23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Aries1451996027
மருத்துவ குறிப்பு

உங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா?

உலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும். பெண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு விரும்புவார்கள். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் இராசியின் படி என்ன குணம் இருக்கிறது என்பதை இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
Aries1451996027
மேச ராசி பெண்கள்
மேச ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு கிரியேட்டிவான சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள். இவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனவே இவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு போரடிக்காது.
11 1502448095 3 1
ரிஷப ராசி பெண்கள்
இவர்களுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் இருக்கும். ஆனால் உங்களிடன் மனம் திறந்து பேச ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். இனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும், புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் ஒரு தலைமை குணம் அடிக்கடி வெளிப்பட்டாலும் கூட, இவர்கள் உங்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள்.
11 1502448095 3
மிதுன ராசி பெண்கள் இவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மனநிலையை பொருத்து ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். இவர்களது உண்மையான முகம் மிக விரைவிலேயே வெளிப்பட்டுவிடும். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். பாசமானவர்களாக இருப்பார்கள். உங்களது உதவி செய்ய விரும்புவார்கள்.
11 1502448111 4
கடக ராசி பெண்கள்
கடக ராசி பெண்கள் ரொமேன்டிக் ஆனாவர்களாக இருப்பார்கள். இவர்கள் மீது யார் மிகவும் பாசமாக இருக்கிறார்களோ, இவர்களை யார் நன்றாக கவனித்துக்கொள்கிறார்களோ அவள் மீது கடக ராசி பெண்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள். இவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதே சமயம் அமைதியானவர்கள், வெட்கப்படுபவர்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.
11 1502448122 5
சிம்ம ராசி பெண்கள்
சிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கும். உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் இவர்களது தோளில் சாய்ந்து அழலாம் என்ற அளவுக்கு இவர்களிடன் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். இவர்களிடன் நீங்கள் பொய் சொல்வதாக இருந்தால் சிறிய பொய்களை மட்டுமே சொல்லுங்கள், ஏனெனில் இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
11 1502448132 6
கன்னி ராசி பெண்கள்
கன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தவர்களின் கருத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். எனவே நீங்கள் தான் அவர்களை பெருமையாக உணர வைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் உண்மையாகவே பெருமைக்குரியவர்களாக தான் இருப்பார்கள்.
11 1502448142 7
துலாம் ராசி பெண்கள்
துலாம் ராசி பெண்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடன் சரிசமமாக பழகுவார்கள், அவர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்கள் ரொமேந்டிக்கானவர்களாகவும், ஆச்சரியங்களை தருபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் உண்மையாக காதலிப்பார்கள்.
11 1502448157 8
விருச்சிக ராசி பெண்கள்
விருச்சிக ராசி பெண்கள் பெருமைக்குரியவர்கள். தங்களது துணையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள். ஒருவர் மீது இவர்கள் காதலில் விழுந்து விட்டால், அவர்களின் சந்தோஷத்திற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலித்தால் நீங்கள் இன்ப அதிர்ச்சியில் எப்போதுமே மூழ்கி இருப்பீர்கள்.
11 1502448167 9
தனுசு ராசி பெண்கள்
தனுசு ராசி பெண்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இவர்கள் சற்று எளிதிலேயே காதலில் விழுந்து விடுவார்கள். தனக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்துவிடுவார்கள். இவர்களுக்கு திறமைகள் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சுதந்திரம் தரக்கூடிய ஆண்களை தான் இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் அந்த அளவுக்கு ரொமேன்டிக் ஆனவர்கள் இல்லை என்றாலும், இவர்களது சுதந்திரமாக செயல்படும் திறனை கண்டு நீங்கள் இவர்களை காதலிப்பீர்கள்.
11 1502448181 10
மகர ராசி பெண்கள்
மகர ராசி பெண்கள் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும், இவர்கள் அனைவருடனும் நட்புடன் பழகுவார்கள், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். தன்னை யாருக்கு பிடிக்கிறதோ அவர்களை இவர்களுக்கும் பிடிக்கும். இவர்கள் நீண்ட நாள் உறவில் நிலைத்திருப்பார்கள்.
11 1502448190 11
கும்ப ராசி பெண்கள்
கும்ப ராசி பெண்கள் தங்களது பெற்றோர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள். இவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். மேலும் சிம்பிளாகவும் இருப்பார்கள். இவர்களது எளிமை குணத்தை கண்டு அனைவரும் இவர்களை பாராட்டுவார்கள். இவர்களது மன புண்படும்படி நடந்து கொள்ளாதீர்கள். பின்னர் இவரது இதயத்தை மீண்டும் வெல்வது மிக கடினம்.
11 1502448205 12
மீன ராசி பெண்கள்
மீன ராசி பெண்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடன் நீங்கள் மரியாதையாகவும், நன்றாகவும் நடந்து கொண்டால் அவர்களும் உங்களிடன் அவ்வாறே நடந்துகொள்வார்கள். நீங்கள் அவர்களிடன் தவறான நோக்கத்துடன் நெருங்கினால், அதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். எனவே நல்ல எண்ணத்துடன் பழகுங்கள். அவர்களும் உங்களுக்கு நல்லவர்களாக நடந்து கொள்வார்கள்.

Related posts

வீட்டுக்கு தேவை வெளிச்சம்

nathan

இத்தனை நாளா இது தெரியாம போச்சே முல்லையில் இவ்வளவு சிறப்பா?

nathan

எலுமிச்சை, புதினா, சோம்பு, வெட்டிவேர்..! அரிய எண்ணெய்களின் அபார பலன்கள்

nathan

கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள்

nathan

ஆஸ்துமாவுக்கு எளிய சித்த வைத்தியம்

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஆபத்தான அறிகுறிகள்?

nathan

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

nathan

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் இந்த 8 அறிகுறிகள் உடலில் காணப்படும்

nathan

கிடுகிடுவென உங்கள் எடையினைக் குறைக்கலாம்! இரவு மட்டும் இதை குடிங்க…

nathan