திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.
இதில் எந்த திராட்சையாக இருந்தாலும் அது பல நோய்களை குணப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.
திராட்சையில் உள்ள சத்துக்கள்?
திராட்சை பழத்தில் சர்க்கரைச்சத்து, கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
திராட்சை பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது?
திராட்சை, மாம்பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதால் அதிக புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்புத் தன்மை கிடைக்கும்.
எனவே இப்பழங்களை இரவில் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதனால் துக்கமின்மை ஏற்படும்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை பழம் மற்றும் மற்ற பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
பழங்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
திராட்சை முதல் அனைத்து வகையான பழங்களையும் இரண்டு வேளை உணவு சாப்பிடுவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம். இதனால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை தடுக்கும்.
திராட்சை பழத்தின் நன்மைகள்?
தினமும் திராட்சை சாறு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
திராட்சை பழத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே இதை தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைகிறது.
வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் அளிக்க உதவுகிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கும், எடை குறைவாக மற்றும் உடலில் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்டால் எனும் அமிலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, உடலில் தேவையில்லாம்ல ஏற்படும் கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
பசி உணர்வு இல்லாமல் உள்ளவர்கள் அடிக்கடி திராட்சை சாப்பிட்டால் அது பசியை தூண்டிவிடும். அதனுடன் வயிறு மற்றும் குடலில் உள்ள கோளாறுகளை குணமாக்க உதவுகிறது.
ஒரு கைப்பிடி அளவு திராட்சையை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சுருக்கம் நீங்கி சருமம் பொலிவாகும்.