24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1501317430 7081
சிற்றுண்டி வகைகள்

ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா…?

தேவையான பொருட்கள்:

மைதா சப்பாத்தி – 4
மீன் – 500 கிராம்
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை
எலுமிச்சைபழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 3
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

பிறகு உதிர்த்த அந்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, அதில் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் மற்றம் பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும். வதக்கியதும் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும். பின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் ரோல் தயார்.1501317430 7081

Related posts

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

சோயா சன்க்ஸ் சாண்ட்விச்

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

சத்தான கோதுமை ரவா தோசை

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீஸ் கட்லெட்

nathan

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan