25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
20 1508474714 1
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா காலிஃப்ளவர் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ?

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே அத்தனை சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.உடல் நலத்திற்கு அனைத்து விதமான சத்துக்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுஅவசியம். ஏதோ சில அற்ப காரணங்களை கூறி அவற்றை தவிர்ப்பது என்பது முட்டாள்தனமானது.
துருக்கி மற்றும் இத்தாலியில் கிமு 600 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே காலிப்ளவர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவிற்கு பரவி பல்வேறு நாடுகளுக்கு பரவியது. தற்போது இந்தியா, சீனா, இத்தாலி,ப்ரான்ஸ் மற்று அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிகளவில் காலிஃப்ளவரை உற்பத்தி செய்கின்றன.

காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்ககூடியது.

சத்துக்கள் : காலிஃப்ளவரில் விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறையவே இருக்கிறது. அதோடு ஃஃபோலேட், ரிபோஃப்ளேவின்,நியாசின்,பாஸ்பரஸ்,பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்து இருக்கின்றன. குறிப்பாக இதில் கலோரிகள் குறைவு. எளிதில் கரையக்கூடிய ஃபைபரும் இருக்கிறது. இதைத்தவிர ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் காணப்படுகிறது. இதனை நாம் எடுத்துக்கொள்வதால் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன அதே நேரத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சோர்வு : இன்றைக்கு பலரும் உச்சரிக்கும் பிரச்சனை இது. காரணமே தெரியாமல் எப்போதும் சோர்வாக இருக்கிறேன் என்பது தான் அது. காலிஃப்ளவரில் இருக்கும் இன்டோல்ஸ் மற்றும் க்ளூகோசினேட்ஸ் நம் உடலில் உள்ள செல்களை உற்சாகப்படுத்துகிறது. இதனால் சோர்வு பறந்திடும்.

இதயம் : நம்முடைய இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் காலிஃப்ளவர் முக்கியப் பங்காற்றுகிறது.இதிலிருக்கும் க்ளூகோரஃபனின் மற்றும் விட்டமின் கே இந்த செயலை செய்கின்றது. க்ளூகோரஃபனின் நம் ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராக இயங்குகிறது.

வயிறு : காலிஃப்ளவரில் அதிகப்படியான டயட்டரி ஃபைபர் நிறையவே இருக்கிறது இது உணவு செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. அதோடு நம் உடலில் சேர்ந்திருக்கும் டாக்ஸின்களையும் வெளியேற்ற வைக்கிறது. அதோடு காலிஃப்ளவரில் இருக்கும் ஐசோதியோசைனேட்ஸ் வயிற்றில் வரக்கூடிய பல்வேறு உபாதைகளை வராமல் தடுக்க உதவுகிறது

புற்றுநோய் : காலிஃப்ளவரில் க்ளூகோசினேட்ஸ் இருக்கிறது. இவை சல்ஃபோர்பேன் மற்றும் ஐசோதியோசைனேட்ஸ்களாக உடைகிறது. இவை கேன்சர் செல்களின் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்திடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எலும்பு வளர்ச்சி : காலிஃப்ளவரில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இவை நம் உடலில் கொலாஜென் உற்பத்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது. இதனால் எலும்புகளின் உறுதித்தன்மைஅதிகரிக்கும். அதோடு இதில் விட்டமின் கேவும் இருப்பதால் எலும்புகள் தொடர்பான நோய்களை வராமல் தவிர்க்க இயலும்.

வயதான தோற்றம் : காலிஃப்ளவரில் விட்டமின் சி மற்றும் பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறையவே இருக்கிறது. இவை நம்முடைய உள்ளுறுப்புகளுக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுத்து வயதான தோற்றத்தை தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக வயதானவர்கள் இதனை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பார்வைக்குறைப்பாடுகள் தவிர்க்கப்படும்.

நச்சுக்கள் : உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்வதைப் போன்றே முக்கியமான வேலை இது,அவ்வப்போது உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். காலிஃப்ளவரில் இருக்கும் இண்டோல் 3 கார்பினால் நச்சுக்களை வெளியேற்ற உதவிடும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

சருமம் : காலிஃப்ளவரில் இருக்கும் சல்ஃபோரபேன் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்கிறது . அதோடு சரும செல்களின் வளர்சியிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதனால் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

நரம்புப் பிரச்சனைகள் : காலிஃப்ளவரில் இருக்கும் சல்ஃபோரபேன் நரம்புகளின் செயல்பாடுகளுக்கு முக்கியப்பங்காற்றுகிறது. இவை உடலில் க்ளூடதைன் சுரப்பை அதிகரித்து நரம்புகள் தொடர்பான பிரச்சனைகளை வராமல் செய்திடும்.

ஹைப்பர் டென்சன் : காலிஃப்ளவரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களான குளூகோரஃபனின் மற்றும் சல்ஃபோரபேன் ஸ்ட்ரஸை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டது. இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பிக்கலாம். அதோடு காலிஃப்ளவரில் இருக்கும் நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போன்றவை கெட்ட கொழுப்பு படிவதை தடுக்கும் என்பதாலும் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த பயம் தேவையில்லை.

எலக்ட்ரோலைட் : நம் உடலில் உள்ள தண்ணீர்ச்சத்து செல்கள் துரிதமாக வேலை செய்ய மிகவும் அவசியமானதாகும். காலிஃப்ளவரில் இருக்கும் பொட்டாசியம் நம் உடலில் எலக்ட்ரோலைட் சுரப்பை உறுதி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி : உடலில் தோன்றிடும் பல்வேறு பிரச்சனைகளின் ஆரம்ப புள்ளியாக இருப்பது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். காலிஃப்ளவரில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. இதிலிருக்கும் விட்டமின் சி பல்வேறு பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

ஒபீசிட்டி : பலரது மிக முக்கியப் பிரச்சனை உடல் எடை பற்றியது தான். காலிஃப்ளவரில் இண்டோல்ஸ் இருக்கிறது. இவை ஆண்ட்டி ஒபீசிட்டிக்கு ஒத்துழைக்கிறது. அதோடு காலிஃப்ளவரை அடிக்கடி உணவாக சேர்ப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இவை கொழுப்பை கரைப்பதற்கு பெரும் துணையாக நிற்கும். அதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்வது தவிர்க்கப்படும்.

கர்ப்பம் : கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைத்திடும். ஏனென்றால் இதிலிருக்கும் ஃபோலேட் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கிறது. அதோடு காலிஃப்ளவரில் இருக்கும் விட்டமின் மற்றும் மினரல்ஸ் கர்பிணிப்பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மூளை வளர்ச்சி : காலிஃப்ளவரில் கோலின் மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறது.இவை உடலில் உள்ள செல்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகும்.அதோடு மூளையின் செயல்பாடுகளுக்கும் இவை முக்கியப் பங்காற்றுகிறது. அதோடு காலிஃப்ளவரில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் விட்டமின் பி 6 மூளையின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோய் : காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் ஆபத்துகளிலிருந்து நம்மால் தப்பிக்க இயலும் ஏனென்றால் இவற்றில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அந்த செயலை செய்கின்றன. காலிஃப்ளவரில் இருக்கும் பொட்டாசியம் உடலில் உள்ள குளுக்கோஸை செரிக்க உதவுகிறது.அதோடு கணையத்தில் இன்ஸுலின் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகப்படியான சர்க்கரை சேர்வது தவிர்க்கப்படும்.

 

பக்கவாதம் : காலிஃப்ளவரில் இருக்கும் அலிசின் நுரையிரலை சுத்தமாக்குகிறது அதோடு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் காலிஃப்ளவரை அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் பக்கவாதம் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

தவிர்க்க : இத்தனை நன்மைகளை பயக்கும் காலிஃப்ளவரினால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புகளுண்டு. இவை அளவுக்கு மீறி அதிகமாக எடுக்கும் போது மட்டுமே சாத்தியம். Loading ad காலிஃப்ளவரில் இருக்கும் கார்போஹைட்ரேட் எளிதாக செரிமானம் ஆகாமல் உடலிலேயே தங்கிடும். பின்னர் பாக்டீரியா தொற்று ஏற்ப்பட்டு வயிற்றில் கேஸ் பிரச்சனைகளை உருவாக்கும். காலிஃப்ளவரில் புரின்ஸ் என்ற சத்து இருக்கிறது. இவற்றை அளவுக்கு மீறி நாம் அதிகமாக எடுக்கும் போது, உடலில் யூரிக் அமிலமாக மாறுகிறது, இவை உடலில் அதிகமாக சேர்ந்தால் கிட்னியில் கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலிஃப்ள்வரில் அதிகப்படியான விட்டமின் கே இருக்கிறது. இது மாதிரியான காய்களை ரத்தம் உறைதல் சீராக இருப்பவர்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ரத்தம் உறைதலுக்கு தனியாக மாத்திரை எடுத்துக் கொல்கிறவர்கள் இதனை தவிர்ப்பது நலம். அல்லது காலிஃப்ளவரை எடுப்பதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடலாம்.

20 1508474714 1

Related posts

தெரிஞ்சிக்கங்க… சப்ஜா விதைகள் எடுத்து கொள்வதனால் இத்தனை பயனா?

nathan

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

முயன்று பாருங்கள் கத்திரிக்காய இப்படி தேய்ங்க.. முகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

தொப்பையைக் குறைக்கும் முருங்கைக் கீரை சூப்…

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

பாலில் இந்த அதிசய பொருளை சேர்த்து குடித்தாலே போதும்! சக்தி பலமடங்கு அதிகரிக்கும்

nathan

குழந்தைகள் குடிக்கும் இந்த வகை பால் மற்றும் தண்ணீர் ஆரோக்கியத்தை சிதைக்கக்கூடும்…!

nathan