அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

tamilbeauty-tipsபொதுவாக பெண்கள் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள பல்வேறு வகையான மேக்கப்களை செய்து கொள்வர்.

இதற்காக பல கிரீம்களையும், வெவ்வேறு விதமான பவுடர்களையும் அவர்கள் நாடுவதுண்டு.

ஆனால் முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கை, கால்கள் பராமரிப்பதில் பெரும்பாலானோர் காண்பிப்பதில்லை.

இதனால் கை, கால்கள் கருப்பாகிவிடும். எனவே நம் கை, கால்களை பராமரிக்க சில எளிய முறைகளை பின்பற்றினாலே போதுமானது.

அழகான நகங்கள் வேணுமா?

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளிச்சென்று இருக்கும்.

இவ்வாறு மாத்திற்கு ஒரு முறை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

பட்டு போன்ற பாதங்களுக்கு

உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் மலர்களை தூவி கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பாதம் மிருதுவாக மாறிவிடும்.

பஞ்சு போன்ற விரல்களை பெறணுமா?

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, அதில் உப்பு கலந்து விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வெடிப்புகளுக்கு டாட்டா

பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

நகங்களை பராமிரக்க ஈஸி டிப்ஸ்

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கிவிடும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

Related posts

பாதங் கள் பாதுகாக்க‍ப்படுவதால் உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்!….

sangika

மீசை போன்ற ரோமங்கள் உதிர

nathan

தழும்புகள், தீக்காயத்தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

nathan

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குக

nathan

சூப்பர் டிப்ஸ்! தொப்பை போடுவதை தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்…!!

nathan

அழகுக்கு ஆப்பிள் பழம்

nathan

ஸ்க்ரப் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகி ஆரோக்கியம் கிடைக்கிறது

nathan

என்ன ​கொடுமை இது? “என்ஜாய் எஞ்சாமி” பாடலுக்கு ஆட்டம் போட்ட டிக் டாக் இலக்கியா.!

nathan

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்.

nathan