28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
உடல் பயிற்சி

உடற்பயிற்சியின் போது ஆண்கள் செய்யும் சில தவறுகள்

உடற்பயிற்சியின் போது ஆண்கள் செய்யும் சில தவறுகள்
உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்க தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது.உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் எடை பயிற்சியுடன் தான் பெரும்பாலும் தொடர்பில் உள்ளது. பல ஆண்கள் கண்ணாடி முன் அழகாக தெரிவதற்காக தான் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.அதனால் அழகாக தெரிவதற்கு தேவைப்படும் தசைகளை மேம்படுத்த, அதற்கான பயிற்சிகளில் மட்டுமே அவர்கள் ஈடுபடுவார்கள். பல ஆண்களும் தன் கெண்டை தசைகளை வளர்க்க கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவர். சில சமயம் தாங்கள் தூக்க வேண்டிய எடையின் அளவிற்கு மேலாகவும் தூக்க முற்படுவார்கள்.இன்னும் சில சமயம் தவறான வகை எடையை தூக்க முற்படுவார்கள் அல்லது தங்களின் தேவைக்கேற்ப தவறாக பொருத்தப்பட்ட எடைகளை தூக்குவார்கள். சில நேரம், சரியான பயிற்சியாளர் மூலம் பயிற்சியில் ஈடுபடாததால் கூட இந்த தவறுகள் ஏற்படலாம். கடைசியாக உங்கள் வயதை மீறிய பயிற்சிகளில் ஈடுபட்டாலும் தவறுகள் நேரிடலாம்.

தசைகளுக்கு முதலில் ஒரு வார்ம் அப் கொடுப்பது மிகவும் முக்கியமானது. அதனால் ஜிம் சென்ற உடனேயே வார்ம் அப்பில் ஈடுபடாமல் நேரடியாக பயிற்சியை தொடங்காதீர்கள். இவ்வகை பயிற்சி தவறுகளில் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. வார்ம் அப் செய்வதை போலவே தசைகளை ஸ்ட்ரெச் செய்வதும் முக்கியமானதே.

ஆனால் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். வார்ம் அப் என்றால் உங்கள் தசைகளில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவது. ஆனால் ஸ்ட்ரெச் செய்வது என்றால் தசைகளை தளர்த்துவது. ஸ்ட்ரெச் செய்யும் போது மெதுவாக செய்ய வேண்டும். பலர் நாள் கணக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் வயிற்று பகுதியின் கொழுப்பு குறைவதே இல்லை.

காரணம் உடற்பயிற்சியின் போது வயிற்றை கொண்டு எழுந்திருக்காமல், தங்களின் தோலை கொண்டு எழுந்திருப்பார்கள். மனதை சரிவர செலுத்தாமல் உடற்பயிற்சி செய்வதற்கு இது ஒரு எடுத்துகாட்டாகும். பல ஆண்கள், ரித்திக் ரோஷன், சில்வெஸ்டர் ஸ்டாலன் அல்லது அர்னால்ட் என தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை பின்பற்றி, அவர்களை போல் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

உங்கள் உடலின் திறனை பொறுத்தே பயிற்சிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் அவர்களை அப்படியே பின்பற்ற நினைப்பது எப்போதும் சாத்தியமாகாது. ஒரு மாதமாக செய்து வரும் பயிற்சிகளை தொடரும் போது, உங்கள் உடல் ஒரே மாதிரியான பயிற்சிக்கு மட்டுமே வளையும். எந்த ஒரு பயிற்சிக்கும் உங்கள் உடல் ஒத்துழைக்க வேண்டும்.

அதனால் உங்கள் உடற்பயிற்சி வகைகளை மாற்றிக்கொண்டே இருங்கள். உடற்பயிற்சிகளை வேக வேகமாக முடிக்க வேண்டும் என்று நீங்கள் செயல்பட்டால், நீங்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. ஒரே பயிற்சியை வேகமாக செய்யும் போது, உங்கள் இருதய துடிப்பு அதிகரித்து, உங்கள் இருதயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் 35 வயது உடையவராக இருந்த போது, 500 பேருக்கு சமமான கட்டமைப்பில் இருந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு 40 வயது ஆகி விட்டதென்றால், உங்களது வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் வயதை மறந்து மிகவும் கடினமான பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

சற்று ஓய்வு கொள்வதை தவிர்த்தல் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் எப்படி வார்ம் அப் செய்வது அவசியமோ, அதே போல் பயிற்சிக்கு பின், சற்று ஓய்வு எடுப்பதும் முக்கியம். உங்கள் உடலை சாந்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் தசைகள் இளைப்பாறாமல் வறண்டு போகும்.

Related posts

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் மெல்லோட்டம்

nathan

பைக் ஓட்டினா… பயிற்சி செய்யுங்க!

nathan

எந்த காரணங்களுக்காக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கலாம்

nathan

தொப்பை குறைய 4 வழிகள் !

nathan

உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது

nathan

இடுப்பு பகுதி சதையை குறைக்கும் சூப்பரான பயிற்சி

nathan

உடல் எடை குறைத்து, மெல்லிய உடல் பெற உதவும் சிறந்த காம்போ உணவுகள்!!

nathan

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும பயிற்சி

nathan

ஜிம்முக்கு போறதுக்கு முன்னாடி இந்த 7 விஷயங்களை படிச்சுட்டு போங்க!

nathan