gram flour face pack
முகப் பராமரிப்பு

உங்க முகத்தை எப்போதும் இளமையுடன் வைத்துகொள்ள வேண்டுமா ?? அப்ப இத படிங்க! !!

அன்றாடம் முகம் கழுவுவதற்கு நாம் சோப்பைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் சோப்பைக் கொண்டு அளவுக்கு அதிகமாக முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் சோப்பைப் பயன்படுத்தாமல் கடலை மாவைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பது. ஆனால் தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.

உங்களுக்கு கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க கடலை மாவு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே கரும்புள்ளிகளைப் போக்க கண்ட பொருட்களைப் பயன்படுத்தாமல், கடலை மாவைக் கொண்டு அன்றாடம் முகத்தைக் கழுவுங்கள்.சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும்.

அத்தகையவர்கள் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமத் துளைகள் இறுக்கப்பட்டு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும்.சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு தோல் உரிந்து மென்மையின்றி அசிங்கமாக காணப்படும். அதைத் தடுக்க வேண்டுமானால் சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்து, கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமம் மென்மையாகும்.

சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், வெயிலால் கருமையான சருமத்தை சரிசெய்ய முடியாது. ஆனால் அதுவே கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அதனைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வர சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

முகப்பருவால் கஷ்டப்படுபவர்கள், கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.கடலை மாவு இயற்கைப் பொருள்என்பதால், எந்த வகையான சருமத்தினரும் இதனைப் பயன்படுத்தலாம். இது 100% சுத்தமானது. எனவே அதிக செலவு செய்து கெமிக்கல் கலந்த சோப்பை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் மேம்படும்.gram flour face pack

Related posts

புருவ முடி வளர்ச்சிக்கு

nathan

சுருக்கம் வேண்டாம்; பளபளப்பு வேணும்!

nathan

முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா? வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika

வெயிலில் கருத்துவிட்டதா முகம்?

nathan

உங்களுக்கு தெரியுமா சீழ் நிறைந்த பருக்களைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

nathan

முகப் பொலிவிற்கு

nathan

என்றும் இளமையுடன் வாழ என்ன செய்யலாம்?..!! இளம் வயதில் முதுமை?..

nathan