25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201708261012148678 1 Fatherthrowingson. L styvpf
மருத்துவ குறிப்பு

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்
மனிதனுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அதனால்தான் சில சமயம் தலையில் ஏற்படும் சிறு காயம் கூட மனித உயிரைப் பறித்து விடுகிறது. இதற்கு மூளை பாதிக்கப்படுவதே காரணம். ஆனால், இப்படி காயம் எதுவும் இல்லாமல் மூளை பாதிக்கும் பருவங்கள் இரண்டு முறை மனித வாழ்நாளிலே வருவதுண்டு. ஒன்று முதுமைப் பருவம். மற்றொன்று குழந்தைப் பருவம்.

சாதாரணமாக தலையின் மண்டை ஓட்டுக்குள் சிறிதுகூட அங்கும் இங்கும் அசையாதபடி மூளை, கச்சிதமாக பொருந்தியிருக்கும். ஆனால், வயது ஆக ஆக முதுமையின் காரணமாக மூளையின் அளவு கொஞ்சமாக சுருங்கக்கூடும். இந்த நிலையில் கபாலத்துக்குள் மூளை உரசும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி உரசும்போது மூளையின் ரத்தக்குழாயில் கீறல் விழுந்துவிடும்.

அதன்வழியாக கசியும் ரத்தம் உறைந்து சில மாதங்களுக்குள்ளாகவோ, சில நாட்களிலோ, ஏன் சில மணி நேரத்திலோ அல்லது உடனடியாகவோ உயிரைப் பறித்துவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஸப்டியூரல் ஹெமடோமா’ என்று அழைக்கிறார்கள்.

நன்றாக பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென்று மரணத்தை சந்திப்பது இப்படித்தான். சரி, இப்போது குழந்தைகளுக்கு வருவோம். குழந்தைகள் இதில் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? வயதானவர்களுக்கு மூளை சுருங்குவதால் இந்த பாதிப்பு என்றால் குழந்தைகளுக்கு மூளை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அதன் மூளை மண்டை ஓட்டுக்குள் உரசும் நிலையிலேயே இருக்கும்.

குழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாக சிரிக்கும். அதே வேளையில் சில குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு ஏற்படுவதுபோல் மூளை உரசல் ஏற்பட்டு பாதிக்கப்படும். இதை ‘ஷேக்கிங் ஹெட் இன்ஜுரி’ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது ‘தலை குலுக்கு காயம்’ என்று பெயர்.

குழந்தைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை.

சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவுதான், அதன்பின் திரும்ப விழிக்காது. அதனால் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.
201708261012148678 1 Fatherthrowingson. L styvpf

Related posts

சூப்பர் டிப்ஸ்! தினமும் காலையில தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களுக்கு மருந்தாகும் மரிக்கொழுந்து…..!

nathan

பயணமும் சட்டமும் பாதுகாப்பை தருகிறதா?

nathan

டயாபடீஸ் தடுக்க 8 ட்ரிக்ஸ்!

nathan

ஸ்கூல் வேனை குழந்தைகள் சிரித்தபடி வரவேற்க இதெல்லாம் செய்யலாம்!

nathan

தன்ணுணர்வு நோய் என்றால் என்ன? குழந்தைகளுக்கு அறிகுறிகள் என்ன?

nathan

மார்பு சளி குறைய யூகலிப்ட்ஸ் தீர்வு

nathan

அவசியம் இல்லாமல் அவசரம் வேண்டாம்!

nathan

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

nathan