29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
01 1509532539 9
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த பழக்கங்களை விட்டொழித்தால் மார்பக புற்று நோய் வராது!! அப்ப இத படிங்க!!!

இன்றைய காலகட்டத்தில் புற்று நோய் சர்வசாதாரணமாக அனைவரையும் தாக்குகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்று நோய் பெருமளவில் பாதிக்கிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல விதமான முயற்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசும் எடுத்து வருகிறது. பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் புற்று நோய்க்கான பரிசோதனைகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது

எட்டு பெண்களில் ஒரு பெண்ணுக்கு புற்று நோய் தாக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாரம்பரியம், உடல் நிலை, உடல் எடை போன்றவை இந்த புற்று நோயை அதிகரிக்கும் வாய்ப்பை உண்டாக்குகின்றன.

மார்பக புற்று நோயின் அபாயத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் செய்யலாம். சில பழக்க வழக்கங்கள் புற்று நோயின் வருகைக்கு காரணமாகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாகவும் இருக்கலாம். அவற்றை அறிந்து அத்தகைய பழக்கத்தை கைவிடும்போது புற்று நோய் வரும் வாய்ப்பு குறையலாம்.

அமெரிக்கன் கேன்சர் நிறுவனம், அறிவியல் சார்ந்த சில வழிமுறைகளையும், சில பழக்க வழக்கங்களை நிறுத்துவதற்கான தகவல்களையும் குறிப்பிடுகின்றன. இவற்றால் மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

மது பழக்கம்: ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் அளவை பொறுத்து புற்று நோயின் அபாயம் அதிகரிக்கிறது. மது பழக்கம் முற்றிலும் இல்லாதவர்களை விட தினமும் 1 முறை மது அருந்துபவர்களுக்கு மார்பக புற்று நோயின் அபாயம் அதிகமாக உள்ளது. ஒரு நாளில் 2-3 ட்ரின்க் எடுப்பவர்களுக்கு 20% அதிகரித்த அபாயம் உள்ளது. ஆல்கஹால் , ஈஸ்ட்ரோஜென் மற்றும் மார்பக புற்று நோய் தொடர்பான ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது . ஆல்கஹால் அணுக்களில் உள்ள DNA வை சேதப்படுத்துகின்றன. இது புற்று நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆல்கஹால் கலந்த பானங்களை பருக நினைக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பானங்களை அருந்த கூடாது என்று அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் கூறுகின்றது.

கர்ப்பத்தடை மாத்திரைகள் : கருத்தடை மாத்திரைகள், மார்பக புற்று நோயை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கருத்தடை ஊசிகள் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை பயன்டுத்தப்படுகிறது. இவற்றில் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் ஊசி வழியே செலுத்தப்படுகிறது. அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் , ஹார்மோன்கள் அல்லாத உட்புற கருவிகளை பயன்படுத்த பரிந்துரைக்கிறது. இவற்றை கருத்தடைக்கு பயன்படுத்துவைத்தால் மார்பக புற்று நோயின் அபாயம் குறைகிறது. கருப்பை வாய் புற்று நோயின் அபாயமும் குறைகிறது.

மாத்திரைகள்: புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. டாமோக்சிபன் , ரெலோக்சிபின் போன்ற மருந்துகளை எப்போதும் எடுத்துக் கொள்வது புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது. இவை மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜென் செயல்பாடுகளை தடுக்க உதவுகிறது. இதனால் மார்பக புற்று நோய் தடுக்கப்படுகிறது. மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அதன் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

குழந்தைகள்: அமெரிக்கன் கேன்சர் நிறுவனம், குழந்தைகள் இல்லாத அல்லது 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்று நோயின் அபாயம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. 30 வயதிற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கருத்தரித்து குழந்தை பெற்று கொள்வதால் இதன் அபாயம் குறைக்க படுவதாக தெரிவிக்கின்றனர். முதல் குழந்தையை தாமதமாக பெற்று கொள்கிறவர்களுக்கு இளம் வயதில் தாய்மை அடைபவர்களை விட அதிகமான புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

இளம் வயதில் அம்மா: இளம் வயதில், சீக்கிரமாக குழந்தை பெற்று கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. கருத்தரிக்கும் வயதுடன் மார்பக அணுக்களுக்கு தொடர்பு உள்ளது. கருவுறும் காலத்தில் இவை அதிகமாக வளர்ச்சி அடைகிறது. வயது அதிகரிக்கும்போது இந்த அணுக்கள் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இளமையில் கருவுறும் போது அணுக்களின் சேதம் குறைக்கப்படுகிறது என்றும் இதனால் மார்பக புற்று நோயின் அபாயம் குறைகிறது என்றும் கூறுகின்றனர்.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வதால் புற்று நோய் அபாயம் தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் 10-20% மார்பக புற்று நோயை தடுக்க முடிகிறது என்று நடந்து வரும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடற்பயிற்சி செய்வதால் எடை கட்டுப்பாடு ���ற்படுகிறது, ஈஸ்ட்ரோஜென் அளவு குறைகிறது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் புற்று நோய் அபாயம் குறைகிறது. ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர உடற்பயிற்சி செய்யும் பெரியவர்களுக்கு புற்று நோயின் அபாயம் குறைகிறது என்று அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் தெரிவிக்கிறது.

தாய்ப்பால்: மார்பக புற்று நோய் தொடர்பான 47 விதமான ஆய்வுகளின் முடிவுகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்று நோயின் அபாயம் குறைகிறது என்று தெரிவிக்கின்றன. 1 வருடம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்று நோயின் தாக்கம் குறைகிறது. எல்லா குழந்தைகளுக்கும் சேர்த்து 2 வருடம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் 2 மடங்கு நல்ல பலனை அடைகின்றனர். தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் காலம் தாமத படுத்தப்படுகிறது. இதனால் வாழ்நாள் முழுதும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உருவாக்கம் குறைக்கப்படுகிறது. கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் மார்பக திசுக்கள் உதிர்கின்றன. இதனால் DNA சேதம் உள்ள அணுக்கள் வெளியேற்றப்படுகின்றன . இதனால் மார்பக புற்று நோய் தடுக்க படுகிறது.

மெனோபாஸ்: மெனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் தெரபி எடுத்துக் கொள்வதால் புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டொரோன் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக் கொள்வதால் இந்த அபாயம் உண்டாகிறது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு இதனால் மார்பக புற்று நோய் உண்டாகும்போது இறப்பிற்கான வாய்ப்பும் உண்டு.

ஹார்மோன் சிகிச்சை : 2 வருடங்கள் தொடர்ந்து இந்த ஹார்மோன் சிகிச்சையை பயன்படுத்துவதால் புற்று நோய் இருப்பதை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு, மிகவும் முற்றிய நிலையில் அதனை கண்டுபிடிக்கும் அபாயம் உள்ளது. சமீபமாக அல்லது தற்போது இந்த ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த அபாயம் அதிகமாக உள்ளது. இத்தகைய சிகிச்சையை கைவிட்டு 5 வருடங்கள் ஆன பிறகு புற்று நோயின் தாக்கம் குறைகிறது.

தீர்வு : மார்பக புற்று நோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை. ஆரம்பத்தில் இதனை கண்டறிந்து சரியான மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டு ஆரோக்கியமாக இருப்பது என்றும் நல்ல வளமான மற்றும் சிறப்பான வாழ்வை தரும்.
01 1509532539 9

Related posts

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan

உங்க கால் விரல் சொத்தையா? குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..

nathan

பெண்களே புதிய செல்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முக்கியமான சமயத்துல மாதவிடாய் வந்திடுச்சா?… வந்தபின் மாத்திரை இல்லாம எப்படி நிறுத்தலாம்?

nathan

ஆண்களிடம் பெண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்!

nathan

பிரசவத்திற்கு பிறகு பெண்களிடம் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்! தெரிந்துகொள்வோமா?

nathan

விபத்தை உருவாக்கும் ‘வேகத்தடைகள்’

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! கடைவாய்ப்பல் வலிக்கான சில சிறப்பான வீட்டு சிகிச்சைகள்..!

nathan

தும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்

nathan