மருத்துவ குறிப்பு

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது உங்களுக்கு தான்; 9 காரணங்கள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

1 frequent urinationஅடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு காரணம் என்ன?

உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால், ஒருவித பதட்ட உணர்வு ஏற்படுவதுடன், மைய நரம்பு மண்டலம் சிறுநீர்ப்பையில் ஒருவித தூண்டலை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

உடலில் தைராய்டு பிரச்சனை இருந்தால், அதனால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் உண்டாகும்.

சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.

நம் உடலில் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து விட்டால், அது சிறுநீரகத்தில் தேங்கும். அதனால் சிறுநீரின் அளவு குறைந்து, அடிக்கடி சிறுநீரை வெளியேற்ற நேரிடும்.

சிறுநீரகத்துடன் நரம்பு தொடர்புடையதால், நரம்பு பக்கவாதம் பிரச்சனை இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.

ஆல்கஹாலில் பீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீர் அடிக்கடி வெளியேறும். ஏனெனில் ஆல்கஹால் உள்ள DNH எனும் அமிலம் வெளியீட்டின் போது இடையூறை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை உண்டாக்கும்.

பெண்களின் உடலிலேயே மிகப் பெரிய ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் போது, அதாவது இறுதி மாதவிடாயின் அறிகுறியாக, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் உண்டாகும்.1 frequent urination

கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் உள்ள குழந்தை வளர்வதால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளியேறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button