29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
face01
சரும பராமரிப்பு

பிரகாசமாக முகம் வேண்டுமா? ‘வெள்ளரி ஃபேஸ் பேக்’ முயன்று பாருங்கள்!!!

முகத்தை அழகாக, பிரகாசமாக வைக்க பல வகையான ஃபேஸ் பேக்குகள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் சிறந்த ஒரு ஃபேஸ் பேக் என்று சொன்னால் அது வெள்ளரிக்காய் வைத்து செய்வது தான் என்று சொல்லலாம். ஏனென்றால் எந்த ஒரு ஃபேஸ் பேக் செய்தாலும், இறுதியில் வெள்ளரிக்காயை வைத்து அதை முடிக்கிறார்கள். அப்படி இருக்க இந்த வெள்ளரிக்காயை வைத்தே ஃபேஸ் பேக் செய்தால் எப்படி இருக்கும்?

ஏனெனில் வெள்ளரிக்காயில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதால் சருமமானது இறுகி, வலுவடைகிறது. மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்குகிறது. இதனால் சருமமானது பொலிவுடன், பிரகாசமாக இளமை தோற்றத்தைத் தருகிறது. அத்தகைய வெள்ளரிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

எப்படியெல்லாம் ‘வெள்ளரி ஃபேஸ் பேக்’ செய்யலாம்?
1. வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதனை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

2. வறண்ட சருமம் உள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் சிறிது எலுமிச்சைப்பழசாற்றை விட்டு, முட்டையின் வெள்ளை கருவை அதில் விட்டு முகத்தில் தடவி 20-25 நிமிடம் விட்டு காய வைத்து, பின் கழுவவும். இதனால் முகத்தில் பிம்பிள் இருந்தால் அது மறைந்துவிடும்.

3. 4-5 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்டை, தேன் மற்றும் எலுமிச்சைப்பழசாற்றுடன் கலந்து, புதினாவை அரைத்து அத்துடன் சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகமானது புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், இளமையோடும் காட்சியளிக்கும்.

4. வெள்ளரிக்காய் ஜூஸை 2-3 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 10-12 துளி ரோஸ் வாட்டரை க்ளேயுடன் சேர்த்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். நிறைய நேரம் ஊற வைத்து விட வேண்டாம், இல்லையென்றால் முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பிம்பிளை அகற்றும்.

5. வெள்ளரிக்காய், பேரிக்காய், தக்காளி ஆகியவற்றை நன்கு அரைத்து, அதோடு சிறிது தேன் விட்டு கலந்து, முகத்தில் தடவி 20 25 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் முகமானது மென்மையாகவும், முகத்தில் இருக்கும் அழுக்கும் அகன்று பொலிவோடு காணப்படும். இவ்வாறெல்லாம் செய்து பாருங்கள், முகமானது அழகாக, பொலிவாக, மென்மையாக இருப்பதோடு, புத்துணர்ச்சியோடும் மின்னும்.face01

 

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்திய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த பொருட்கள்தான்…!

nathan

பார்லர் அழகு வீட்டிலிருந்தபடியே பெறலாம்!!உங்களுக்காக சின்ன சின்ன அழகுக் குறிப்புகள்!!

nathan

சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்

nathan

பிரசவ தழும்புகளை மறைய இயற்கையாக மறைய…

nathan

சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க.

nathan

சரும நிறம் மாறி பளீச் அழகு பெற…..

nathan

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

எ‌ண்ணெ‌‌ய் வை‌த்‌திய‌ம்

nathan

முட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு டைரியில் இடம் பெறட்டும்:

nathan