25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
124
ஆரோக்கியம் குறிப்புகள்

பாம்பு கடிக்கு மருந்தாகும் தவசு முருங்கை…!

பாம்பு கடிக்கு மருந்தாகும் தவசு முருங்கை…!

124

பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டதும், கட்டிகளை கரைக்க கூடியதும், தோல்நோய்களைகுணப்படுத்தவல்லதுமான தவசு முருங்கையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தவசு முருங்கை. இது தும்பை பூவை போன்ற உருவமுடைய பூக்களை உடையது. இதற்கு புன்னாக்கு பூண்டு என்ற பெயரும் உண்டு. பாம்பு கடிக்கு மருந்தாகிறது. கருநாகம் கடிக்கு அற்புதமான மருந்தாகி விஷத்தை போக்குகிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வீக்கத்தை கரைக்க கூடியதாக விளங்குகிறது.
தவசு முருங்கை இலையை பயன்படுத்தி சளி, இருமல், மூச்சிரைப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
தவசு முருங்கை இலை, சுக்குப்பொடி, உப்பு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் எடுக்கவும். இதனுடன் சிறிது சுக்குப்பொடி, தவசு முருங்கை இலை சாறு 20 முதல் 30 மில்லி அளவுக்கு சேர்க்கவும். பின்னர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். இதை குடித்துவர சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னைகள் சரியாகும். சுவாசபாதையில் ஏற்படும் அடைப்பை போக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

துளசியை போன்ற அமைப்பை உடைய தவசு முருங்கையை கொண்டு கல் போன்ற கட்டிகளை கரைக்கும் மேல்பற்று மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: தவசு முருங்கை இலை, விளக்கெண்ணெய்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் தவசு முருங்கை இலை பசை சேர்த்து வதக்கவும். இதை கட்டிகளுக்கு மேல்பற்றாக போடும்போது கட்டிகள் கரைந்து போகும். வீக்கம், வலி மறையும். புண்கள் ஆறும்.

தவசு முருங்கை இலைகளை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, தொற்றை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
தவசு முருங்கை இலை, நல்லெண்ணெய்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் தவசு முருங்கை இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சிவடிகட்டி எடுக்கவும். இதை பூசி வர தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, தொற்று சரியாகும். அம்மை, அக்கி கொப்புளங்களுக்கு இது மேல்பற்றாக பயன்படுகிறது.

தவசு முருங்கை, கருநாக பாம்பு விஷத்தை முறிக்கிறது.
பாம்பு கடித்தவர்களுக்கு 15 மில்லி அளவுக்கு தவசு முருங்கை சாறு எடுத்து மணிக்கு ஒருமுறை, 12 மணி நேரம் கொடுத்துவர விஷம் முறியும்.
தவசு முருங்கை இலையை பசையாக்கி, பாம்பு கடிவாய் மீது பற்றாக போடும்போது விஷம் வெகு விரைவில் இறங்கும்.

சிறார்களுக்கு சளி இருக்கும்போது வரும் வாந்தியை நிறுத்தும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

வெள்ளை வெங்காய சாறு, இஞ்சி சாறு ஆகியவை சம அளவு சேர்க்கவும். இதனுடன் தேன் கலந்து அரை ஸ்பூன் அளவுக்கு கொடுத்துவர சிறார்களுக்கு ஏற்படும் சளி, மூச்சு திணறல், வாந்தி நிற்கும்.

Related posts

தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன் எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனைகள்..!

nathan

இந்த ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் உங்கள ஹீரோயின் மாதிரி ஜொலிக்க வைக்குமாம்

nathan

விட்டமின் இ கேப்சூலின் பயன்பாடுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு எப்படி !!

nathan

இவை எத்தைனை நன்மைகளை தருகின்றன தெரியுமா?….

sangika

சலிப்பான உங்க திருமண வாழ்க்கைய சுவாரஸ்யமாக்க

nathan

பேன் தொல்லையை போக்கும் எளிமையான கைமருந்துகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கால் மேல் கால் போடலாமா?

nathan