32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
28 1501232220 5
முகப் பராமரிப்பு

பளீச் முகத்திற்கு இத மட்டும் யூஸ் பண்ணா போதும்!

முகத்தை பராமரிக்க ஏகப்பட்ட டிப்ஸ்கள் இருந்தாலும் நம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நம் அழகை மெருகேற்ற எக்கச்சக்கமான டிப்ஸ்கள் இருக்கிறது. தக்காளி, தக்காளி இல்லாமல் ஒரு நாளும் சமையல் ஓடாது. எப்போதுமே வீட்டில் இருக்கும் தக்காளியைக் கொண்டு அழகை பராமரிக்க சில சூப்பர் டிப்ஸ்

எண்ணைப்பசை : பழுத்த தக்காளியை பசைப்போல அரைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

தழும்புகள் : தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

பொலிவு : ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகம் பொலிவு பெறும்.

சன் டேன் : வெளியில் அதிகம் அலைபவர்களுக்கு சன் டேன் வரும். அதனை நீக்க தக்காளிப்பழத்தை அரைத்துக் கொள்ளுங்கள். அந்த கலவையுடன் சிறிதளவு தயிர் சேர்த்து கருமை அடைந்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்தால் சன் டேன் மறைந்திடும்.

பளீச் முகத்திற்கு : தக்காளிச்சாறு இரண்டு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்ப்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து அது காய்ந்ததும் கழுவி விடலாம். இப்படிச் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி பளிச் சென்று தெரியும்.

ஆரோக்கியம் : வறண்டிடாமல், ஆரோக்கியமான சருமமாக தெரிய தக்காளிச் சாறுடன் இரண்டு டீ ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர நல்ல பலன் கிடைக்கும்.

28 1501232220 5

Related posts

பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?

nathan

உங்க முகத்தில் உள்ள மேடு, பள்ளங்கள் முழுமையாக மறைய சில டிப்ஸ்

nathan

முக அழகை கெடுக்கும் தோல் சுருக்கத்தை போக்க சில வழிகளை பார்க்கலாம்…

nathan

சூப்பர் டிப்ஸ்! சருமத்தைப் பொலிவாக்க இது ஒன்று போதுமே..!

nathan

நீங்கள் ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா? அப்ப இத படியுங்க…

nathan

மூக்கின் மேல் படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்

nathan

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தர இதை செய்து வாருங்கள்……

sangika

கருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்…

nathan