படுகிறது, உணவு முறை மாற்றங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், சிலரின் முடி உதிர்தலுக்கு தலைச் சூடு எனும் மேற்சொன்ன பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அதிக நெருக்கடியான பணிச் சுமை, குடும்ப சூழல் போன்ற காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல்கள், இந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இவர்களுக்கு எல்லாம் தலைமுடி மிக அதிக அளவில் உதிரும், ஒரு கால கட்டத்தில், தலை வழுக்கையாகும் நிலையைக்கூட, உருவாக்கி விடும். இத்தகைய பாதிப்புகள் உள்ளவர்கள் எல்லாம், கோபுரந்தாங்கி தைலத்தை தலையில் தேய்த்து, சில மணி நேரங்கள் ஊற வைத்து, அதன் பின்னர் குளித்து வர, தலைச் சூடு குறைந்து, உடல் குளுமையாகி, தலைமுடி புத்துயிர்ப்பாக வளர ஆரம்பிக்கும், அதிக முடி உதிர்தல் பாதிப்புகள் அகன்று விடும். கோபுரந்தாங்கிதைலத்தை, தொடர்ந்து வாரமிருமுறை, குறைந்தபட்சம் பத்து அல்லது பதினைந்து வாரங்கள், தேய்த்து குளித்து வர வேண்டும்.19 1508410262 4kidney

Related posts

ஆண்மைக் குறைவு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருத்துவம்

nathan

டெங்குக் காய்ச்சலிலிருந்து நம்மை எளிதாகப் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் இத படிங்க!…

sangika

உங்களுக்கு தெரியுமா பெற்றோர்களின் சண்டை குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்

nathan

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

nathan

உருளைக்கிழங்கில் அப்படி என்ன இருக்கின்றது? அனைவருக்கும் பயனுள்ள தகவல் !

nathan

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!

nathan

டயட்’டில் பெண்களின் முன்னழகு பாதிக்கிறதா? தப்பிக்க என்ன செய்யலாம்?

nathan

ரகசிய கேமராவின் புதிய வடிவம் இதுதான்! உஷார்

nathan