சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்கு, உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு போன்றவற்றை சேர்த்து கொள்வதும் நலம். உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்கலாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி, ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்கலாம்.
பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். புரதம், மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள். எனவே அவர்கள், நிறைய புரத உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊற வைத்த, முளைகட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத உணவு ஆகும். சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் ரத்தஅழுத்த கட்டுப்பாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்த வேண்டும். அதிக நீர், உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும். நாம், தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், ரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
Related posts
Click to comment