-வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை- 3 கோப்பை அளவு,
நல்லெண்ணெய்-1 லிட்டர்.செய்முறை:-
• இந்த கீரையை இடித்து அதன் சாற்றை, சுத்தமான ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
• அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றி காயவிட வேண்டும். எண்ணெய் சற்று சூடானதும், அதில் கீரை சாற்றை சேர்க்க வேண்டும்.
• சிறிது நேரம் கழித்து நன்றாக சூடானதும், பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். ஆறிய பின்னர், கண்ணாடி பாட்டிலில், கீரை எண்ணெயை ஊற்றி வைய்யுங்கள். பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்த வேண்டாம்.
• இந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து, குளித்து வந்தால் உடலுக்கு நல்லது. தலைமுடி உதிர்வதை தடுக்கும். பித்த நரையை போக்கும் வல்லமையை கொண்டது. கண், காது, மூக்கு மற்றும் தலை நரம்புகளை எல்லாம் வலுவடையச் செய்யும்.
வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையானது உடல் சருமத்தை மிருதுவாக்கக் கூடியது. எனவே அதன் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். பற்களை பலப்படுத்தும் தன்மையும், ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும் இந்த கீரைக்கு உண்டு.