சித்தர்கள், ஆரோக்கிய வாழ்வைப்பற்றி சொல்லும்போதெல்லாம் மனம் + உடல் +ஆன்மா என்றே சொல்லிவிட்டிருக்கிரார்கள். ஆயுர்வேதம் சொல்வதும் அதுவே. பொதுவாக குழந்தை இல்லை என்று என்னிடம் சாதகம் கேட்க வருவோர்களுக்கு அயராமல் அடியேன் சொல்லும் விளக்கம்,
"உடலையும் மனதையும் தாண்டி கோள்கள் எதுவும் செய்யாது !" இந்த ஆன்மா நல்வினை தீவினைகளை இந்த இரண்டின் மூலமே அனுபவிக்கிறது. அப்படி இருக்க பெண் உடலையும் ஆண் மனதையும் திடப்படுத்திக்கொண்டால், குழந்தைபேறு மட்டுமல்ல, வேறு எந்த ஒரு விதியையும் நாம் மாற்றி அமைக்க முடியும் !!"
அந்த வகையில் பெண்களின் உடல் உறுதிக்கும், கர்ப்பப்பையினில் உண்டாகும் பிரச்சச்சனைகளுக்கும் தேவ மூலிகையாக விளங்குபன.. சதாவேரி, அசுவகந்தா மற்றும் திரிபலாதி யான நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் ஆகும்.
இவற்றையெல்லாம் எட்டித்தாவி மாதவிடாயினை சரி செய்து, குழந்தைபேறுக்கு தயார்படுத்தும் தேவ மூலிகை இந்த கொடிபசளை !
2009 ஒன்பதாம் வருடம்.. எனது மானசீக குரு அய்யா இயற்கை மருத்துவர் சண்முகவேல், கோயம்பத்தூர், அவர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்.. எதையோ பார்த்தவர், உடனே வண்டியை நிறுத்தச் சொன்னார். சரசரவென்று வண்டியிலிருந்து இறங்கியவர், அழகுக்காக வைக்கப்பட்டு பின்னர் ரோட்டோரம் வெட்டி வீசப்பட்ட ஒரு கொடிவை தனது மார்பில் அனைத்து தூக்கும் அளவிற்கு குழந்தையை தூக்குவது போல தூக்கினார் .. அசந்தே போய் விட்டேன்! அடியேனும் அவரும் சேர்ந்து அதை தூக்க முடியாமல் தூக்கி வந்து .. மருத்துவ மனையில் உள்ள அனைவருக்கும் சமைத்துப்போட்டார்.
ஒரு தம்பதியினர் ஐந்து வருடமாக குழந்தை இல்லை என்றும் அதனால் அவர்கள் குடும்பத்திலும் மனசங்கடம் உள்ளதெனவும் கேட்டு வந்தார்கள். உடனடியாக நான் சொன்னவிஷயம் கொடிபசலைதான் .. அதுவும் நண்பர் சொன்ன ஆலோசனைதான்.
மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் குறைந்தது ஒரு வாரம் இந்த கொடிபசலையை //வறுத்து அதன் பண்பைக் கொன்றுவிடாமல்// லேசாக பருப்புடன் வேகவைத்து அவியலாக செய்து சாப்பிட வைத்தோம் !! அடுத்த மதத்திலேயே கரு தங்கியது !!
இந்த சிகிச்சையை போன வருடம் கூட ஒரு தம்பதிக்கு வேலூரில் சொல்லி போன மாதம் குழந்தை பிறந்துள்ளது !!
சாதாரண பாலக் கீரையைப் போலவே சுவை உடைய இந்த மா மூலி யாருக்காவது வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தினால் சந்தோஷமே !
உடலையும் மனதையும் தொடாமல் குழந்தை பிறக்காது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, சாமியையோ அல்லது சாமியாரையோ நாடாமல், உடலையும் மனதையும் உறுதிப்படுத்தி நலமுடன் வாழலாமே!