27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
10 1507614354 1
ஆரோக்கிய உணவு

வீட்டில் இதெல்லாம் இருக்கா? அப்போ உங்க கண்ணு சூப்பரா இருக்கும்!

ஆண் பெண் என இருபாலரும் தற்போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று துவங்கி விட்டார்கள். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் கண்ணுக்கு கீழே கருவளை வருவது சகஜமாகிவிட்டது

ஹார்மோன் மாற்றம், தூக்கமின்மை,ஸ்ட்ரஸ்,உணவுப்பழக்கம் மாற்றம் போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது. இது வந்தால் விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படும். இதனை தவிர்க்க வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களைக் கொண்டு சிறந்த தீர்வினைக் காண முடியும்.

தக்காளி : தக்காளிப்பழம் கருவளையத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி பூசி வர கருவளையம் மறைந்திடும். அதே நேரத்தில் சருமமும் சாஃப்ட்டாக இருக்கும். கண்களைச் சுற்றி தடவி பத்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட செய்யலாம்.

உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு பஞ்சில் ஒற்றியெடுத்து கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். அல்லது வட்டமாக உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளுங்கள் அதனை கண்களுக்கு மேலே வைத்திருந்தால் கூட போது, இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

டீ பேக் : மிகவும் எளிதான வழிமுறை இது. பயன்படுத்திய டீ பேக் கூட இதற்கு பயன்படுத்தலாம். டீ பேகை ப்ரிட்ஜில் வைத்து கூலாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கண்களின் மேல் பதினைந்து நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். கவனம் கண்களில் டீ பேகை வைத்திருக்கும் போது கண்களை திறப்பது, கூடாது. அமைதியாக கண்களை மூடியிருக்க வேண்டும். இதனை நீங்கள் தினமும் கூட செய்யலாம்.

பாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெயில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறது. இதனால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது தினமும் இரண்டு வேளை வீதம் பாதாம் எண்ணெயினால் கண்களைச் சுற்றி மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

வெள்ளரி : வெள்ளரி குளிர்ச்சி தரக்கூடியது. வெள்ளரியை வட்டமாக நறுக்கி அரை மணி நேரம் ப்ரீசரில் வைத்திடுங்கள். பின்னர் அதனை எடுத்து கொஞ்சம் குளிர்த்தன்மை குறைந்ததும் அதனை கண்களுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால் கண்கள் சோர்ந்து போயிருந்தால் ஃபிரஷ்ஷாக தெரியும்.

10 1507614354 1

Related posts

நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்

nathan

சளி, மாத விலக்கு, வாந்தி, கர்ப்ப காலங்களில் மருந்தாகும் பழச்சாறுகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! பாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா? இத படிங்க இனி தினமும் சாப்பிடுவீங்க..!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கடுகு எண்ணெயை அன்றாட சமையலில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உடல் நலத்தை காக்கும் பனை மரம்!!!

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

நல்லெண்ணெயை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

இறைச்சில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது

nathan

உங்களுக்கு தெரியுமா இடியாப்பம் அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் ?

nathan