25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1501829802 1634
மருத்துவ குறிப்பு

பாட்டி வைத்தியத்தின் மூலம் நோய்களுக்கான தீர்வுகள்!

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும்.

1. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

2. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

3. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

4. வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

5. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

6. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

7. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

8. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

9. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

10. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.1501829802 1634

Related posts

கட்டாயம் இதை படியுங்கள்..குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள்

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. ரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்

nathan

மொபைல் போனில் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ்…!

nathan

கர்ப்ப கால பெண்களுக்கு இடுப்பு வலியை குறைக்க வழிகள்

nathan

மார்பக அளவைப் பெரிதாக்கும் சில சமையலறை மூலிகைப் பொருட்கள்!

nathan

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும், கவனமாக இருங்கள்!

nathan

அலுவலக காதலால் வேலையில் ஏற்படும் கவனக்குறைவு

nathan

தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..

nathan