28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1500716371 2999
சைவம்

சுலபமான சுவையான சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!

சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெடிமேட் சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம், புதிதாக வறுத்துத் திரிக்கும் போது தனியாவின் வாசம் சாம்பாரின் மணத்தைக் கூட்டும்.

* வறுத்துத் திரிக்கக் கொடுத்தத் தேக்கரண்டி அளவை கப் அளவாக மாற்றிச் சிவக்க வறுத்துத் திரித்துக் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் சாம்பார் செய்வது சுலபம்.

* ஒரே காய் போட்டு சாம்பார் செய்யாமல் பலவிதக் காய்கள் போட்டு செய்வதால் உடலிற்குச் சத்துக்கள் கிட்டும்.

* உப்பு போட்டு ஊற வைத்து, காய வைத்த மாங்காய்த்துண்டுகளைச் சாம்பாரில் போட அதுவும் தனிச் சுவையைக் கொடுக்கும்.

* காரம் அவரவருக்குத் தக்கக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.

* புளித்தண்ணீரில் காய் வேக நேரமெடுக்கும் என்பதால் அதிகமாகக் காய்கள் போட்டு சாம்பார் செய்யும் போது உப்பு, மஞ்சள் பொடியிட்டு காய்கள் வெந்த பிறகு புளித்தண்ணீரை விடலாம்.

* முதலிலேயே தாளித்துக் கொண்டு அதிலே காய்களை வதக்கிச் சாம்பார் செய்யலாம், இவ்வகையில் சாம்பாருக்கென்று தனியே தாளிக்கும் வேலையும் பாத்திரமும் மிச்சமாகும்.

* மேற்கூறிய வகையில் பாசிப்பருப்பு சாம்பாரையும் செய்து பார்க்கலாம், அல்லது பாசிப்பருப்பு 1/2 கப், துவரம்பருப்பு 1/2 கப் என்ற விகிதத்தில் செய்து பார்க்கலாம்.

* வறுத்துத் திரிக்கும் போது 1 தேக்கரண்டி அரிசியையும் வறுத்துத் திரித்தால் சாம்பார் கெட்டியாக வரும்(துவரம்பருப்பு குறைவாக இருக்கும் போது தண்ணியாகக் குழம்பு வைப்பதற்குப் பதிலாக பொடி செய்யும் போது அரிசியையும் வறுத்துத் திரித்துச் செய்ய கெட்டியாக வரும்.1500716371 2999

Related posts

பனீர் 65 | Paneer 65

nathan

உருளைக்கிழங்கு பொடி சாதம்

nathan

சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan

சோயா பிரியாணி

nathan

முள்ளங்கி பருப்பு கறி

nathan

முருங்கை பூ பொரியல்

nathan

கீரையை எப்படிப் பார்த்து வாங்குவது?

nathan

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி

nathan