27.3 C
Chennai
Sunday, May 19, 2024
1462789953 7622
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

 1462789953 7622
வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.
எலுமிச்சை சாறு
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.
சோப்புத் தண்ணீர்
குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.
கிளிசரின்
கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும். தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும்.
இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

Related posts

இந்தியாவில் வீடுகளின் கிணறுகளில் தீப்பிழம்பு

nathan

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்!…

nathan

வாழைப்பழத்தை இவ்வாறு சாப்பிட்டு பாருங்கள்

sangika

லீக் ஆன நயன்தாரா – விக்கி திருமண அழைப்பிதழ்!

nathan

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

nathan

இதை நீங்களே பாருங்க.! படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த ஆல்யா செய்த காரியம்…

nathan

முகத்தை பளிச்சிட வைக்கும் சிறந்த இயற்கை வழிகள்!…

nathan

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க மிக எளிதான முறை!..

nathan