உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் வைத்திருப்பதால் அதில் முளைக்கட்டி விடுவதோடு பச்சை நிறத்தில் மாறுகிறது.
இத்தகைய முளைக்கட்டிய உருளைக்கிழங்குகளில் சாக்கோனைன் (aconChine) மற்றும் சாலனைன் (Solanine) போன்ற நச்சுப் பொருட்கள் உண்டாகிறது.
இவ்விரு நச்சுப் பொருட்களில் சாலனைன் தான் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. இவ்வகை நச்சுக்கள் குடல் பாதையில் எரிச்சலை உண்டாக்கி, பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது.
அதோடு, முளை விட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப் பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்காக மாறுகிறது.
எனவே தோலில் பச்சை நிறத்திட்டுகள் மற்றும் மேல்தோல் சுருங்கிய, முளைக்கட்டிய உருளைக்கிழங்குகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது.
முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஏற்படுத்தும் ஆபத்து?
பச்சைநிறத்திட்டுகள் உண்டாகிய உருளைக்கிழங்கில் கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) எனும் நச்சுக்கள் இருப்பதால், தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கருவுற்ற பெண்கள் சாப்பிட்டால், கருச்சிதைவை ஏற்படுத்துவதுடன், பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.