26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
20 1500550504 3
மருத்துவ குறிப்பு

மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா.?

சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ தொடர்ந்து வாசியுங்கள்.

தவறு : மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவது தான் நல்லது. அதை இரண்டாக உடைப்பது தவறான செயல். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடும்.

ஆலோசனை : மாத்திரைகளை இரண்டாக உடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மருத்துவரிடம் அதனை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாத்திரைகளின் அளவு வேறுபடும் போது அது உடலுக்கு பக்க விளைகளைக் கூட ஏற்படுத்தலாம். இதயம்,ஆர்த்த்ரைட்டீஸ்,பிரசர், கை நடுக்கத்திற்கான மாத்திரைகளை சாப்பிடுவோர் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

மாத்திரைகள் : ஒவ்வொரு மாத்திரையின் தயாரிப்பும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும். நாம் இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் தான் உடைபடும் என்றும் அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது.

கோட்டிங் : வீரியமிக்க மருந்துகள் வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும். உடைக்கும் போது வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நம் உள்ளுறுப்புகளில் செல்வதால் இதனால் வேறு சில உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

கருவி : மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அவை உடைக்க தகுந்த ஆயுதங்களை கையாளுங்கள்.கையாலோ, கத்தியாலோ அல்லது வேறு பல கூர்மையான ஆயுதங்களாலோ மாத்திரைகளை உடைக்க கூடாது. மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். மாத்திரைகளை உடைக்க பயன்படுத்தும் கருவியில் உள்ள அழுக்குகள் மாத்திரைகளில் பட்டு விடும் என்பதாலும் இவற்றை தவிர்ப்பது நலம்.

கவனம் : மாத்திரைகள் சில ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை இரண்டாக்க போகிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்ப்பட்ட வடிவங்களில் உடைத்து மாத்திரையின் முக்கிய வேலையே சிதைந்துவிடும். மாத்திரைகளை இரண்டாக உடைப்பதை தவிர்த்திடுங்கள்.

20 1500550504 3

Related posts

இளம் பெண்களை தாக்கும் சிறுநீரகத் தொற்று

nathan

உங்களுக்கு தொியுமா ? எந்தவொரு நச்சு கூறுகளையும் உடலிலிருந்து அடித்து விரட்டும் இயற்கை பானம்!

nathan

நக சுத்தியை குணப்படுத்த இதோ எளிய பாட்டி வைத்திய முறைகள்..!தெரிஞ்சிக்கங்க…

nathan

“வெரிகோஸ் வெயின்” (varicose veins) ” பிரச்னைக்கு தீர்வு…

nathan

அரிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனியுங்கள் இனி…

sangika

உள்காய்ச்சல் ஏறுதா?

nathan

கவணம் விதைப்பை புற்று நோயின் ஆரம்ப கால அறிகுறி இப்படியும் தெரியலாம்!

nathan

மகளிர் தினம் தோன்றிய வரலாறு

nathan

உங்களுக்கு தெரியுமா எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ். எப்படி செய்வது?

nathan