201708181118500210 3 major issues problem of women Infertility SECVPF
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமான 3 முக்கிய பிரச்சனைகள்

குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு… பெரும்பாலும் நம்மிடமே இருக்கிறது. நம்முடைய உடல்நலத்தை தகுந்தபடி பேணுவதோடு, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் அக்கறை காட்டினால், இத்தகைய பிரச்னைகளில் இருப்பவர்களில் 80 சதவிகிதத்தினருக்கும் மேல், குழந்தைப்பேறு அடைய முடியும்.
201708181118500210 3 major issues problem of women Infertility SECVPFபெரும்பாலான கருத்தரிப்பு பிரச்னைகளை சிகிச்சையின்றியே தீர்த்துக்கொள்ளலாம். கருத்தரித்தலுக்கான முக்கியக் காரணமான மாதவிடாய் சிக்கல் ஏற்பட, நீர்க்கட்டிகளே பிரதான காரணம். சத்து இல்லாத ‘ஜங் ஃபுட்’ உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமான இனிப்புகள் உண்பது, எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடப்பது, நேரங்காலமில்லாமல் உண்பது, உரிய நேரத்தில் உண்ணாமல் இருப்பது… இதுபோன்ற காரணங்களால் நீர்க்கட்டிகள் ஏற்படலாம். தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் சேர்த்து, முறையாக யோகா செய்தாலே போதும்… நீர்க்கட்டிகளைத் தவிர்க்கலாம். பெற்றோர்களே… இதை கண்டிப்பாக உங்கள் பெண் பிள்ளைகளிடம் அறிவுறுத்துங்கள்.

ஏற்கெனவே நீர்க்கட்டி இருப்பவர்கள், அதிலிருந்து குணம்பெற தினமும் 45 நிமிடம் வேகமான நடைபயிற்சி செய்யலாம்; 30 நிமிடங்கள் யோகா செய்யலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதுடன் சிறுதானியம், கீரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும் இனிப்பையும் அறவே தவிர்க்க வேண்டும். சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பவருக்கு சர்க்கரை மற்றும் தைராய்டு பிரச்சனை இருக்கும்பட்சத்தில், சுயமருத்துவமின்றி சித்த மருத்துவரை அணுகி தீர்வுகாண வேண்டும்.

அடுத்த பிரச்சனை, சினைப்பை அடைப்பு. இதற்கு மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே, மற்ற சிகிச்சைகள் எடுப்பதற்கு முன் கவுன்சலிங் எடுத்துக்கொண்டு, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே, அடைப்பு தானாக நீங்கிவிடும். அதேபோல் வெள்ளைப்படுதல் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக மாதவிடாய்க்கு 4 நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், துர்நாற்றம் வீசக்கூடிய அளவுக்கு அடிக்கடி வந்தாலோ… பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

201708181118500210 1 Infertility. L styvpf

இதிலிருந்து விடுபட, வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு வைத்து சாப்பிடலாம். வெள்ளைப்பூசணி சாறு எடுத்துக்கொள்வதும் நல்லது. கண்டிப்பாக கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். சோற்றுக்கற்றாழை சாற்றை, உணவுக்கு முன் காலையில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சோற்றுக்கற்றாழை லேகியம் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்று இருக்கும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகுதல் நல்லது.

கருமுட்டையானது சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவையும் பெண்களைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை, விந்தணு உற்பத்தி எண்ணிக்கை குறைவு, விந்தணு உற்பத்தியில்லாத ஆண்மைக் குறைவு, விந்தணுவின் இயக்கத்தில் குறைபாடு ஆகியவை முக்கியக் காரணங்கள். ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் அருந்த வேண்டும். பயறு வகைகளையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Related posts

தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?

nathan

சூப்பர் டிப்ஸ்! தூங்குவதற்கு முன் படுக்கை அறையில் இந்த எண்ணெய் தேய்த்து பாருங்க…!!

nathan

இலவங்கப்பட்டை பற்சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

வேகமாக அதிகம் சிரமம் தெரியாமல் உடல் எடையை குறைக்க!…

sangika

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

nathan

ஹேர் மாஸ்க் உங்க அனைத்து முடி பிரச்சனைகளை சரிசெய்யுமாம்!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க…செல்போன் கதிர்வீச்சினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சில வழிகள்!!!

nathan

உடல் எடை கூட… உணவோடு வெண்ணெய்!

nathan

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்

nathan