28.9 C
Chennai
Monday, May 20, 2024
download 1 1
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு பொடுகு பிரச்சனை போக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

பெண்களுக்கானாலும் சரி, ஆண்களுக்கானாலும் சரி, அழகைத் தரும் கூந்தல் அதிகமாக உதிர பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான், பொடுகு. அந்த பொடுகு தலையில் வந்து விட்டால், அதனால் வரும் அரிப்பைத் தாங்கவே முடியாது. எப்ப பார்த்தாலும் கையானது தலையிலேயே இருக்கும். இதனால் மிகுந்த சங்கடத்திற்கு தான் ஆளாகிறோம். இப்படி சங்கடத்தை ஏற்படுத்தும் பொடுகை நீக்க சில வழிகள் உள்ளன. அதுவும் வீட்டிலேயே உள்ளன. அது என்னவென்று படித்துப் பாருங்கள்…

பொடுகை நீக்க சில டிப்ஸ்…

1. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடல் உஷ்ணம் குறைவதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.

2. வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால், பொடுகு வராமல் தடுக்கலாம்.

3. வெந்தயத்தை தேங்காய் எண்ணெயோடு சிறிது சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனையை நீக்கலாம்.download 1 1

4. தலைக்கு குளிக்கும் போது, சிறிது தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து வாரம் ஒரு முறை குளித்தால், பொடுகு மறையும்.

5. துளசி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து, சிறிது எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு பிரச்னை நீங்கும்

6. நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகு நீங்கும்.

7. தலைக்கு குளிக்கும் போது, இறுதியாக குளிக்கும் தண்ணீரில், சிறிது வினிகர் கலந்து தலைக்கு ஊற்றி குளித்தால், பொடுகு வராமல் இருக்கும்.

8. தேங்காய் எண்ணெயில் வசம்பை நன்கு பவுடராக்கி, அதில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

 

Related posts

முடி உதிர்தல் பிரச்சனையா? வாரம் ஒரு முறை இதை பயன்படுத்துங்க

nathan

கூந்தல்‬ சீவும் முறை

nathan

ஆரோக்கியமான கூந்தல் பெற:

nathan

முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க வேண்டுமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முடி வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை !!

nathan

மொட்டை போட்டால் முடி வேகமாக வளருமா?

nathan

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

உங்களுக்கு தெரியுமா நீளமான கூந்தல் உள்ள பெண்கள் அதில் வல்லவர்களா?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?

nathan