30.6 C
Chennai
Saturday, May 18, 2024
1501052034 472 1
கால்கள் பராமரிப்பு

வீட்டில் தேன் இருந்தால் போதும் பாதவெடிப்பை சரிசெய்ய…!

பாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ஆரோக்கியமற்றதும் கூட. என்ன செய்தாலும் திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா? நீங்கள் கேள்விப்படாத இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்களேன். இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.

தேன் க்ரீம் செய்ய தேவையானவை:

தேன் – 1 கப்
பால் – 1 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன்

பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம் தேனை லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலக்கவும். பாதம் மிகவும் கடினமாக இருந்தால் ஆரஞ்சு சாறை அதிகப்படுத்திக் கொள்ளவும். பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.

வேப்பிலையை அரைத்து அதனுடன் பயித்தப் பருப்பு பொடி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து தினமும் பாதங்களில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சுருக்கங்களின்றி, வெடிப்பு மறைந்து பாதம் பளபளக்கும்.

கால் பக்கெட் வெதுவெதுப்பான நீரில் 2 கப் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து அதில் கால்களை அமிழுத்துங்கள். இதிலுள்ள அமிலத்தன்மை பாதத்திலுள்ள கடினத்தன்மையை அகற்றி மென்மையாக்கிவிடும். வெடிப்பும் வேகமாக மறைந்து விடும்.1501052034 472

Related posts

கால்களை பராமரிப்பது எப்படி? –அழகு குறிப்புகள்.,

nathan

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan

உங்கள் கால்களில் துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

nathan

மென்மையான கை கால்களின் அழகுக்கு

nathan

வலி மிகுந்த குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்று தெரியுமா?

nathan

பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?

nathan

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

உங்க கால் பாதங்களை கொஞ்சம் கவனியுங்கள்!

nathan

குளிர் காலத்தில் பாதங்களை நீங்க எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan