25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

கருமுட்டை உருவாக்கம்

கருமுட்டை உருவாக்கம்
குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் – பெண் இருவருக்கும் சம வாய்ப்பு இருக்கிறது. குழந்தை பெறக்கூடிய உயிரணு இல்லாதது ஆண் தரப்பிலும், கருவை சுமந்து பிரசவிக்கும் திறன் இல்லாதது பெண் தரப்பிலும் ஏற்படக்கூடிய பிரச்சனை. குழந்தையின்மைக்கு ஆண் – பெண்ணின் பொதுவான காரணம் இது என்றாலும், அதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன.பெண்களுக்கு:1. கருப்பை உட்சுவர் வளர்ச்சி (எண்டோமீட்டியாசிஸ்)
2. கருக்குழாய் அடைப்பு (பெலோபியன் ட்யூப் பிளாக்)
3. கரு முட்டை உருவாகாதது அல்லது சரியான வளர்ச்சி இல்லாத கரு முட்டை.
4. கருப்பை வாயில் தோன்றும் சளித்திரவம் விந்தணுவை கொன்று விடுவது.
5. கர்ப்ப காலத்தை முழுமை பெறச் செய்யத் தேவையான ஹார்மோன் சுரக்காதது.
6. பெண்ணின் வயது (34க்கு மேல் கரு முட்டை வாய்ப்பு குறையும்)ஆண்களுக்கு:

1. குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை.
2. மது, புகையிலை பொருட்கள், மோசமான உணவு முறையால் விந்தணு குறைபாடு.
3. துணையின் கருமுட்டை வெளியாகும் காலத்தில் சேராமல் இருப்பது.
4. உயிரணுக்களின் நகரும் சக்தி குறைவு (மொபிலிடி)
5. உயிரணுவை கொல்லும் புரதங்கள் அதிக சேர்க்கை.
6. உயிரணு வெளியேற்ற பாதையில் அடைப்பு.
7. விதை வளர்ச்சியின்மை.
8. விதைப் பையில் விபத்து, காயம் காரணமாக உயிரணு உற்பத்தி தடை.
9. விரைவீக்கம், காசநோய்.
10. அதிக வெப்பம், காற்று போகாத ஆடைகள்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை கொண்ட பெண்களுக்கான சிகிச்சை இது. இந்த ஹார்மோன் மருந்துகளால் கருமுட்டை உருவாக்கம் தூண்டப்பட்டு முழுமையான கருமுட்டை உருவாகச் செய்யும். இதன்மூலம் இயற்கையாக தம்பதியினர் குழந்தை பெற வழி ஏற்படும்.

செயற்கை விந்தளித்தல் (ஆர்டிபிஷியல் இன்செமினேஷன்):

இந்த முறையில் ஆணிடம் பெறப்படும் விந்தணுகளை சுத்தப்படுத்தி தரமான, உயிரோட்டமுள்ள, நகரும் தன்மை கொண்ட உயிரணுக்களை பெண்களின் கர்ப்ப பாதையில் செலுத்துவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்படும்.

இதில் விந்து திரவத்தின் தேவையற்ற, ரசாயன பொருட்கள் நீக்கப்படுவதால் உயிரணுக்களின் முன்னேறும் தன்மை கூடும். மலட்டுத்தன்மையை நீக்கும் மருந்துகளும் இந்த சிகிச்சையில் உதவும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு இப்படி நவீன முறைகளில் எளிதாக சிகிச்சை அளிக்க இப்போது நம்நாட்டில் பல மருத்துவமனைகள் உள்ளன. எனவே, மழலை செல்வம் இல்லாமல் தம்பதியர் ஏங்கும் கவலை இனியில்லை.

Related posts

உங்களுக்கு தெரியுமா காய்ச்சலுக்கான அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!

nathan

மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க வேண்டுமா?

nathan

அலுவலக காதலால் வேலையில் ஏற்படும் கவனக்குறைவு

nathan

உன்னை அறிந்தால் நீதான் கில்லி!

nathan

திங்கட்கிழமை டென்ஷனை குறைக்க 5 வழிகள்!

nathan

அடிக்கடி நெட்டிமுறிப்பவரா நீங்கள்..?

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்

nathan

இந்த குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு ரொம்ப அதிகமாம்…

nathan

குறைந்து வரும் பெண்கள்:திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகள்

nathan